
உலக அளவில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்ததில் ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அதிக அளவில் ஆயுதங்கள், இராணுவ தளவாடங்கள், நவீன போர்க் கருவிகள், விமானங்கள் போன்றவற்றை வாங்கி குவித்து வருகின்றன.அந்த வகையில் அதிக ஆயுதங்கள் வாங்கிய நாடுகளை ஸ்டாக்கோல்ம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனம்(எஸ்ஐபிஆர்ஐ) பட்டியலிட்டுள்ளது.அதில் கடந்த 2002-06ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2007-11ம் ஆண்டுகளில் உலக அளவில் பரிமாறப்பட்ட ஆயுதங்கள் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதில் ஆசிய பிராந்தியங்களின் இறக்குமதி மட்டும் 44 சதவீதம். ஐரோப்பா(19%), மத்திய கிழக்கு நாடுகள்(17%), வட, தென் அமெரிக்கா(11%), ஆப்ரிக்கா(9%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.2007-11ம் ஆண்டில் ஆசியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் 10 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தென்கொரியா(6%), சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 5 சதவீதம், சிங்கப்பூர்(4%) அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.மேலும் மொத்த சர்வதேச ஆயுத இறக்குமதியில் இந்த 5 நாடுகளின் பங்கு 30 சதவீதம். 2002-06ம் ஆண்டு காலத்துடன் ஒப்பிடுகையில், 2007-11ம் ஆண்டில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 38 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

