ஹாரி பாட்டர் கதைகள் கடந்த பத்தாண்டுகளாக வசூலில் புதுப்புது சாதனைகளைப் படைத்து வருகின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைக்கும் விதமாக, இந்த ஆண்டு வெளியான ஹாரிபாட்டரின் இறுதி பாகம் ரூ 4500 கோடியை (இந்திய ரூபாக்கள்) அள்ளிக் குவித்துள்ளது. முதல் ஹாரி பாட்டர் கதை 2001ல் வெளியானது. வசூலில் புதிய சரித்திரம் படைத்தது அந்தப் படம். பத்தாண்டுகளுக்கு முன்பே ரூ 10526 கோடியை. (இலங்கை ரூபாக்கள்) குவித்தது அந்தப் படம்.
அதற்கடுத்து 7 பாகங்கள் வந்துவிட்டன. சிறுவர் முதல் பெரியவர் வரை அத்தனை ரசிகர்களையும் மயக்கி கட்டிப் போட்டது இந்த ஹாரிபாட்டர் என்றால் மிகையல்ல.சமீபத்தில் இந்த வரிசையில் எட்டாவது படமாக ஹாரிபாட்டரும், உயிர் ரகசியமும் (“ஹாரி பாட்டர் அண்டு டெத்லி ஹாலோவ்ஸ்” பார்ட்-2) என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ள இந்தப் படம் பரபரப்பாக ஓடி உலகெங்கும் வசூலில் சக்கை போடு போடுகிறது. இப்படம் இதுவரை ரூ.10800 கோடி வசூல் செய்து 'பாக்ஸ் ஆப் கிட்' பட்டியலில் இடம் பெற்றுவிட்டது.
சர்வதேச பாக்ஸ் ஆபீஸில், இந்த ஆண்டு வெளிவந்த பைரேட் ஆப் தி கரீபியன் - 3 என்ற படம் முதலிடம் வகிக்கிறது.இது ரூ.11124 கோடி (இலங்கை ரூபாக்கள்) வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக ஹாரிபாட்டர் ரூ.10800 கோடி (இலங்கை ரூபாக்கள்) வசூல் செய்து 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. அவதார் இதைவிட அதிகமாக வசூலித்திருந்தாலும், இந்த ஆண்டில் மிக அதிக வசூலைப் பெற்றுள்ளது ஹாரிபாட்டர்.