Saturday, March 3, 2012

ஸ்கைப் (Skype) புதிய பதிப்பு!


உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணியில் உள்ளது.இதில் P2P (peertopeer) என்னும் தொழில் நுட்பம் கையாளப்படுகிறது. தொலைபேசிக் கட்டணமாக அதிகம் செலுத்தும் சுமையிலிருந்து விடுபட பலரும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.


இந்த அப்ளிகேஷன் புரோகிராமின் புதிய பதிப்பு ஸ்கைப் 4.2.0.152 அண்மையில் பிப்ரவரி 25ல் வெளியானது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம் பைலின் அளவு 1.6 எம்பி தான்.இதனைப் பெற ஸ்கைப் தளம் சென்று அங்குள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். இதற்கான பைல் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும். இதனை இறக்கிய பின், அதற்கான இன்ஸ்டலேஷன் பைலில், டபுள் கிளிக் செய்திடவும். தானாகப் பதியப்படும்.


இந்த புதிய பதிப்பு, ஸ்கைப்பைப் பயன்படுத்த தெளிவான யூசர் இன்டர்பேஸ் தருகிறது. மிக எளிதாகப் பயன்படுத்தலாம். புதிதாக ஸ்கைப் இணைய தளத்தில் புதிய ஹெல்ப் பிரிவு தரப்பட்டுள்ளது. இதில் அக்கவுண்ட் வைத்துள்ள தனிநபரின் தகவல்களை எளிதாக அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். பிற பயனாளர்களை விரைவாகத் தேடி தொடர்பு கொள்ள முடிகிறது.இதில் பல பைல்களை ட்ரான்ஸ்பர் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பேச்சொலி மிகத் தெளிவாக உள்ளது. சேட் வசதி, ஒரே நேரத்தில் ஐந்து பேர் கலந்துரையாடும் கான்பரன்ஸ் வசதி ஆகியவையும் மேம்படுத்தப்படுள்ளன.இதனை விண்டோஸ் 2000 சிஸ்டம் முதல் இன்றைய சிஸ்டம் வரை உள்ள கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். வீடியோ அழைப்புகளைப் பெற எக்ஸ்பி தேவை. பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இருந்தால், தொடர்பு மிகச் சிறப்பாக இருக்கும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF