நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறையில் அவதானித்து உள்ளது. தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆராயப்பட்டு இருக்கின்றன.அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதியில் வெளியிட்டு உள்ளது. இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது.
சென்ற இரண்டு ஆண்டுகளில், யு-ட்யூப் வீடியோ தளம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் யு-ட்யூப் அப்ளிகேஷன்கள் பதிந்து விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர்.
யு-ட்யூப் மொபைல் தளம் இப்போது மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது.
நாளொன்றுக்கு 20 கோடி வீடியோ காட்சி பைல்கள் அப்லோட் செய்யப்படுவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 2010 ஜனவரியில் இருந்ததைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாகும்.
மேலும், யு-ட்யூப் தன் லைப்ரேரியில் மியூசிக் வீடியோ பைல்களைத் தொடர்ந்து இணைத்து வருகிறது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் பைல்களாகும்.
இது போன்ற வீடியோக்களை டவுண்லோட் செய்து பார்ப்பதற்கு, மிக மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நமக்கு பிடித்த இடங்கள், மனிதர்கள், இயற்கை காட்சிகள் மற்றும் பலவற்றை புகைப்படங்களாக எடுத்து வைத்திருப்போம். அதுபோல கணனியில் உள்ள படக்காட்சிகளை அல்லது சில முக்கியமான கோப்புகளை படம் பிடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத இணையபக்கங்களை இமேஜ் வடிவில் சேமித்து வைக்க நினைப்போம். அந்த நிலையில் நாம் படவடிவில் மாற்ற நினைக்கும் பக்கத்தினை திறந்து கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி பெயின்ட், போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவியுடன் மட்டுமே அந்த பக்கத்தை இமேஜ் பைலாக மாற்ற முடியும்.
நாம் இவ்வாறு செய்வதால் நேரதாமதம் மட்டுமே ஏற்படும். இதற்கு பதிலாக எந்த பக்கத்தை மட்டும் இமேஜ்ஜாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கிரீன்சாட் மென்பொருள் மூலம் இமேஜ் பைலாக நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் படமாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்கிரீன்சாட் மென்பொருட்கள் பலவும் சந்தையில் கிடைக்கிறன. ஆனால் எந்த மென்பொருளும் சிறப்பானதாக இல்லை. இலவச (Freeware) மென்பொருளாக RapiCapWin என்ற மென்பொருள் கிடைக்கிறது.
இந்த மென்பொருளின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நாம் படமாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளான jpg, gif, bmp போன்ற பைல் பார்மெட்டுக்களை ஆதரிக்க கூடியது. இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்தவுடன், ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து Capture பொத்தானை அழுத்தவும். உடனே இமேஜ் பைல் உருவாகிவிடும். இதில் சிறப்பம்சம் என்னவெனில் தேவையில்லாத Capture செய்துவிட்டோம் எனில் உடனே டெலிட்டும் செய்து கொள்ள முடியும்.
வேர்ட் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில், அதன் வரிகளுக்கு எண்களை அமைக்க முடியும். அவ்வாறு அமைக்காவிட்டாலும் வேர்ட் ஆவணத்தின் வரி எண்களைக் கீழாகக் காட்டும்.
பக்க எண், பிரிவு எண், மொத்தப் பக்கத்தில் கர்சர் இருக்கும் பக்க எண், அடுத்து வரி எண், கேரக்டர் எண் என வரிசையாகக் காட்டப்படும். பலர் இந்த வரி எண்கள் குறித்து கவலைப்படுவதோ, பயன்படுத்துவதோ இல்லை.
எப்போதும் பத்திகள், பிரிவுகள், பக்கங்கள் என்றே பார்க்கிறோம். ஆனால் வேர்ட் பக்க எண்கள் மற்றும் வரிகளைச் சுட்டிக் காட்டிச் செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட பக்கம் மற்றும் வரிக்கு செல்லும் வசதி வேர்டில் தரப்பட்டுள்ளது.
டாகுமெண்ட்டினைத் திறந்து எப்5 ஐ அழுத்துங்கள். Go To What என்ற பிரிவில் Line என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Enter Line Number என்பதில் செல்ல வேண்டிய வரி எண்ணை டைப் செய்திடவும். அடுத்து Go To என்பதில் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கர்சர் அந்த வரிக்குச் செல்லும்.
இதில் இன்னொரு வசதியும் உள்ளது. உங்கள் கர்சர் உள்ள வரிக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ உள்ள வரிக்கு நீங்கள் செல்ல விரும்பலாம். எடுத்துக்காட்டாக கர்சர் உள்ள வரிக்கு பத்து வரிகள் பின்னால் செல்ல வேண்டும் எனில், Line என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், Enter Line Number என்பதில் +10 என டைப் செய்து, அடுத்து எணி கூணி என்பதில் கிளிக் செய்திடவும்.
கர்சர் பத்து வரி பின்னதாகச் செல்லும். முன்பகுதியில் 7 வரிகள் முன்னதாகச் செல்ல வேண்டும் எனில் –7 என அமைத்து கிளிக் செய்திடலாம்.
நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இவை உண்மை தான்.
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.
நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் பின்வருமாறு:
1. நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்ட் நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.
2. நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.
3. மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.
4. நகங்கள் வெளிறி இருந்தால் இரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.
எகிப்தில் தொடரும் போராட்டம்: பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு. எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 150க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டுத் தகல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் ஏறக்குறைய ஒரு வாரமாக பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டன. தடியடியும் நடத்தப்பட்டது. நேற்று அரசுக்கு எதிரான கலவரம் உச்சக் கட்டத்தை எட்டியது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் சிறைகளை உடைத்து தப்பி ஓடினர். கடைகளும், வணிக நிறுவனங்களும் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகின்றன.
கலவரத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை இராணுவப் படையினர் மூலம் அடக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ள அதிபர் ஹோஸ்னி முபாரக் இன்று இராணுவ தலைமையகத்திற்கு சென்றார். அங்கு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை அதிபர் ஒமர் சுலைமான் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து வீதிகளில் கூடுதல் இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஆர்ப்பாட்டம் நாடுபூராகவும் இடம்பெற்று வருவதால் கெய்ரோ, அலெக்சாண்டியா, சூயஸ் உட்பட நாட்டின் பல நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பதவி விழக மறுத்துவரும் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது அமைச்சரவையை கலைத்து புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளார். இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த அகமது ஷாபிக்கை பிரதமராக அறிவித்துள்ளார்.
எகிப்து நிலைமைகள் குறித்து அந்நாட்டு தூதுவரை அழைத்து பேச்சுவார்த்தை. எகிப்து நிலைமைகள் குறித்து அந்நாட்டு தூதுவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கான எகிப்து தூதுவரை அழைத்து அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டு மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எல்பராடி விரைவில் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்படுவார் என தாம் எதிர்பார்ப்பதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் கள்மி ரே தெரிவித்துள்ளார்.எகிப்தின் தற்போதைய நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடலுக்குள்ளே காணப்படும் மிகவும் நீளமான பாலத்தை கட்டிய உலக சாதனையை நிலைநாட்டி உள்ளது சீனா. இப்பாலம் The Qingdao Haiwan Bridge என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது. கிழக்குச் சீனாவில் Shandong மாகாணத்தில் உள்ள Qingdao என்கிற நகரத்தையும்,
suburban Huangdao மாவட்டத்தில் உள்ள Jiaozhou Bay நகரத்தின் வட பகுதியையும் இது கடல் வழியாக இணைக்கின்றது.
இது ஐந்து கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தை கொண்ட பாலம் ஆகும். கடந்த வருடம் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.
ஒரு நாளில் 30,000 இற்கும் அதிகமான கார்கள் இதன் ஊடாக பயணிக்க முடியும்.
தரை வழிப் பாதையால் சுற்றிச் செல்லாமல் இப்பாலம் ஊடாக பயணிக்கின்றமையால் சுமார் 25 நிமிடங்களை பயணிகள் சேமிக்க முடிகின்றது. நான்கு வருடங்களில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
8.6 பில்லியன் அமெரிக்க டொலர் வரை செலவாகி உள்ளது.10,000 தொழிலாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
32 நாய்களை பழி வாங்கிய மனிதன். தெரு நாய் ஒன்றிடம் கடி வாங்கிய தாய்வான் நாட்டு மனிதர் ஒருவர் இதற்குப் பழிவாங்கும் வகையில் 32 தெரு நாய்களுக்கு நஞ்சு ஊட்டப்பட்ட உணவை கொடுத்து உள்ளனர்.18 நாய்கள் இறந்து விட்டன. கோழி எலும்புத் துண்டுகளில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து இருக்கின்றார்.
இவர் இவ்வுணவை நாய்களுக்கு வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் மாயமாக மறைந்து போனார்.இரு நாட்கள் இவ்வாறு செய்து இருக்கின்றார்.இவர் கைது செய்யப்பட்டு விட்டார்.
நாயிடம் கடி வாங்கியதால் ஏற்பட்ட கோபத்தில் பழி வாங்கினார் என்று பொலிஸாருக்குக் கூறினார்.
கடல் அலையின் உருவத்தில் விசித்திரமான பாறை! மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Hyden என்கிற நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது ஒரு விசித்திரமான பாறை.இப்பாறை கடல் அலையின் உருவத்தில் அமையப் பெற்றிருப்பதே மேற்சொன்ன விசித்திரம் ஆகும்.இதனால் இப்பாறையை ஆங்கிலத்தில் Wave Rock என்று அழைக்கின்றனர். இப்பாறையின் உயரம் 15 மீற்றர்.நீளம் 110 மீற்றர்.படங்களைப் பாருங்கள்.
சீனாவில் லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு மரண தண்டனை. சீனாவின் ஒரு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள லியோனிங் மாகாண மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் சாங் யோங்(56).
கடந்த 2000 முதல் 2009 வரை இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 23 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் 720 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அரசு ஒப்பந்தங்களையும் பணி உயர்வையும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக அவர் சம்பாதித்த அனைத்தும் அரசால் கைப்பற்றப்பட்டன. பீஜிங் நகர இரண்டாவது இடை நிலை மக்கள் கோர்ட் அவரது வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்.
இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரதிகள் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. அவற்றை யாராலும் அழிக்க முடியாது என விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். எந்த விதத்திலும் தன்னுடைய நோக்கத்திலிருந்து விலகுவதில்லை என அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு தகவல் வழங்குவதற்கான வழியைத் தான் நான் கையாளுகிறேன். வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பிலும் நாம் தகவல் வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர்களின் காலில் கண்காணிப்பு கேமரா: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக்கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், "எலக்ட்ரானிக் டேக்" எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது டிரி வேலி பல்கலைக் கழகம். அமெரிக்க சட்டப்படி, இப்பல்கலைகழகமானது ஆண்டுக்கு 144 விசாக்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஆனால், இந்தாண்டு சட்ட விரோதமாக மாணவர்களிடம் அதிகளவில் பணத்தைக் கறந்து, போலி விசாக்கள் மூலம் மாணவர் சேர்க்கையை பல்கலை நடத்தியுள்ளது.
இப்பிரச்னையில் மாட்டியுள்ள 1,555 இந்திய மாணவர்களில் 750 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், வேறு வழியில்லாமல் தங்கள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அங்கேயே தங்கி, வேறு கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்காக முயன்று வருகின்றனர். அமெரிக்க குடியேற்றத் துறை இவர்கள் அனைவரிடமும் விசாரித்து வருகிறது.
இதற்காக இவர்களது காலில், எலக்ட்ரானிக் டேக் எனப்படும் மின்னணு கண்காணிப்புக் கருவியை அத்துறை கட்டி விட்டுள்ளது. பாதத்திற்கு மேல் வளையம் போன்ற எலக்ட்ரானிக் தகவல் தரும் கருவி மாட்டப்படுகிறது. மாணவர்கள் எங்குள்ளனர் என்பதை இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி இது பற்றி கூறியிருப்பதாவது: அமெரிக்க கொள்கைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் மோசடி செய்தது பல்கலைக் கழகம் தான். மாணவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள்.
அதனால் அவர்கள் மீது இரக்கம் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கைவிட வேண்டும். நேர்மையான மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் இந்திய அரசின் கவலை. அதற்காக அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்விவகாரத்திற்கு காரணம் போலி ஏஜன்டுகள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் தலைவர் கோமதி ஜெயராம் கூறுகையில், இந்தப் பிரச்னையில் அரசியல் ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த மாணவர்களை இங்குள்ள வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுவது அல்லது இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
டிரி வேலி பல்கலைக் கழகத்திற்கு படிக்கச் சென்றுள்ள மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் இப்பிரச்னையில் இந்தியத் தூதரக உதவிகளைப் பெறுவதற்காக www.indianembassy.org என்ற இ-மெயில் முகவரியை வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து minca@indiagov.org மற்றும் edu@indiacgny.org என்ற முகவரிகளுக்குக் கடிதம் எழுதி இந்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறலாம்.
போதையில் இருக்கும் சாரதிகளை காட்டி கொடுக்கும் கார்: அமெரிக்காவின் புதிய முயற்சி.
தற்போது மது அருந்தி விட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் விபத்துகள் அதிகரித்து பலரின் உயிர்கள் பறிபோகின்றன. அதை தடுக்கும் வகையில் புதிய வகை கார் ஒன்று அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் குடிபோதையில் இருக்கும் சாரதியை கண்டுபிடித்து தருகிறது. இந்த அதிநவீன காரில் மனித உடலின் உணர்வுகளை பதிவு செய்யக் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. சாரதியின் மூச்சுக் காற்று, அல்லது தோல் பகுதியின் உணர்வு மூலம் சாரதி குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறிய முடியும்.
இது தவிர காரின் சக்கரங்களை இயக்க கூடிய ஸ்டீயரிங், மற்றும் கதவு பூட்டுகளிலும் பொருத்தலாம். அதன் மூலம் ஓட்டுனரின் ரத்தத்தில் கலந்து இருக்கும் ஹெல்கஹோலின் விகிதத்தை கண்டறிந்து அவர் போதையில் உள்ளாரா? என கண்டறிய முடியும்.
இந்த கார் வெள்ளோட்ட சோதனை நடந்தது. அமெரிக்காவில் உள்ள வால்கம் நகரில் நடந்த இந்த சோதனை ஓட்டத்தை அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ரோய் லாகூட் நேரில் வந்து பார்த்தார்.
இக்காரை தயாரித்த நிபுணர்களை அவர் வெகுவாக பாராட்டினார். இந்த புதிய முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. இது போன்ற காரை புழக்கத்தில் விடவேண்டும். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.
சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது.
தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது.
இந்த நரம்புக்கூட்டத்தை "ட்ரேஸ்' என்று (Trace)கூப்பிடுகிறார்கள். நமக்கு தற்காலிக நினைவுக்கென்று ஒரு ட்ரேஸும் அதே சமயம் நிரந்தர நினைவுக்கென்று இன்னொரு ட்ரேஸும் ஒரே சமயத்தில் மூளையில் உருவாகிறது.
மூளையில், தற்காலிக ட்ரேஸானது காம்மா கதுப்பிலும் நிரந்தர ட்ரேஸ்கள் ஆல்ஃபா பீட்டா என்ற கதுப்பிலும் காணப்படுகின்றன. இதே அமைப்பு ஈக்களிலும் காணப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு சம்பவத்தை அல்லது தகவலை முதல் முறையாக கேட்கும்போது அல்லது படிக்கும்போது அது இரண்டுவித டிரேஸிலும் பதிகிறது. தற்காலிக டிரேஸ் வேகமாக உருவானாலும் அது உடனே கலைந்து விடுகிறது.
நிரந்தர டிரேஸ் மெல்ல ஆசுவாசமாக உருவாகிறது. அது முடிவடையவேண்டுமானால் மீண்டும் அதே சம்பவத்தை அல்லது படித்ததை நாம் அனுபவிக்க வேண்டும். நிரந்தர டிரேஸ் நரம்புக்கூட்டம், இரண்டாம் முறை, மூன்றாம் முறை தூண்டப்படும்போது அதன் டிரேஸ் முற்றுப்பெறுகிறது. முற்றுப் பெற்றதும் அது நிரந்தர நினைவாகிவிடுகிறது.
தற்காலிக டிரேஸ் எத்தனை முறை தூண்டப்பட்டாலும், அது உடனே கலைந்துவிடுகிறது. ஈக்குக்கூட தற்காலிக, நிரந்தர நினைவுகள் இருக்கிறது என்று கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஈயை சின்னக் குழாயில் வைத்து அதில் கெட்ட நாற்றமுடைய காற்றை அனுப்பும்போது கூடவே லேசாக மின்சார ஷாக் கொடுப்பார்கள். அதற்கப்புறம் ஈக்கு ஷாக் கொடுக்கும்போதெல்லாம் துர்நாற்றக் காற்றை அந்த ஈ எதிர்பார்க்கும். அல்லது துர்நாற்றக் காற்று வரும்போதெல்லாம் ஷாக் அடிக்குமோ என்று அஞ்சும்.
ஈயின் காம்மா கதுப்பிலும் ஆல்ஃபாபீட்டா கதுப்பிலும் இந்த அனுபவம் பதிகிறது என்று தெரிந்துகொண்டனர். நுட்பமான கத்தி மூலம் இந்த கதுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி நீக்கும்போது அதற்கேற்ப தற்காலிக அல்லது நிரந்தர நினைவுகள் மறைவதைக் கவனித்தனர். ஒரு படி மேலே சென்று, நிரந்தர நினைவினை சேமிக்க உதவும் என்ஸைமினையும் அதற்கான ஜீனையும் கண்டுபிடித்தனர்.
என்ன ஆச்சரியம்! மனிதர்களுக்கும்கூட அதே ஜீனும் அதே என்ஸைமும் இருக்கிறது. நினைவினை சேமிக்கும் தந்திரம் ஈயில் தோன்றி பின் மனிதன் வரை வளர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள்.
சமூக வலைத்தளங்களின் ராஜாவான ஃபேஸ்புக் இணைய தளம் இன்று புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் ஸ்மார்ட் போன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த ஃபேஸ்புக்கானது தற்போது சாதாரண மொபைல் பக்கமும் திரும்பியுள்ளது.
இந்த புதிய அப்ளிகேசன் மூலம் ஃபேஸ்புக் இணைய தளத்தை இலகுவாக வலம்வர முடியும். குறிப்பாக Profile, Newsfeeds, Friend list, Photo என்பவற்றை இலகுவாகவும் தெளிவாகவும் உங்கள் மொபைல் தொலைபேசியில் பாவிக்கக்கூடியதாக இருக்கும்.
குறிப்பாக சில கையடக்க தொலைபேசி வழங்குனர்கள் இந்த சேவையினை எந்தவித கட்டணமும் இல்லாமல்(GPRS கட்டணம்) இலவசமாக முதல் 90 நாட்களுக்கு வழங்குவார்கள் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வழங்குனர்களின் பட்டியல் பின்வருமாறு,
இலவச சேவையினை இப்போது வழங்கும் நிறுவனங்கள்
Dialog (Sri Lanka)
Life (Ukraine)
Play (Poland)
StarHub (Singapore)
STC (Saudi Arabia)
Three (Hong Kong)
Tunisiana (Tunisia)
Viva (Dominican Republic)
Vodafone (Romania)
மிக விரைவில் கீழ்வரும் வழங்குனர்கள் இந்த இலவசச் சேவையினை வழங்குவார்கள்
Mobilicity (Canada)
Reliance (India)
Telcel (Mexico)
TIM (Brazil)
Vivacom (Bulgaria
இந்த புதிய அப்ளிகேசனானது Snaptu நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் 2500 வகைக்கும் மேலான கையடக்க தொலைபேசிகள் பாவிக்ககூடியதாகவும் இருக்கும் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. குறிப்பாக Nokia, Sony Ericsson, LG போன்ற பிரதான கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் இந்த அப்ளிகேசனை பயன்படுத்தலாம் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்த புதிய அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய இந்தm.fb.snaptu.com/fமுகவரிக்கு உங்கள் கையட்டக்க தொலைபேசியினூடாக சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இமேஜ் பைல்களான BMP, JPEG, TIFF, PNG பைல் பார்மெட்டுக்களை நாம் எதாவது ஒரு இமேஜ் எடிட்டரை கொண்டு மட்டுமே காண முடியும். இந்த இமேஜ் எடிட்டர் சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் பிடிஎப் பைலாக கூட மாற்றிக்கொள்ள முடியும்.
நம்முடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நம்முடைய ஈ-மெயில் முகவரியிலேயோ அல்லது ஆன்லைன் கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைலாக மாற்றி இருப்பின் நாம் அந்த இமேஜ்களை ஒரே பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32,64) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் பிடிஎப் பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது பவர்பாயின்ட் பிரசன்டேசனை போன்றது.
நம்பவே முடியாத கண்கட்டு வித்தை ! மேஜிக் என்று சொல்லப்படும் மாயாஜாலம் அல்லது கண்கட்டு வித்தைகள் பல விதம். இதில் பலர் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
சிலர் ஏற்கனவே செய்துவைத்த பொருட்களை எடுத்து அதில் வித்தைகளைச் செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் இங்கே அரங்கத்தில் எல்லோரும் பார்கும் போதே வினோதமான கண்கட்டு வித்தை ஒன்று செய்துகாண்பிக்கப்பட்டுள்ளது இதனைப் பார்த்த அனைவரும் கதிகலங்கி வியப்பில் ஆழ்ந்துபோனார்கள்.
மாடியில் வசிப்பவர்களை துரத்த புதிய உத்தி! ஆர்ஜென்டீனா நாட்டில் Martillo என்று ஒரு குட்டித் தீவு உண்டு.
இதை பென்குயின்களின் தீவு என்றும் அழைக்க முடியும். இத்தீவு முழுவதும் பென்குயின்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை இத்தீவு பெரிதும் ஈர்க்கின்றது.
2014- ல் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும்.
ஐவரி கோஸ்ட் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களால், கோகோ பீன்ஸ் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் 2014- ல் உலகில் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சாக்லேட் தயாரிக்க முக்கியமான பொருள் கோகோ. கோகோ பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் கோகோ தான் சாக்லேட்டின் இன்றியமையாத மூலதனப் பொருள்.
உலகளவில் விளைவிக்கப்படும் கோகோ பீன்ஸில் பாதி ஐவரி கோஸ்ட் நாட்டில் இருந்து தான் பெறப்படுகிறது. தற்பொழுது அந்நாட்டு அரசியலில் சிக்கல்கள் உள்ளன. இதனால் விவசாயிகள் கோகோ பீன்ஸ் தயாரிப்பை பாதியளவாக குறைத்துள்ளன.
பலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். விளைவிக்கப்படும் சிறிதளவு கோகோவையும் கானா நாட்டிற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கின்றனர். சர்வதேச நாடுகளுக்கு கோகோ பீன்ஸை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அதிபர் அலஸ்சேன் குவட்டாரா தடை விதித்துள்ளார்.
இதன் எதிரொலியாக நடப்பு மாதத்தில் மட்டும் கோகோ விலை 10 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டிரக் வண்டியில் 6 இலங்கை அகதிகள் கண்டுபிடிப்பு.
டிரக் வண்டியில் சிக்கியிருந்த நிலையில் 219 அகதிகள் மெக்சிகோ அதிகாரிகளினால் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 6 இலங்கை அகதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பாற்றப்பட்டவர்களில் மேலும் நான்கு பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனையவர்கள் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 33 பெண்களும், குழந்தைகள் 9 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
டிரக் வண்டியை சோதனை செய்ய சாப்பஸ் பொலிஸார் முயற்சித்த நிலையில் டிரக் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்க முன்வந்துள்ளனர். சோதனையிடுவதற்கு டிரக் வண்டியை பொலிஸார் நிறுத்துமாறு சமிக்ஞை செய்தபோது சாரதி டிரக் வண்டியை நிறுத்தாது சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸார் லொறியை மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த லொறியிலிருந்து காப்பாற்றப்பட்ட அகதிகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மூளை கேன்சர்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை.
செல்போன் அதிகளவில் பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிரியக்கத்தால் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம்(WHO) நடத்திய ஆய்வில் தினமும் அரைமணிநேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு நோய் பாதிக்கும் தன்மை 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பயன்படுத்துவோருக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கும் எனவும், அவர்களுக்கு மூளை கட்டி உருவாகும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக மொபைல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
64.8 மில்லியன் வயது உடைய டைனோசரின் எலும்புகளின் எச்சங்களை கண்டு பிடித்து கனடா சாதனை!
64.8 மில்லியன் வயது உடைய டைனோசர் ஒன்றின் உடைய எலும்புகளின் எச்சங்கள் கனடாவின் Alberta பல்கலைக்கழகத்தினர் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இந்த டைனோசர் சுமார் 700, 000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கின்றது. டைனோசர்கள் தாவர உண்ணிகள். டைனோசர்கள் காலநிலை மாற்றங்கள் காரணமாக முற்றாக அழிந்து விட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். "சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே" என்று சலித்துக் கொள்ளவேண்டாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ்ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த்தனர்.
மனக்கற்பனைக்கும் செயல் திறமைக்கும் ஏதாவது சிறிதளவாவது சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார்.
கம்ப்யூட்டர் திரையில் நிறைய எழுத்துக்களுக்கிடையே மறைந்திருக்கும் சில எழுத்துக்களை மட்டும் காட்டச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களை கம்ப்யூட்டர் திரையை இரு கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளச் சொன்னார்கள்.
அடுத்து அதையே முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதை அவர்கள் நிஜமாக செய்ய வேண்டியதில்லை சும்மா மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்.
விளைவு, திரையை பின்னால் பிடித்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்தபோது மட்டும் மாணவர்கள் அதிக அளவில் எழுத்துக்களை அடையாளம் காட்டினார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! உளவியல்படி நமக்கு கையருகே இருக்கும் பொருளைப் பற்றித்தான் நாம் அதிக நேரம் கவனிக்கிறோம்.
அப்பால் (மனத்தளவில்கூட) இருப்பதை குறைந்த அளவே நினைக்கிறோம். ஒரு வகையில் கையருகே இருக்கும் பொருள்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால், முடிவெடுப்பதில் இடைஞ்சலாகவே உள்ளன.
அவை மறைவாக இருப்பதாக நினைக்கும்போது அது பற்றிய சிந்தனை சிதைவில்லாமல் நடப்பதாக சொல்கிறார்கள். மனக்கற்பனை நமது செயலை சிறிதளவாவது பாதிக்கும் என்பது இந்தச் சோதனையிலிருந்து உறுதியாகிறது.
பல்லிகளுக்கு திடீரென்று வால் துண்டிக்கப்பட்டால் மீண்டும் வளர்ந்துவிடும். அதுபோல் மனிதர்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் வளரச் செய்ய நவீன வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நீரிலும், நிலத்திலும் வாழும் இருவாழ்வி உயிரினங்கள் உள்பட சில உயிரினங்களில் மட்டும் இழந்த உறுப்புகள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகின்றன? என்று ஆராய்ந்தபோது அதற்கு காரணமாக இருக்கும் ஜீன்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
`பி21' என்று அந்த ஜீன்களுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்த ஜீன்கள் தான், ஹீலிங் முறையில் பாதிக்கப்பட்ட செல்கள் மறு உற்பத்தியாக காரணமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் தான் எலிகளின் உடலில் காயம்பட்ட தோல் பகுதி மீண்டும் வளர்கிறது. பல்லியினங்களிலும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் மறுபடியும் வளர்ந்துவிடுகிறது.
எனவே இந்த ஜீன்களைக் கொண்டு தேய்ந்து போன மற்றும் பாதிக்கப்பட்ட பாகங்களை வளர வைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. மனிதனைப் பொருத்தவரையில் இது சில நேரங்களில் தான் சாத்தியமாகும். காயம்பட்ட இடங்களில் செல்களை மீண்டும் வளர வைக்க முடியும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
செயல்படாத பாகங்கள், தேய்ந்த பாகங்களை புதுப்பிக்கும் முறை இன்னும் அறியப்படவில்லை. எதிர்காலத்தில் பல்வேறு அதிசயிக்கத்தக்க மாற்றங்களை இந்த `பி21 ஜீன்கள்' மூலம் செய்துகாட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர்கள் பென்சில்வேனியா நாட்டின் பிளேடில்பியா நகரில் உள்ள விஸ்டார் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள்.
நம்மால் 40 டிகிரி வெப்பத்தையே தாங்க முடியவில்லை. இந்நிலையில் 3,200 டிகிரி வெப்பம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விண்ணில் மிக வெப்பமான கிரகமாக இது கருதப்படுகிறது. இங்கிலாந்தின் ஸ்டாபோர்டுஷயரில் உள்ள கீலே பல்கலைகழக பேராசியர் அலெக்சிஸ் ஸ்மித் தலைமையிலான குழுவினர் இக்கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகம் டபிள்யூஏஎஸ்பி 33பி அல்லது எச்டி15082 என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2006 ம் ஆண்டிலேயே இக்கிரகம் இருப்பதை அறிவித்திருந்தனர். ஹேனரி தீவிலிருந்து வில்லியம் தொடர்ந்து இதை கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக வெப்பநிலையை உறுதி செய்துள்ளனர். இந்த கிரகமானது ஜீபிடர் கிரகத்தைப் போன்று 4 மடங்கு பெரியது. 380 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இது தன்னைத் தானே சுற்றி வர 29.5 மணி நேரம் ஆகிறது.
செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில் சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன் சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும் போது, அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ள இதன் விலை ரூ.850 ஆகும்.
ஆண்டுதோறும் ஒரு முறை, உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெறும். இதனை "Consumer Electronics Show" என அழைக்கின்றனர். இந்த ஆண்டு லாஸ்வேகாஸ் நகரில் இந்த கண்காட்சி நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் சாதனங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். இதன் மூலம் வர்த்தகர்கள் அவற்றிற்கான விற்பனை உரிமையினைப் பெற போட்டி போடுவார்கள்.
மேலும் சில சாதனங்களைத் தாங்கள் தயாரிக்கும் சாதனங்களில் இணைக்கவும் பலர் இந்தக் கண்காட்சியில் வட்டமிடுவார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அரிய கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை, வரும் ஆண்டில் நமக்குக் கம்ப்யூட்டர் சார்ந்து கிடைக்க இருப்பவை பற்றி இங்கு காணலாம்.
1. கேம்ஸ் கம்ப்யூட்டர்: விளையாட்டை மையப்படுத்தி தனியே சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. Razer Switchblade என்ற பெயரில் 7 அங்குல அளவில் மல்ட்டி டச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுடன் கூடிய, நொட்புக்கினைக் காட்டிலும் சற்றுப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று தயாராகி விற்பனைக்கு வருகிறது.
இதுவரை வெளியிடப்படாத ஆட்டம்(Atom) ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம், 128 ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க், வை-பி, 3ஜி எனப் பல புதிய வசதிகளைத் தரும் பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நொட்புக் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படும் விலையில் இதனை எதிர்பார்க்கலாம்.
2.ப்ராசசர்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஒரு சிப்பில் இணைத்துப் பதியப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் தரப்படும் விதம் மற்றும் இயக்கத்தில் அதிரடி மாற்றங்கள் வரலாம்.
இதனை SoC(System on Chip) என அழைக்கின்றனர். சிஸ்டம் சிப்பிலேயே தரப்படுவதால், கம்ப்யூட்டரின் பல பாகங்களுக்கும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தகவல் பரிமாற்ற நேரம் முற்றிலுமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், கம்ப்யூட்டர் மிக அதிக வேகத்தில் இயங்கும். டேப்ளட் பிசிக்களுக்கு இது மிக உகந்ததாக இருக்கும்.
3. மெமரி: இந்த ஆண்டு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்கள் எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில் இருந்தன. சாம்சங் நிறுவனம் உலகின் முதல் DDR4 RAM சிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பலர் இன்னும் DDR2 RAM சிப்பினையே பயன்படுத்தி வருகிறோம்.
சாம்சங் வெளியிட்டுள்ள இந்த சிப்பில் 30 நானோ மீட்டர் சிப்கள் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 RAM சிப்பினைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இந்த சிப்கள் இயங்குகின்றன. ஆனால் குறைவான மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன. ஒரு விநாடியில் 2.133 கிகா பிட்ஸ் தகவல்களைப் பரிமாறுகின்றன. இதனை 4 கிகா பிட்ஸ் ஆக மாற்றித் தர முடியும் என சாம்சங் அறிவித்துள்ளது.
4. ஸ்டோரேஜ்: உங்களுக்கு வேடிக்கையான ஒரு சாதனம் வேண்டுமென்றால், லெக்ஸார் நிறுவனம் வழங்கும், சாதாரண பிளாஷ் ட்ரைவ் அளவு உள்ள Echo MX என்னும் ஸ்டோரேஜ் சாதனத்தைப் பார்க்கலாம். இதன் மெமரி அளவு 128 ஜிபி. விநாடிக்கு 32 எம்பி தகவல்களைப் பரிமாறுகிறது.
17 எம் பி அளவில் எழுதுகிறது. இது உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினால், Victorinox Secure என்ற நிறுவனம் வழங்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்ட பிளாஷ் ட்ரைவினைக் காணலாம்.
இதன் கொள்ளளவு 256 ஜிபி. இது ஒரு ஸ்விஸ் ஆர்மி கத்தி போன்ற தோற்றத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவும் போதவில்லை என்றால், Rocstor என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 750 ஜிபி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்ட அனைத்தும் புதியனவாகவும், அனைவரின் கவனத்தைக் கவர்வதாகவும் இருந்தாலும், ஒரு சாதனம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. அது வெறும் கம்ப்யூட்டர் கேபின் தான்.Zalmann நிறுவனம், ஜி.எஸ். 1200 என்ற பெயரில் அறிமுகப்படுத்திய கம்ப்யூட்டர் கேபின். இது ஏதோ சயின்ஸ் மூவியில் அறிமுகமாகும்சாதனம்போலத்தோற்றமளிக்கிறது. இதில் ப்ராசசர்களைக் குளிரவைக்க நான்கு மின்விசிறிகள், ஏழு ஹார்ட் டிஸ்க்கினை அமைக்க வசதி, மேலாக, எளிதாக அணுக நான்கு யு.எஸ்.பி. போர்ட், இ சடா (eSATA) சப்போர்ட், திரவம் பயன்படுத்தி கூலிங் செய்திட வசதி எனப் பல புதிய அம்சங்களைக் கொண்டதாக உள்ள இந்த கேபின் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
இன்னும் பல புதிய சாதனங்கள், லாஸ்வேகாஸ் கண்காட்சியில் இடம் பெற்றன.