சென்ற ஜூலை 11 அன்று கருத்தரங்கு ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலர் வெளியிட்ட தகவலின் படி அன்று வரை 40 கோடி விண்டோஸ் 7 உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.10 கோடி ஆபீஸ் 2010 பதிப்புகள் விற்பனை ஆகி உள்ளன. ஆபீஸ் 365 புரோகிராமினை சோதனை முறையில் இயக்கிப் பார்த்த நிறுவனங்களின் எண்ணிக்கை 50,000.
மேலும் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் எதிர்கால கணணி செயல்பாட்டினைத் தெரிவிப்பதாக இருந்தன.க்ளவுட் கம்ப்யூட்டிங் முறைக்குத் தன் கூட்டு தொழில் நிறுவனங்கள் விரைவில் மாறிக் கொள்ள மைக்ரோசாப்ட் விரும்புகிறது.
தன் வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 7, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, ஆபிஸ் 2010க்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட் விரும்புகிறது.
அப்படி மாறினால் தான் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 மற்றும் ஆபீஸ் 15க்கு இவர்கள் எளிதாக மாற முடியும் என எதிர்பார்க்கிறது.