Tuesday, August 2, 2011

உலகின் மிகப் பெரிய பூஞ்சை சீனாவில் கண்டுபிடிப்பு.


காளான் போன்ற பெரும் பூஞ்சை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பூஞ்சை 10 மீற்றர் நீளமும், 80 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது.
இந்த ராட்சத பூஞ்சை 20 ஆண்டுகள் வயது உடையதாகும். 2008ம் ஆண்டு சீனாவின் புஜியான் மாகாணத்தில் புதிய வகை பூஞ்சை பதிவு செய்யப்பட்டது.
இந்த பூஞ்சையை ஷென்யாங்கில் உள்ள சீன அறிவியல் கல்வி அமைப்பின் உயிரி பதப்படுத்துதல் துறை பேராசிரியர் யுசெங் மற்றும் அவரது உதவியாளர் மருத்துவர் குல் பதிவு செய்துள்ளார்.
மிகப்பெரிய பூஞ்சையை இவர்கள் 2010ம் ஆண்டு கண்டுபிடித்தனர். பூஞ்சைகள் இவ்வளவு பெரியதாக வளருமா என அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மிகப்பெரும் ராட்சத பூஞ்சை பிராக்கட் பூஞ்சை என அறியப்படுகிறது.
ராட்சத வடிவ பூஞ்சை மரத்திற்கு அடியே வளர்ந்து உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூஞ்சை 400 முதல் 500 கிலோ எடை கொண்டதாக உள்ளது.
இதில் இன உற்பத்தியை பெருக்கும் 45 கோடி ஸ்போர்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF