ஜனாதிபதி மீண்டும் சீனாவுக்கு விஜயம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க தாய் நாட்டை கேவலப்படுத்தியுள்ளதாக சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத்.
பட்டாணி ராஸிக்கின் படுகொலைக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை. இந்த நிலையில், இந்த கொலையுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரங்களுடன் எவராவது நிரூபிப்பார்களேயானால் அரசியலில் இருந்தே நான் ஒதுங்கிக் கொள்வேன் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
போலி குற்றச்சாட்டுக்களை நம்பாது இலங்கையின் குரலை செவிமடுத்து நீதி வழங்கவேண்டும்!- சர்வதேசத்திடம் பீரிஸ் கோரிக்கை.
போலியான குற்றச்சாட்டுக்களை நம்பாது இலங்கையின் குரலை செவிமடுத்து நீதி வழங்க சர்வதேசம் முன்வர வேண்டும். பொருளாதார அபிவிருத்தி இலக்கை அடைய முயற்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவிக்கரங்களே தேவையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.
வடபகுதி மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.
திருமண வயதை 15 ஆக குறைப்பதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேசத்தின் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு பகுப்பாய்வு அறிக்கை பதிலாக அமையாது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள “மனிதாபிமான நடவடிக்கையின் பகுப்பாய்வு அறிக்கை'' இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலாக அமையவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் ஜனாதிபதி சண்டே லீடர் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அச்சுறுத்தல்!
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சண்டேலீடர் செய்தித்தாளின் தலைவர் லால் விக்கிரமதுங்கவுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுமத்தியுள்ளது.
புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டது. அந்த கதிர்வீச்சு தற்போது டச்சி அணு உலையில் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டன் அரசு வரி உயர்வு மற்றும் குறைவான வருமான நிலைகளால் பிரிட்டன் குடும்பம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெரும் நிதி இழப்பை சந்திக்கும் என சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நோர்வேயில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் உயிரை பலி வாங்கிய கொலையாளி ஆண்டர்சின் பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு இதில் தொடர்புள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது.
லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களுக்கு நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. இந்த நிலையில் கடாபிக்கு ஆதரவு தெரிவிப்பதாக வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார்.
ஒசாமா பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்ற புது தகவலை அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ளார்.
ஆப்கனில் கைதான இரண்டு பிரித்தானிய நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஜுலை மாத மத்தியில் அவர்களை ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் ஆயுத படைகள் கைது செய்தன.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் திங்கட்கிழமை துவங்கியது. ரமலான் பிரார்த்தனை முடிந்த தருணத்தில் சிரியா பாதுகாப்பு படையினர் ஹமா நகரில் குண்டுகளை வீசினார்கள்.
சந்தேகத்திற்குரிய பீரங்கி ஒப்பந்தத்தை சவுதி அரேபியாவுடன் ஜேர்மனி அரசு மேற்கொள்கிறது என கிறீன்ஸ் எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்தது.
பிரான்சில் முடக்கப்பட்ட கடாபியின் சொத்துகளை லிபிய போராட்டக்காரர்களுக்கு அளிப்பதாக பிரான்ஸ் நேற்று அறிவித்துள்ளது.
ஷின்ஜியாங் மாகாணத்தில் தாக்குதல் நடத்திய உய்குர் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்துள்ளது என முதல் முறையாக சீனா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளது.
இரண்டாவது வேலை நிறுத்தத்தை தவிர்க்க ஏர் கனடா நிர்வாகத்தினருக்கும் ஊழியர் சங்கத்தினருக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இத்தாலி நாட்டில் குடியேற சென்ற ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த அகதிகள் மூச்சுத்திணறல் காரணமாக பலியாயினர்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்த கடன் வரம்பு அளவை அதிகரிக்கும் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள அரபு நகரத்தில் தான் இந்த Disneyland உருவாக்கப்படுகிறது. 3 மில்லியன் சதுர அடி பரப்பில் உருவாக்கப்படும் இந்த Disneyland பல உலக சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
துபாய் Disneylandல் பல அற்புதமான விடயங்கள் அமைக்கப்படுகிறது. 7 விதமான Theme Park கள் உருவாக்கப்படுகிறது. Theme Park, Culture & Art, science & planetariums, Sports & Sports Acadameis, Wellbeing & Health, Shopping & Retail, Resorts & hotels.
ஜனாதிபதியின் உத்தேச விஜயத்தை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அதற்கான திகதிகள் இன்னரும் உறுதிப்படுத்தப்படவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் மீண்டும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த நவம்பரில் ஷங்காயில் இடம்பெற்ற எக்ஸ்போ 2010 கண்காட்சியின் விசேட அதிதியாக ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
இலங்கையில் அதிகளவு முதலீடு செய்யும் நாடாக சீனா உள்ளது. அத்துடன், பல்வேறு முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களில் சீனா ஈடுபட்டுள்ளது.
சபுகஸ்கந்த விசாகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இலங்கையர் என கூறுவதில் வெட்கமடைவதாக விமுக்தி தெரிவித்துள்ளதாகவும் அதனை சந்திரிகாவே ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் இவ்வாறு இலங்கையை இழிவுபடுத்தி பேச வேண்டும்? விமுக்தி இந்த நாட்டை இழிவு படுத்தினாலும் நாம் இந்த நாட்டை பெருமையடையச் செய்வோம்.
எந்த இடத்திற்குச் சென்றாலும் இந்த நாட்டை இழிவுபடுத்த மாட்டோம், ஊடகங்கள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை, சில ஊடகங்கள் தொடர்ந்தும் பிழையான வழியில் செல்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
சனல்4 காணொளியை பார்த்ததன் பின்னர் சந்திரிகாவின் புதல்வர் விமுக்தி, இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என அண்மையில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதில் அக்கறை செலுத்திய பொலிஸாருக்கும் அதற்கான விசேட ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் நன்றியினை தெரிவிக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்ததாவது:
கடந்த வருடம் கடத்தப்பட்ட ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் (சீ.ரீ.எப்.) அரசசார்பற்ற நிறுவனத்தின் முகாமையாளருமான பட்டாணி ராஸிக்கின் உடலெச்சங்கள் கடந்த வாரம் வாழைச்சேனைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளது.
இவர் சிறந்த ஒரு சமூக சேவையாளரும் நல்ல மனிதரும் ஆவார். இவர் கடத்தப்பட்டவுடன் அவருடைய மகனும் மருமகனும் என்னிடம் அதுபற்றி கூறினார்கள். நான் உடனே அதுபற்றி பொலிஸ்மா அதிபருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் தொலைபேசி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தெரியப்படுத்தினேன்.
அத்தோடு இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தேன். இவ்வாறான நிலையில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஜம்மியதுல் உலமா மற்றும் சமூக அமைப்புக்கள் பலவும் இவரை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் எனது அமைச்சில் பணிபுரிந்தவர். அதனால் எனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் கூறுவதுடன் ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன.
குறித்த கடத்தல் சம்பவத்துடன் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமைச்சு வாகனங்கள் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக நான் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி அமைச்சர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையெனவும் இந்த கடத்தலுக்கு தனியார் ஒருவரின் வாகனமே பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த வாகனம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டாணி ராஸிக்கின் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அது தொடர்பாக எவ்வாறான பங்களிப்புக்கள் வழங்க முடியுமோ அதனை தான் வழங்குவேன்.
கொலைசெய்யப்பட்டுள்ள பட்டாணி ராஸிக்கின் குடும்பத்தாருக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.
இலங்கைக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் யுத்தகாலப் பகுதியிலோ அதற்கு முன்னரோ உள்நாட்டில் வாழ்ந்தவர்கள் அல்லர். தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலில் செயற்பட்டு இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே மனித உரிமைகள் மற்றும் போர் குற்றச்சாட்டுக்களை வெளியிடுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் ““மனிதாபிமான நடவடிக்கைகள் உண்மை பகுப்பாய்வு'' என்ற தொனிப்பொருளிலான அறிக்கை வெளியீடு நேற்று திங்கட்கிழமை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து இன்று நாட்டில் சமாதானம் பிறந்துள்ளது. தற்போது நிலையான ஜனநாயகம் விஸ்தரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பிரதேசங்களிலும் சகல இன மக்களும் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை முன்னெடுத்துள்ளது. பொருளாதார அபிவிருத்தியை நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக வடக்கில் அடிப்படை கட்டுமானங்களை மேம்படுத்தி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசு பல வழிகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு நட்புக் கரங்களை நீட்ட வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாது அடிப் டை தன்மையற்ற வகையில் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சர்வதேசம் இலங்கையை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. இந்நிலை மாற வேண்டும்.
இங்கையில் நியாயமான குரலை செவிமடுத்து நீதி வழங்க வேண்டும். சர்வதேசத்தில் இருந்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கு உண்மை நிலைவரம் தெரியாது.
எனவே சகல இனங்களுக்கு ஏற்ற பொருளாதார அரசியல் முன்னெடுப்புகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான முன்னெடுப்புகளுக்கு சர்வதேசம் உதவிக் கரம் நீட்ட வேண்டும் எனக் கூறினார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் இடம்பெற்ற இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இலங்கையில் வடபகுதி மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நிலைப்பாட்டை கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும், இனங்களிடையேயான நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், வடபகுதி மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடாகும். இது தொடர்பில் அம் மக்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு அதற்கமைய இதனை வழங்க வேண்டும்.
அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் 13 ஆவது திருத்தத்திற்கமைவான தீர்வு பொருந்தாது. அதேவேளை இத் திருத்தத்திலுள்ள மத்திய அரசுக்கும், மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதேவேளை இந்தத் திருத்தத்தை ஒதுக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி அதிகாரப் பகிர்வுடனான தீர்வுகளை வழங்க வேண்டும். அத்தோடு பொலிஸ் அதிகாரங்களையும் வழங்கலாம்.
எவ்வாறெனில் இவ் அதிகாரங்களிலுள்ள முக்கியமானவற்றை அதாவது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்களை மத்திய அரசாங்கம் வைத்துக் கொண்டு சிறு குற்றங்களை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்க முடியும்.
இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளே அதிகம் உள்ளது. எனவே காணி அதிகாரங்களை மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் இணைந்த குழுவை அமைத்து வழங்க முடியும். அதனை நாம் ஆதரிக்கின்றோம்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பேரினவாதக் கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியும்.
18 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் நான் உரையாற்றினேன். ஆனால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியென்ற காரணத்தினால் ஆதரவாக வாக்களிக்கும் தார்மீகக் கடமை உருவானது.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஜனநாயக ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும். இவ் இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானமானது ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்றார்.
இலங்கையில் தற்போது திருமண வயது 18 ஆக உள்ளது.
எனினும் இந்த வயதை 15 ஆக குறைப்பதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் சிறுவர் சிறுமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை கருத்திற்கொண்டே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இராஜதந்திர ரீதியில் பதிலளிப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டமையினால் சனல் 4 குற்றச்சாட்டு தீவிரம் அடைந்து சர்வதேசம் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த பகுப்பாய்வு அறிக்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு தளபதியாக செயற்பட்ட முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவின் பெயர் உள்வாங்கப்படாமை அரசியல் மயமாக்கலையே வெளிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் பகுப்பாய்வு அறிக்கை சனல் 4 குற்றச்சாட்டிற்கு சவாலாக அமையாது. எனவே மாற்று இராஜதந்திர செயற்பாடு அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச நாடுகளினால் முன்வைக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் ஆரம்பத்திலேயே பதில் கொடுத்து சம்பந்தப்பட்ட தரப்புக்களை இராஜதந்திர ரீதியாக அணுகியிருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கம் வீண் பேச்சுக்களை பேசி உள்நாட்டில் வீரத் தனத்தை காட்டி பொதுமக்கள் முன் தேர்தல் வெற்றிக்காக செயற்பட்டது.
பின்னர் சனல் 4 இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு வீடியோவை வெளியிட்டு மேலும் அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்தது. இதற்கு அரசாங்கம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது பிரச்சினைகளும் இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் தீர்மானங்களும் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையின் பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐ.தே.க. ஏற்றுக் கொண்டாலும் இதனை சர்வதேசத்தின் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு போதுமானதாக கருத முடியாது.
இதைவிட பரந்தளவிலானதும் வலுவானதுமான இராஜதந்திர செயற்பாடுகள் சனல் 4 உட்பட சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அது மட்டுமின்றி இறுதி யுத்தத்தின் போது படைகளுக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பகுப்பாய்வு அறிக்கையில் இருந்து ஒதுக்கி வைத்தமை கவலைக்குரிய விடயமாகும்.
இந்த செயற்பாட்டினால் மேற்படி அறிக்கையின் அரசியல் மயமாக்கல் வெளிப்பட்டுள்ளது என்றார்.
ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் செயற்பாடுகளுக்காக சீனா பணம் வழங்கியதாக சண்டே லீடரில் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் கடந்த ஜூலை 19 ம் திகதி விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டார் என்பது தமக்கு அதிர்ச்சியை தருவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த கட்டுரை தொடர்பாக விளக்கம் இருக்குமாயின் ஜனாதிபதி செய்தித்தாளுடன் பேசி தமது கருத்தை அதில் பிரசுரித்திருக்கலாம்.
இதனைவிடுத்து ஊடக தலைவரை அவர் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தியமையை எவ்வாறு ஜனநாயக செயற்பாடு என்று கூறுவது என்று உலக ஊடக அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு நாட்டின் தலைவர் முன்மாதிரியாக செயற்படவேண்டும். இதனை விடுத்து ஊடகத்துக்கு எதிராக செயற்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே அவர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. எனவே ஊடகங்களுக்கு எதிரான போக்கை கைவிடவேண்டும் என்று ஊடக அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
அதேநேரம் இலங்கையின் ஊடக அமைப்புக்களும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பு கோரியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சண்டே லீடர் செய்தித்தாளின் தலைவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தவேளையில்,
‘நீங்கள் பொய் எழுதுகிறீர்கள்.அப்பட்டமான பொய்யை எழுதுகிறீர்கள். நீங்கள் என்னை அரசியல் ரீதியாக தாக்கலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் தாக்கமுடியாது. எனக்கு தெரியும் உங்களை தனிப்பட்ட ரீதியில் எவ்வாறு தாக்குவது என்று’
என்றிவ்வாறு அச்சுறுத்தியதாக எல்லைகளற்ற ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சீனா, ஜனாதிபதிக்கும் அவரது மகனுக்கும் 9 மில்லியன் டொலர்களை வழங்கியதாக சண்டே லீடர் இரண்டு நாட்கள் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது.
இது தொடர்பில் விளக்கத்தைக் கோர, சண்டே லீடர், ஜனாதிபதி தரப்பை அணுகியபோதும் யாரும் அதற்கு பதில் தரவில்லை. எனவேதான் ஒரு பக்க செய்தியை மாத்திரம் அந்த செய்தித்தாள் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டது. அந்த கதிர்வீச்சு தற்போது டச்சி அணு உலையில் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்று மதியம் 1 மற்றும் 2ம் அணு உலையில் கதிர்வீச்சு அதிக அளவில் இருப்பது தெரியவந்தது என டோக்யோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நோகி சுனோடா தெரிவித்தார்.
கதிர்வீச்சு அதிக அளவில் இருந்ததால் அந்தப்பகுதி பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. இந்த கதிர்வீச்சு அதிக அளவில் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
இந்த கதிர்வீச்சு பரவல் காரணமாக தொழிலாளர்களின் மீட்புப் பணி பாதிக்கப்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. மணிக்கு 10 ஆயிரம் மில்லிஎவர்ட்ஸ் என்ற அளவில் கதிர்வீச்சு அளவு உள்ளது.
இந்த கதிர்வீச்சு நிலையை 60 நிமிடம் மனிதர்கள் சுவாசிக்க நேர்ந்தால் சில வாரங்களில் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை.பிரிட்டன் அரசு வரி உயர்வு மற்றும் குறைவான வருமான நிலைகளால் பிரிட்டன் குடும்பம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெரும் நிதி இழப்பை சந்திக்கும் என சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனில் உள்ள ஒரு குடும்பம் ஆண்டுக்கு சராசரியாக 1500 பவுண்ட் என்ற அளவில் 5 ஆண்டுகளுக்கு நிதி இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
பிரிட்டனில் நிதி பற்றாக்குறை தீவிரமாக உள்ளது. இதனால் செலவின நடவடிக்கைகளில் அரசு கடும் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சியும் மிக மெதுவாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்காத சூழ்நிலையில் வரி குறைப்பு நடவடிக்கையை பிரிட்டன் அரசு மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நிதியம் அறிவுறுத்தி உள்ளது.
பிரிட்டனில் வாட் வரி 17.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நோர்வே பயங்கரவாதி தயாரித்த படுகொலை பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள்.நோர்வேயில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் உயிரை பலி வாங்கிய கொலையாளி ஆண்டர்சின் பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் பிரதமர் அலுவலகம் அருகில் கடந்த 22ம் திகதி குண்டுவெடித்தது. அதில் 7 பேர் உடல் சிதறி பலியாகினர்.
அடுத்த 2 மணி நேரத்தில் உடோயா தீவில் ஆளும் கட்சியின் இளைஞர் அணி கூட்டத்தின் மீது ஆண்டர்ஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 70 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பையும் ஆண்டர்ஸ் நடத்தியது தெரியவந்தது.
பொலிஸ் விசாரணையில் இருக்கும் ஆண்டர்சின் 1,500 பக்க இணையதள குறிப்பு கைப்பற்றப்பட்டது. அதில் கொலை செய்யப்பட வேண்டியவர்களாக ஆண்டர்ஸ் ஒரு பட்டியல் போட்டிருந்தார்.
அதில் ஹாலிவுட் பிரபலங்களான நடிகை ஏஞ்சலினா ஜூலி, மடோனா, பாடகி லேடி காகா, நடிகை ஹெய்தி கிளம், ஸ்கார்லட் ஜான்சன், ஜினத் பால்ட்ரோ பெயர்கள் இருந்தன.
ஏஞ்சலினா, அவரது கணவர் பிராட் பிட் ஆகியோரின் 6 குழந்தைகளில் 3 குழந்தைகளை எத்தியோப்பியா, கம்போடியா, வியட்நாமில் இருந்து தத்து எடுத்தது தவறு என்று கொலை பட்டியலில் சேர்த்ததற்கு ஆண்டர்ஸ் காரணம் கூறியுள்ளார்.
அதேபோல பாடகி மடோனா தனது 4 குழந்தைகளில் 2 குழந்தைகளை மலாவியில் இருந்து தத்து எடுத்ததும், லேடி காகா அமெரிக்க குடியுரிமை விதிகளை விமர்சித்து பாடியதும் காரணமாக கூறியுள்ளார்.
இதற்கிடையே தன்னை நோர்வே நாட்டு குடிமகனாக அடையாளம் தெரியாமல் இருக்க ஆண்டர்ஸ் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாகவும் ஆஸ்லோவில் நோர்வே பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு இதில் தொடர்புள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பெனாசிரின் பாதுகாப்பு அதிகாரியாக 21 ஆண்டுகள் பணியாற்றிய முகமது அஸ்லம் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அவர் மனுவில் பெனாசிர் கொலை சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தவிர தாக்குதலில் பலியான 21 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டன. எனவே 2வது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்த கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த எனது மனு நிராகரிக்கப்பட்டது.
பெனாசிர் கொல்லப்பட்ட போது கண்ணால் பார்த்த சாட்சி நான் தான். கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை கூறியுள்ளேன். அவர்கள் மீது 2வது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் முக்கிய தலைவர். ஆனால் அவரது கொலை வழக்கில் யாரும் அக்கறை செலுத்தவில்லை. எனவே இந்த வழக்கில் முகமது அஸ்லமின் மனு மீது விசாரணை நடத்த 3 பேர் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து சவுத்ரி தலைமையிலான பெஞ்ச் பூட்டோ படுகொலை தொடர்பான விசாரணை ஆவணங்கள், ஸ்காட்லாந்து யார்டு குழு மற்றும் ஐ.நா பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் அன்வர் உல் ஹக்குக்கு உத்தரவிட்டனர்.
வெனிசுலா ஜனாதிபதி சாவேசின் ஆதரவுக்கு நன்றி: கடாபி.லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களுக்கு நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. இந்த நிலையில் கடாபிக்கு ஆதரவு தெரிவிப்பதாக வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார்.
அவரது ஆதரவுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன் என கடாபி கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தை லிபிய நிதித்துறை அமைச்சர் அப்துல்லா ஜிட்னி வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்சரிடம் அளித்தார்.
அந்த கடிதத்தின் குறிப்பிட்ட பகுதிகளை சாவேஸ் படித்துக் காட்டினார். லிபியாவில் தேசிய மாற்ற கவுன்சிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேற்கத்திய நாடுகளை சாவேஸ் கடுமையமாக விமர்சித்தார். அவர் ஆற்றிய தொலைக்காட்சி உரையில் கடாபி நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ மனப்புழுக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச அடிப்படை விதியை மீறும் சேதப்படுத்தும் நடவடிக்கையில் லிபியாவில் ஆட்சி மாற்றம் வருவதை நாங்கள் ஏற்க முடியாது என்றும் சாவேஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
லிபிய எண்ணெய் விற்பனைக்கு தடை உள்ள நிலையில் வெனிசுலா உதவியை கேட்டு லிபிய நிதித்துறை அமைச்சர் வெனிசுலா வந்துள்ளார்.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம்.ஒசாமா பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்ற புது தகவலை அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத்தில் கடந்த மே 2ம் திகதி அமெரிக்க படைகளால் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க ராணுவத்தினர் 6 அதிநவீன ஹெலிகாப்டர்களில் சென்று ஒசாமா தங்கியிருந்த வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி கூறியதாவது: ஒசாமா பதுங்கி இருப்பது உறுதியானவுடன் தாக்குதலுக்கு தயாரானோம். யாரையும் கைது செய்யும் நோக்கமோ, உயிருடன் பிடிக்கும் நோக்கமோ எங்களுக்கு இல்லை.
யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளும் வேகத்தில் சென்றோம். வீட்டு படுக்கை அறையில் கமீஸ் அணிந்து ஆயுதங்கள் இன்றி ஒசாமா இருந்தார்.
அவருடைய மார்பில் முதலில் சுட்டோம். அதன்பிறகு தலையில் சுட்டோம். அப்போது ஒசாமாவை காப்பாற்ற அவரது 2 மனைவிகளும் ஓடிவந்தனர்.
பின்லேடன் அறைக்குள் நுழைந்த வீரர் அவரை சுட்டதும் உற்சாகத்துடன் கடவுளுக்காக நாட்டிற்காக "ஜெரோனிமா ஜெரோனிமா" என சத்தம் போட்டுள்ளார்.
பின்லேடனை முதலில் சுட்ட அமெரிக்க வீரர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. ஒபாமாவுக்கு இதுபற்றி தெரியவில்லை.
பின்லேடனை முதலில் சுட்ட வீரர் யார் என்றும் ஒபாமா கேள்வி எழுப்பவில்லை. ஜெரோனிமா என்பது பின்லேடன் மீது நடத்தப்படும் தாக்குதலை குறிக்கும் அமெரிக்க சங்க வார்த்தையாகும்.
ஒசாமாவை சுட்டுக் கொல்ல 5.56 எம்.எம் புல்லட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பின்லேடனின் அல்கொய்தா நடத்திய தாக்குதலில் 2073 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கனில் சிறை வைக்கப்பட்டிருந்த இரு பிரிட்டன் நபர்கள் விடுதலை.ஆப்கனில் கைதான இரண்டு பிரித்தானிய நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஜுலை மாத மத்தியில் அவர்களை ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் ஆயுத படைகள் கைது செய்தன.
காந்தகார் சிறையில் இருந்த அவர்கள் ஜுலை 29ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆவார்கள். அவர்களிடம் பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் இருந்தன.
அந்த நபர்கள் ஹெராட் நகரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆப்கானிஸ்தானிய காவலில் அனுப்பப்பட்டனர். சித்ரவதை செய்யப்படுவார்கள் என சிறை கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பு வலியுறுத்தியது.
பிரிட்டன் காவல் கொள்கைப்படி அந்த நபர்கள் விடுவிக்கப்பட்டனர் என பாதுகாப்புத் துறை அமைச்சக அறிக்கை தெரிவித்து உள்ளது.
விடுதலையான நபர்கள் பிரிட்டனுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார்களா என்பது குறித்து பிரிட்டன் உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவிக்க மறுத்தார்.
சிரியாவில் அதிகரிக்கும் போராட்டம்: 10 நிமிடத்திற்கு ஒருமுறை குண்டுவீசித் தாக்குதல்.முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் திங்கட்கிழமை துவங்கியது. ரமலான் பிரார்த்தனை முடிந்த தருணத்தில் சிரியா பாதுகாப்பு படையினர் ஹமா நகரில் குண்டுகளை வீசினார்கள்.
ஞாயிற்றுக்கிழமை முதல் சிரிய ராணுவத் தாக்குதலில் 130 பேர் இறந்து உள்ளனர் என மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டின.
ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக போராடும் நபர்களின் முக்கிய நகரமாக ஹமா உள்ளது. சிரிய தலைநகர் டமாஸ்கசிலும் பஷாருக்கு எதிரான போராட்டம் தீவிரமாகி உள்ளது. சிரிய தாக்குதல் குறித்து திங்கட்கிழமை இரவு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முக்கிய ஆலோசனை நடத்தியது.
சிரிய வன்முறைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கடுமையான கண்டனம் தெரிவித்தன. சிரியாவின் நெருக்கடியான நிலையில் அந்த நாட்டு மக்களுக்காக சர்வதேச சமூகம் ஒன்று திரள வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
ஹமா நகரின் வீதிகளில் நேற்று ராணுவ வீரர்கள் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்தனர். 10 வினாடிக்கு ஒருமுறை அங்கு குண்டு வீசப்பட்டது.
சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.சந்தேகத்திற்குரிய பீரங்கி ஒப்பந்தத்தை சவுதி அரேபியாவுடன் ஜேர்மனி அரசு மேற்கொள்கிறது என கிறீன்ஸ் எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்தது.
ஜேர்மனியின் முன்னாள் கேபினட் அமைச்சர் ஹெய்டே மேரி வெசேவும் ஜேர்மனி அரசுக்கு எதிராக நேற்று விமர்சித்தார்.
ஜனநாயத்திற்காக மக்கள் போராட்டம் அரசு நாடுகளில் நடைபெறும் தருணத்தில் சவுதி அரேபியாவுக்கு லியே பார்டு பீரங்கிகளை ஜேர்மனி அரசு அளிக்கிறது. இது ஜேர்மனியின் அடக்குமுறையை காட்டுகிறது என ஹெய்டே விமர்சித்தார்.
ரகசிய ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர் வெலேவை சந்தித்தார். அவர் எகிப்தில் ஜனநாயக போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நிலையில் குய்டோவை சந்தித்து உள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு பீரங்கிகளை விற்பது தொடர்பாக ஜேர்மனியின் உச்சநீதிமன்றத்தில் கிறீன்ஸ் கட்சி புகார் செய்து உள்ளது. அரசியலமைப்பு நீதிமன்றத்தில் கிறீன்ஸ் கட்சித் தலைவர்கள் புகாரை பதிவு செய்ததுடன் உரிய விசாரணை தேவை என்றும் வலியுறுத்தி உள்ளனர் என ஜேர்மனி செய்தி இதழான ஸ்பைகள் தகவல் வெளியிட்டு உள்ளது.
கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு.பிரான்சில் முடக்கப்பட்ட கடாபியின் சொத்துகளை லிபிய போராட்டக்காரர்களுக்கு அளிப்பதாக பிரான்ஸ் நேற்று அறிவித்துள்ளது.
இதன்படி 25.90 கோடி டொலர் கடாபி நிதியை பிரான்ஸ் அளித்தது. லிபிய போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சில் இந்த நிதியை உணவு, மருந்து பொருட்கள் என மனித நேய பணிகளுக்கு பயன்படுத்தும்.
தேசிய மாற்றக் கவுன்சிலின் பிரான்சுக்கான புதிய தூதர் மன்சூர் சய்ப் அல் - நசீப் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் அலய்ன் ஜீபேவை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் மன்சூர் கூறுகையில்,"கடாபியின் நிதி லிபிய மக்களுக்கு உரியது. இந்த நிதி உணவு, மருந்துகள் வாங்க பயன்படும்" என்றார்.
கடந்த வியாழக்கிழமை லிபியா போராட்ட இயக்கம் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுக்கு தனது தூதர்களை நியமனம் செய்தது. லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் நேட்டோ படையில் பிரான்ஸ், பிரிட்டன் துருப்பினர் உள்ளனர். லிபியா போராட்டக் கவுன்சிலை முதலில் அங்கீகரித்த நாடு பிரான்ஸ் ஆகும்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது: சீனா பகிரங்க குற்றச்சாட்டு.ஷின்ஜியாங் மாகாணத்தில் தாக்குதல் நடத்திய உய்குர் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்துள்ளது என முதல் முறையாக சீனா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளது.
இரு நாட்களுக்கு முன் சீனாவில் உள்ள ஷின்ஜியாங் மாகாணம் கஷ்கர் நகரில் சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று முன்தினம் மீண்டும் கஷ்கர் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நுழைந்த ஒன்பது பயங்கரவாதிகள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்த பொலிசாருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதர நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மூன்று நாட்களில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல்களில் மொத்தம் ஐந்து பயங்கரவாதிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா, சீனாவில் ரகசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதுதொடர்பாக சீன அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கிழக்கு துர்கிஸ்தான் அமைப்பினர்தான் காரணம்.
தாக்குதலில் ஈடுபடும் முன் அவர்கள் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இதில் நேரடித் தொடர்பு உள்ளது.
உய்குர் மதவாதிகளின் தூண்டுதலில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் சீன மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி ஷின்ஜியாங் மாகாணத்தை சீனாவில் இருந்து துண்டாட நினைக்கின்றனர்.
சீனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் அரசு,"கிழக்கு துர்கிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிப்பதில் சீனாவுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார்" என கூறியுள்ளது.
வேலை நிறுத்தத்தை தடுக்க ஏர் கனடா ஊழியர்களுடன் புதிய ஒப்பந்தம்.இரண்டாவது வேலை நிறுத்தத்தை தவிர்க்க ஏர் கனடா நிர்வாகத்தினருக்கும் ஊழியர் சங்கத்தினருக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த யூனியன் 6800 விமான ஊழியர்களின் பிரதிநிதித்துவ சங்கம் ஆகும். 17 வார கால பேச்சு வார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தப் பேச்சு வார்த்தை குறித்து விமான ஊழியர்கள் சங்கம் கூறுகையில்,"5 ஆண்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு, ஓய்வூதிய பாதுகாப்பு, ஊழியர்களுக்கு உரிய ஓய்வு, சாப்பாடு அலவன்ஸ் அதிகரித்தல் போன்ற விடயங்கள் இடம்பெற்று உள்ளன" என தெரிவித்தது.
இந்த ஒப்பந்தம் திருப்தி அளிப்பதாக உள்ளது என கனடா பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜெப் டைலர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்களுக்கு ஒப்பந்த விவரம் விவரமாக தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஒப்புதல் வாக்கெடுப்பு 3 வார காலத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏர் கனடா மற்றும் ஊழியர்களுக்கான தற்போது செயல்பாட்டில் இருந்த ஒப்பந்தம் மார்ச் 31ஆம் திகதியுடன் காலாவதியானது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் திகதி முதல் இருதரப்பினர் இடையே நடந்து வந்த பேச்சு வார்த்தை தற்போது சுமூகமாக முடிந்துள்ளது.
புதிய ஒப்புதலுக்கு வாடிக்கையாளர் சேவை மற்றும் ஏர் போர்ட் தொழிலாளர்கள் 87.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் சீனாவுக்கு ரகசிய பயணம்.பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்கா உடனான ராணுவம் மற்றும் உளவுத் துறை உறவுகளில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டைச் சார்ந்து இயங்குவதை குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி வாஹீத் அர்ஷத் சீனாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உளவுத் துறை சி.ஐ.ஏ உயர் அதிகாரி அமெரிக்காவுக்கே திரும்பிச் சென்றார். அதேநேரம் சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் கலவரம் வெடித்தது. இக்கலவரத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் காரணம் என சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் தான் ஐ.எஸ்.ஐ தலைவர் பாஷா நேற்று சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இருதரப்பு உறவுகள் பற்றி அவர் பேச்சு நடத்துவார் என பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.
மூச்சுத்திணறல் காரணமாக அகதிகள் 25 பேர் பலி.இத்தாலி நாட்டில் குடியேற சென்ற ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த அகதிகள் மூச்சுத்திணறல் காரணமாக பலியாயினர்.
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள லிபியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு வருவதையடுத்து அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அதேபோன்று லாம்பிடுஸ் என்னும் தீவுப்பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இத்தாலி நாட்டிற்கு நாட்டிற்கு குடியேறுவதற்காக படகு ஒன்றில் புறப்பட்டனர்.
இத்தாலி நாட்டின் எல்லைக்குள் நுழைய முற்பட்ட போது அந்நாட்டின் கடலோர காவல் படையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.
சோதனையில் அகதிகளாக தங்கள் நாட்டிற்குள் தஞ்சம் புக இருப்பதையும், மேலும் அகதிகளில் சுமார் 25 பேர் பலியாகியிருப்பதையும் கண்டறிந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள பொலிசார் வசம் ஒப்படைத்தனர். பலியானவர்களில் 16 பெண்களும், 11 பேர் குழந்தைகளும் அடங்குவர்.
அமெரிக்க கடன் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்த கடன் வரம்பு அளவை அதிகரிக்கும் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் நிதி நெருக்கடி நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அதிபர் ஒபாமா பற்றாக்குறையைக் குறைக்க ஒப்புக் கொண்டதால் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த தீர்வை ஏற்றுக் கொண்டதால் அமெரிக்க நிதி நிலை திவாலாகும் சூழலிலிருந்து தப்பியது. திவாலானால் அது பொருளாதாரத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டார்.
இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்க செலவை ஒரு லட்சம் கோடிவரை கட்டுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இது மிக மிகக் குறைந்தபட்ச அளவாகும். அமெரிக்க அதிபராக ஐஸ்னோவர் இருந்த காலத்தில் உள்நாட்டில் செலவிடப்பட்ட தொகை அளவுக்குக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான முதலீடுகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக ஆராய்ச்சி, கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடன் பெறும் வரம்பை 2 லட்சம் கோடியாக அதிகரிப்பது எனவும், செலவுகளை 3 லட்சம் கோடி டொலராகக் குறைப்பது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
செலவுகளைக் குறைப்பது என்பது அதிரடியாக எடுக்கப்படாது, அவ்விதம் எடுக்கப்பட்டால் அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்காது என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.
இப்போதைய சூழலில் இது ஒன்றே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்ற ஒபாமா தான் தேர்வு செய்த திட்டம் இதுவல்ல, வரிச் சீர்திருத்தத்தில் சில கடுமையான நடைமுறைகள் அவசியம் என தான் கருதுவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
அதாவது பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகளை ஒவ்வொரு கட்சியும் வகுத்தளித்து அதை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் திவாலாவதைத் தடுப்பதோடு இந்த சிக்கலுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
மேலும் இதேபோன்ற சிக்கல் அடுத்த ஆறு மாதங்களிலோ அல்லது 8 மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ மீண்டும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் வரம்பு, செலவு வரம்பு ஆகியவற்றில் நிலவிவந்த உறுதியற்ற நிலையைப் போக்கியுள்ளது.
இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த ஒரு சில நாள்களில் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
அதன் மூலம் திவாலாவதைத் தவிர்க்கலாம் என்றும் ஒபாமா குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அரசு செலவினம் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் நமது செலவினமும் குறிப்பிட்ட அளவில் குறைத்துக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு ஊதியமும் உயரும். இதனால் இப்போதைய அளவில் பொருளாதாரரும் வளரும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்துக்கு குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் கெடு தேதியான ஆகஸ்ட் 2ம் திகதிக்குள் ஒபாமா கையெழுத்திடுவார்.
துபாயில் உருவாக்கப்பட்டுள்ள Disneyland.துபாயில் உள்ள அரபு நகரத்தில் தான் இந்த Disneyland உருவாக்கப்படுகிறது. 3 மில்லியன் சதுர அடி பரப்பில் உருவாக்கப்படும் இந்த Disneyland பல உலக சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
துபாய் Disneylandல் பல அற்புதமான விடயங்கள் அமைக்கப்படுகிறது. 7 விதமான Theme Park கள் உருவாக்கப்படுகிறது. Theme Park, Culture & Art, science & planetariums, Sports & Sports Acadameis, Wellbeing & Health, Shopping & Retail, Resorts & hotels.