ரமழான் தலைப்பிறை தென்பட்டது; நோன்பு ஆரம்பம்.
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்றுமுன்னர் அறிவித்ததுள்ளது.
போர்க்குற்றவாளிகளான இலங்கை எம்.பி.க்கள் இந்திய நாடாளுமன்றில் இருக்கக்கூடாது! அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பு.
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்.பி.க்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம.பி.க்களின் எதிர்ப்பு தொடர்பாக இலங்கை எம்.பி.க்களிடம் மன்னிப்பு கோரிய இந்திய மக்களவைத் தலைவர்.
இந்திய நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கோஷத்துக்காக, இலங்கை பிரதிநிதிகளிடம் மக்களவைத் தலைவர் மீரா குமார் மன்னிப்புக் கோரினார்.
சனல் -4 தொலைக்காட்சிக்கு சிறிலங்கா அழைப்பு.
களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கு சிறிலங்கா வருமாறு பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் - ஜனாதிபதி.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மனநோயாளிகள், போர் பற்றி நூல்களை வெளியிடுகின்றனர் – சரத் பொன்சேகா.
கொழும்பில் உள்ள மன நோயாளிகள் போர் பற்றி நூல்களை வெளியீடு செய்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு முன்வைக்கப்பட்டால் ஐ.தே.க. ஆதரவளிக்கும் - ரணில்.
சகல இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றுக்கு தமது கட்சி பூரண ஆதரவளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு துவக்கம்.
புனித ரமலான் மாத நோன்பு வளைகுடா நாடுகளில் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
மெக்சிகோ நாட்டின் ஜுவாரஸ் நகர போதை பொருள் கும்பல் தலைவன் ஜோஸ் ஆன்டனியோ அகோஸ்டா ஹெர்னாண்டஸ்(வயது 33).
இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற பழமையான அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அந்நாட்டு அரசு நிறுத்தியதால் தற்போது வாடகைக்காக விடப்படுகிறது.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணைய் ஏற்றிச் சென்ற 10 லொறிகளை தீவிரவாதிகள் கொளுத்தினர். இந்த சம்பவத்தால் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இங்கிலாந்தில் தொடர்ந்து 12 மணி நேரம் வெறித்தனமாக வீடியோ கேம் ஆடிய வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
லிபியாவின் மூத்த தூதரக அதிகாரியை ஜேர்மனி வெளியேற்றியது. அந்த அதிகாரி சர்வாதிகாரத்தை கடைபிடிக்கும் கடாபிக்கு ஆதரவாக செயல்பட்டதை தொடர்ந்து வெளியேற உத்தரவிட்டது.
பிபிசி ஒலிபரப்பு துறை உலகம் முழுவதும் புகழ்பெற்ற செய்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்கள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அசாத்திற்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இத்தாலி பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனியை படுகொலை செய்து விடுவதாக லிபியா தலைவர் கடாபி மிரட்டினார் என இத்தாலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் கையாண்ட அடக்குமுறையில் 100 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கடன் பெறும் உச்சவரம்பை உயர்த்தும் விடயத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
தற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.
வழமைக்கு மாறாக பல தமிழ் சகோதரர்கள் ரமழான் மாதத்திற்காக தலைப்பிறையை பார்த்து கொழும்பு பெரியவாசாலுக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மத்ரஸதுல் ஹமீதிய்ய மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபை பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இலங்கை எம்.பி.க்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துடன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது தம்பித்துரை எம்.பி. தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க்குற்றம் சாட்சியில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.
உறுப்பினர்களின் எதிர்ப்பால் சபாநாயகர் மீராகுமாரால் உரையை வாசிக்க முடியவில்லை. விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.
இதுதொடர்பாக மக்களவைச் செயலர் திங்கட்கிழமை வெளியிட்ட செய்தியில், நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட வந்த இலங்கை பிரதிநிதிகளுக்கு எதிராக சில உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதற்கு தாம் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்துக்காக தாம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக, சமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை எம்.பி.க்கள் குழு இன்று இந்திய மக்களவைக்கு வருகை தந்தது. அவர்களை மீராகுமார் வரவேற்றபோது, தம்பித்துரை உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, சனல்-4 தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்திப் பிரிவின் செய்தியாளர் ஜொனாதன் மில்லருக்கும், சனல்-4 தொலைக்காட்சியின் தலைமைப்பீடத்துக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கான பயணத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது அதனை படம்பிடிக்க முயன்ற சனல்-4 செய்தியாளர் குழுவை சிறிலங்கா அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் இன்று அலரி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அனைத்து தரப்பினரும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
நாடாளுமன்றம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
போர் வெற்றி தொடர்பில் தங்களது பெயர்களை மகா வம்சத்தில் பொறித்துக் கொள்வதில் இவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போர் வெற்றி நோக்க படையினரை வழி நடத்திய என்னை சிறையில் அடைத்து விட்டனர்.
போரில் முக்கிய பங்காற்றிய 20 க்கும் மேற்பட்ட ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியாகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்டு திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்த நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதே தவிர ஜனாதிபதிக்கு எதிராக அல்ல என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முனைப்புக்களின் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பேட்டுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது பௌதீக ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் மாத நோன்பு வளைகுடா நாடுகளில் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
ஐக்கிய அரபு சிற்றரசு, எகிப்து, செளதி அரேபியா, லெபனான், ஏமன், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் நோன்பு தொடங்குகிறது.
நோன்பு தொடங்கும் நாளை அறிவிக்கும் குழு சனிக்கிழமை இதை அறிவித்தது. புனித ரமலான் மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் மறைவு வரை உணவருந்தாமல், நீர் பருகாமல் விரதம் இருந்து மாலையில் தொழுகைக்குப் பிறகே நோன்பை முறித்து ஆகாரம் உண்பர்.
வளைகுடா நாடுகளில் இந்த மாதம் கடுமையான வெப்பம் நிலவுகிறது. பகல் பொழுது 14 மணி நேரம் நீள்கிறது. இறைவனின் கருணையால் நோன்பு நாள்கள் நல்லவிதமாக முடிந்து உலகம் முழுக்க அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் பரவ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் முஸ்லிம்கள் நோன்பைத் தொடங்குகின்றனர்.
1500 நபர்களை கொலை செய்ய உத்தரவிட்ட போதை பொருள் கும்பல் தலைவன் கைது.மெக்சிகோ நாட்டின் ஜுவாரஸ் நகர போதை பொருள் கும்பல் தலைவன் ஜோஸ் ஆன்டனியோ அகோஸ்டா ஹெர்னாண்டஸ்(வயது 33).
இவனை பற்றிய தகவல் தருபவர்களுக்கு 12,75,000 டொலர் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவன் கைது செய்யப்பட்டான். ஜோஸ் ஆன்டனியோ கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க தூதரக பெண் அதிகாரியான லெஸ்லி என்ரிகியூஸ், அவரது கணவர் ஆர்தர் மற்றொரு அதிகாரியின் கணவர் சல்சிடோ ஆகியோரை சுட்டு கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தான்.
மேலும் வடக்கு ஷிஹுவாஹுவா மாகாணத்தில் மட்டும் இதுவரை 1,500 பேரை தீர்த்து கட்ட உத்தரவிட்டுள்ளான். மெக்சிகோ நாட்டின் கலவரம் மிகுந்த ஜுவாரஸ் நகரத்தில் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 3,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை.இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற பழமையான அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அந்நாட்டு அரசு நிறுத்தியதால் தற்போது வாடகைக்காக விடப்படுகிறது.
இத்தாலியின் டுரின் நகருக்கு அருகே மன்னர் குடும்பங்கள் வாழ்ந்த புகழ்பெற்ற வெனாரியா அரண்மனை உள்ளது. சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட அரண்மனை 1815ம் ஆண்டில் இருந்து அரசின் கவனிப்பில் இருந்து வந்தது. நாட்டின் முக்கிய நினைவுச் சின்னங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்நிலையில் இத்தாலியில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அரசு நிறுத்தியது. அதனால் பாலடைந்த கட்டிடமாக மாறியது.
இதையடுத்து டிகோ தெலாவலே என்ற கோடீஸ்வரர் அந்த அரண்மனையை வாங்கினார். மேலும் அரண்மனையில் முதலீடு செய்த தொகையை எடுப்பதற்காக அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்துவதற்காக வாடகைக்கு விடுகிறார்.
இது குறித்து ஆல்பெர்டோ வனேலி என்பவர் கூறுகையில்,"பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வெனாரியா அரண்மனையை பராமரிக்க தற்போது ஆண்டுக்கு ரூ.90 கோடி செலவாகிறது. அதில் பாதி தொகை தனியார் நன்கொடை மூலமாகவும், நுழைவுக் கட்டணம் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவைகள் வழங்குவதன் மூலம் மீதி தொகை திரட்டப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இத்தாலியில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி.சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ளது இந்த மாகாணம். இந்தப் பகுதியில் கடந்த பல காலமாகவே தீவிரவாதிகள் ஊடுருவல் இருந்து வருகிறது. சீன அரசுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறது சீனா.
இந்நிலையில் பாகிஸ்தானின் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி முகாம்கள் அமைத்துள்ளது.
அங்கு பயிற்சி பெறும் தீவிரவாதிகள் ஷின்ஜியாங் மாகாணத்தில் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுவரை சிறிய அளவிலேயே தாக்குதல் நடத்தி வந்த இந்த அமைப்பு கடந்த இரு நாட்களாக ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கார் என்ற இடத்தில் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். ஒரு ஹொட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதற்கு தீ வைத்தனர். இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை சீன பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமான சீனாவே அந்த நாடு மீது புகார் கூறி்யுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் ஒரு பகுதியை சீனாவுக்கு அந்த நாடு தாரை வார்த்ததும், இப்போது அந்தப் பகுதி வழியாகத்தான் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் சீனாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதி வழியாகத் தான் சீனா-பாகிஸ்தான் இடையே பெரும்பாலான சரக்குப் போக்குவரத்தும், வர்த்தகமும் நடந்து வருகிறது.
ஷின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்கள் மத சுதந்திரம் கோரி கடந்த ஆண்டுகளாகவே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை சீனா ராணுவத்தைக் கொண்டு அடக்கி வருகிறது. 2009ம் ஆண்டு இங்கு நடந்த பெரும் கலவரத்தில் 200 பேரை ராணுவம் கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் ஏற்றிச் சென்ற 10 லொறிகளுக்கு தீவிரவாதிகள் தீ வைப்பு.ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணைய் ஏற்றிச் சென்ற 10 லொறிகளை தீவிரவாதிகள் கொளுத்தினர். இந்த சம்பவத்தால் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான எண்ணைய் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தரை வழியாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தினமும் நூற்றுக்கணக்கான டேங்கர்களும், லொறிகளும் எண்ணைய் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானை கடந்து செல்கின்றன.
அதே போல நேற்று இரவு கராச்சி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான டேங்கர் லொறிகள் சரக்குகளுடன் புறப்பட்டச் சென்றன. தேசிய நெடுஞ்சாலையில் அவை சென்று கொண்டு இருந்தன.
சிந்து மாநிலம், கைப்பூர் என்ற இடத்தில் அந்த டேங்கர் லொறிகளை தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் எண்ணைய் ஏற்றிய டேங்கர் லொறிகளுக்கு அவர்கள் தீவைத்தனர். மொத்தம் 10 லாரிகளை தீவைத்து கொளுத்தினர்.
இந்த சம்பவத்தால், 3 லாரி டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டிரைவர்கள் 2 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால், 3 லாரி டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டிரைவர்கள் 2 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டேங்கர் லாரிகளில் எரிந்த தீ ரோட்டோரத்தில் இருந்த ஹொட்டல் மற்றும் கடைகளுக்கும் பரவியது. இதில் 3 கடைகளும், ஒரு ஹொட்டலும் முழுவதுமாக எரிந்து சாம்பலாயின.
தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய நபர் பரிதாப மரணம்.இங்கிலாந்தில் தொடர்ந்து 12 மணி நேரம் வெறித்தனமாக வீடியோ கேம் ஆடிய வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
லண்டனை சேர்ந்த கிரிஸ் ஸ்டெயின்போர்த் என்ற வாலிபருக்கு வீடியோ கேம் என்றால் எல்லாவற்றையும் மறந்து விடுவார். மணிக்கணக்கில் வீடியோ கேம் ஆடுவார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எக்ஸ்பாக்ஸ் என்ற வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிஸ் இறந்தார்.
பிரேத பரிசோதனையில் அவரது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து போனதால் மரணம் நிகழ்ந்துள்ளது என்று டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து கிரிஸின் தந்தை டேவிட் கூறுகையில்,"வீடியோ கேம் விளையாடுவது தவறில்லை. வீடியோ கேமை நான் குறை சொல்ல மாட்டேன். எதற்கும் எல்லை உண்டு. வெறித்தனமாக விளையாடினால் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கண்ணீருடன் கூறினார்.
எக்ஸ்பாக்ஸ் தயாரித்த நிறுவனம் கூறுகையில்,"கல்வி விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் பொறுப்புள்ள விளையாட்டுகளையே நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். வீடியோ கேம் விளையாடும்போது, அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். வேறு பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று பரிந்துரை செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
கடாபிக்கு ஆதரவான லிபிய தூதரக அதிகாரி வெளியேற்றம்.லிபியாவின் மூத்த தூதரக அதிகாரியை ஜேர்மனி வெளியேற்றியது. அந்த அதிகாரி சர்வாதிகாரத்தை கடைபிடிக்கும் கடாபிக்கு ஆதரவாக செயல்பட்டதை தொடர்ந்து வெளியேற உத்தரவிட்டது.
ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சக பெண் செய்தித் தொடர்பாளர் நேற்று இதனை உறுதிப்படுத்தினார்.
தூதரக அதிகாரியும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக வெளியேற வேண்டும் என ஜேர்மனி அரசு உத்தரவிட்டது.
நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட தூதரக அதிகாரி பெயர் ஹிஷாம் அல் ஷரீப். அவரை கடந்த ஜுலை 22ம் திகதி கடாபி அரசு பெர்லினில் உள்ள லிபிய தூதரகத்திற்கு நியமனம் செய்தது. குறிப்பிட்ட லிபிய தூதரக அதிகாரியை வெளியேற்றக் கூடாது என அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
பிரிட்டிஷ் அரசு கடந்த புதன்கிழமை 9 லிபிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. பின்னர் லிபிய போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை லண்டனுக்கு அனுப்ப பிரிட்டிஷ் அரசு கூறியது. இந்த சூழ்நிலையில் ஜேர்மனியும் லிபிய தூதரக அதிகாரியை நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
பிபிசி பத்திரிக்கையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்.பிபிசி ஒலிபரப்பு துறை உலகம் முழுவதும் புகழ்பெற்ற செய்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்கள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
இது பத்திரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிபிசிக்கு அளிக்கும் நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்ததை தொடர்ந்து ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையை பிபிசி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
ஊழியர்களை திடீரென நீக்க கூடாது என தேசிய பத்திரிக்கையாளர்கள் அமைப்பு அறிவுறுத்தியது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் நள்ளிரவில் வெளிநடப்பு செய்தனர்.
பிபிசி நிர்வாக நடவடிக்கையை கண்டித்து பிபிசி பத்திரிக்கையாளர்கள் 24 மணி நேர ஸ்டிரைக்கை துவக்கினர். இந்த வேலைநிறுத்தம் குறித்து யூனியனின் பொதுச் செயலாளர் மிச்லே ஸ்டானி கூறுகையில்,"கொர்ப்பரேஷனில் உள்ள 3 ஆயிரம் தேசிய பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்கள் உறுதியான ஆதரவு அளிக்கின்றனர்" என்றார்.
வேலை நீக்க நடவடிக்கையில் பிபிசி மாற்றம் குறித்து உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்துள்ளதாக ஸ்டானி தெரிவித்தார்.
இந்த ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி ஊழியர்கள், பிரதிநிதிகள் மற்றும் பிபிசி நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இது குறித்து ஸ்டானி ஸ்றீட் கூறுகையில்,"தனி பத்திரிக்கையாளர்கள் பதவி இழப்பு குறித்து நிர்வாகம் பேசுவதில் அர்த்தம் இல்லை" என்றார்.
பிபிசி பத்திரிக்கையாளர்கள் வேலை நிறுத்தத்தால் உலகம் முழுவதும் 17 கோடி நேயர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சிரியாவில் போராட்டக்காரர்கள் 140 பேர் கொலை: ஹார்ப்பர் கண்டனம்.சிரியாவில் ஜனாதிபதி பஷார் அசாத்திற்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 75 முதல் 140 போராட்டக்காரர்கள் வரை உயிரிழந்தனர். சிரியா ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நேற்று கண்டனம் தெரிவித்தார்.
ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என போராடுபவர்கள் மீது ராணுவம் அடக்குமுறை கையாள்வதற்கு ஹார்ப்பர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கண்மூடித்தனமாக ராணுவம் சுட்டதில் இறந்தவர்களின் உடல்கள் வீதிகளில் சிதறிக் கிடந்தன.
சிரியாவில் போராட்டம் தீவிரமாகியுள்ள நகரங்களில் சிரியா பீரங்கிகள் சரமாரியாக தாக்கின. துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பதுங்கிய நிலையில் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றனர்.
சிரியா ஜனாதிபதி பஷார் அசாத் ஜனநாயக ஆட்சி மலர வழி ஏற்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என ஹார்ப்பர் வலியுறுத்தினார். புனித ரமலான் மாதம் இன்று(திங்கள்கிழமை) துவங்குகிறது. இந்த நிலையில் சிரியா போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
புனித மாதத்திலும் போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் வீதியில் நடமாட அச்சம் ஏற்படுத்தும் வகையில் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
மீண்டும் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் விரிசல்.அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ்தானில் அல்கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடன் சுட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட துவங்கியது.
பாகிஸ்தானிற்கு தெரிவிக்காமல் அமெரிக்கா மேற்கண்ட நடவடிக்கையில் ஈடுபட்டது. இது பாகிஸ்தானியர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.
இதனையடுத்து அமெரிக்க மக்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் விசயங்களில் அதிக கெடுபிடிகள் மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளை பாகிஸ்தான் நடைமுறைப்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த அதிகாரியான கேமரான் முண்டர் என்பவர் காராச்சிக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் நோ அப்செக்சன் சர்டிபிகேட் எதுவும் வைத்திருக்கவில்லை.
இதனால் அவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்டார். தூதரக அதிகாரியான தன்னிடம் விசாரணை நடத்துவது கண்டனத்திற்குரியது என எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக டான்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியை கொலை செய்ய கடாபி சதித்திட்டம்.இத்தாலி பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனியை படுகொலை செய்து விடுவதாக லிபியா தலைவர் கடாபி மிரட்டினார் என இத்தாலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடாபியின் சதித்திட்டம் குறித்து தனது நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் பெர்லுஸ்கோனி தெரிந்து கொண்டாலும் அதுபற்றி வெளியே தெரியாமல் நடித்தார் எனவும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.
சிரியாவில் ராணுவ அடக்குமுறை: 100 பேர் பலி.சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் கையாண்ட அடக்குமுறையில் 100 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
இது சிரிய நாட்டு ராணுவத்தின் மிக மோசமான செயல் என்று இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிரியாவில் அரசுக்கெதிராக மார்ச் மாதத்திலிருந்துப் போராட்டம் நடந்து வருகிறது.
ஜனநாயகத்துக்காகப் போராடுவோர் மீது இந்த ஐந்து மாதத்தில் ராணுவம் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல் இது என்று சிரியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க கடன் உச்சவரம்பு: தொடர்ந்து நீடிக்கும் குழப்பம்.அமெரிக்காவின் கடன் பெறும் உச்சவரம்பை உயர்த்தும் விடயத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
அமெரிக்க பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுப்பதில் குடியரசு - ஜனநாயகக் கட்சியினரிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அரசு கடன் பெறுவதற்கான 14.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த வேண்டுமென்பது அரசு, ஆளும் ஜனநாயகக் கட்சியின் விருப்பம். கடன் அளவை உயர்த்தினால்தான் செலவினங்களை சமாளிக்க முடியும்.
உச்சவரப்பை அதிகரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. ஆனால் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் ஒன்றில் ஜனநாயகக் கட்சிக்கும், மற்றொரு அவையில் குடியரசுக் கட்சிக்கும் பெரும்பான்மை உள்ளது.
இதனால் கடன் உச்ச வரம்பை நிறைவேற்றும் மசோதா குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள அவையில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண் வகையில் ஞாயிற்றுக்கிழமை, ஒபாமாவுடன் எதிர்க்கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினர்.
இதன் பின்னர் அவர்கள் கூறியது: கடன் உச்சவரம்பை உயர்த்த நாங்கள் சம்மதித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை. பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறினர்.
அமெரிக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. முக்கியமான இந்த கடன் விடயத்தில் இரு கட்சிகளும் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதை வைத்துத்தான் அத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு அமையும்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரசு செலவீனங்களைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துத்தான் குடியரசுக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த ஒத்துழைத்தால் அவர்களது வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொண்டதாகிவிடும். ஆனால் ஆகஸ்ட் 2ம் திகதிக்குள் கடன் உச்சவரம்பை அதிகரிக்கவில்லையென்றால், அமெரிக்க அரசு புதிய கடன்களைப் பெற முடியாது.
இதனால் பழைய கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கும், பிற செலவுகளை எதிர்கொள்ள முடியாத நிலைக்கும் அமெரிக்க அரசு தள்ளப்படும்.
இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். சர்வதேச அளவிலும் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.