Tuesday, March 27, 2012

முஸ்லிம் என்ற காரணத்தால் ஹிஜாப் அணிந்த 5 பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை – அமெரிக்காவில் அராஜகம்!

அமெரிக்க கலிபோனியா மாநிலத்தில் ஒரு முஸ்லிம் பெண், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது . Shaima Alawadi என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தலையில் இரும்பால் அடித்து படுகொலை செய்துவிட்டு, “ நீங்கள் பயங்கரவாதிக்ள உங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் ” “go back to your country, you terrorist.” என்று எழுதப்பட்ட அறிவித்தல் பேப்பரை அவரின் அருகில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதான ஷைமா அல் அவாதி சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை 3 மணியளவில் வபாதாகியுள்ளார்.32 வயதான ஷைமாவிற்கு 5 குழந்தைகள் உள்ளனர். என்று அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றது அவரின் 17 மகள் பாத்திமா ஹிமாதி இது தொடர்பாக தெரிவித்துள்ள தகவில் தனது தாய் தான் வீட்டுக்கு சென்று பாத்தபோது இரும்பு கம்பியால் பல தடவைகள் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் அசைவற்ற நிலையில் இருந்ததாகவும் தாய்க்கு அருகில் “ நீங்கள் பயங்கரவாதிக்ள உங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் ” “go back to your country, you terrorist.”என்ற வாசகம் எழுதப்பட்ட காகிதம் கிடந்ததாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளார் .


ஒரு இனத்திற்கு எதிரான வெறுப்பின் அடிப்படையில் நடைபெறும் குற்றம்தான் இது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர் .ஷைமாவின் உடலுக்கு அருகில் போடப்பட்டிருந்த காகிதம் கடந்த மாதமும் வீட்டிற்குள் போடப்பட்டுள்ளது . அதனை அக்குடும்பத்தினர், அது ஒரு போலி மிரட்டல் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் இந்த படுகொலை முஸ்லிம் விரோதிகளினால் திட்டமிட்ட தாக்குதல் என்பது வெளிப்படையாக தெரிகின்றது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது .கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான டாக்டர் மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் பெண் ஜெர்மனியில் நீதிமன்ற அறையில் பலர் முன்னிலையில் ஆக்ஸெல்   என்பவனால் கொடூரமான முறையில் 18 தடவைகள் குத்திக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்பதுடன் நீதிமன்றத்திலேயே மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF