Saturday, March 10, 2012

மிக மோசமான நிலையில் சிரியா: வெளிநாட்டு இராணுவ தலையீடு கூடாது என்கிறார் கோபி அனான்!


சிரியாவில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தலையீடும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சிரியாவுக்கான ஐ.நா மற்றும் அரபு லீக்கின் சிறப்புத் தூதுவரான கோபி அனான் எச்சரித்துள்ளார்.டமாஸ்கசுக்கான தனது விஜயத்துக்கான திட்டம் குறித்து கோபி அனான் கூறுகையில், சிரியாவின் தற்போதைய நிலைமையை அரசியல் ரீதியாக மட்டுமே தீர்த்து வைக்கப்பட முடியும் என்று கூறியுள்ளார்.


மேலும் சிரிய மக்களின் ஆசைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், தீர்வு காண சிரியாவின் அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில் சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் 8500 பேர் பலியாகி இருப்பதாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.இறந்தவர்களில் 6,195 பேர் பொதுமக்கள் என்றும், 1,835 பேர் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிசார் என்றும், 428 பேர் புரட்சி படையை சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF