Tuesday, March 27, 2012
உங்களது புகைப்படத்துடன் கூடிய அழகான தீமை உருவாக்க!
கூகுள் குரோம் உலாவியை அனைவரும் பயன்படுத்துவதற்கு அதன் எளிமை, வேகம், வசதிகள் தான் காரணம்.கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீமை உருவாக்கலாம்.
1. முதலில் இந்த லிங்கில் சென்று நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
2. அடுத்து New Tab க்ளிக் செய்தால் My Chrome Theme என்ற புதிய வசதி வந்திருக்கும் அதை க்ளிக் செய்யவும்.
3. ஓபன் ஆகும் விண்டோவில் START MAKING THEME என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
4. அடுத்து UPLOAD IMAGE என்பதை க்ளிக் செய்து கணணியில் சேமித்து வைத்திருக்கும் உங்கள் புகைப்படத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
5. அடுத்து ADJUST POSITION என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
6. அடுத்து Continue Step2 என்பதை க்ளிக் செய்யவும். இந்த பகுதியில் உலவியின் நிறங்களை உங்களின் விருப்பம் போல தெரிவு செய்து கொள்ளுங்கள்.
7. நிறங்களை தெரிவு செய்தவுடன் மேலே உள்ள Continue to Step 3 என்பதை க்ளிக் செய்யவும்.
8. இதில் கீழே உள்ள PREVIEW MODE க்ளிக் செய்தால் உங்களுடைய தீம் எப்படி இருக்கு என பார்த்து கொள்ளலாம்.
9. முடிவில் உங்கள் தீமுக்கு ஏதாவது ஒரு பெயர் கொடுத்து MAKE MY THEME என்ற பட்டனை அழுத்தவும்.
10. உங்கள் குரோம் தீம் உருவாகிவிடும். INSTALL MY THEME என்ற பட்டனை அழுத்தி உங்களுடைய தீமை நிறுவிக் கொள்ளுங்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF