Wednesday, March 7, 2012

ஈரானின் அணுத் திட்டம் சர்வதேச சமூகத்திற்கு உகந்தது அல்ல[IAEA]!


ஈரானின் அணுத் திட்டம் சர்வதேச சமூகத்திற்கு உகந்தது அல்ல என்று ஐ.நா.வின் சர்வதேச அணு சக்தி முகமை(ஐ.ஏ.இ.ஏ) தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.இது தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமையின் குழுவினர் ஈரான் சென்று ஆய்வு நடத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் யூகியா அமோனா கூறுகையில், ஈரானின் அணு திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஆய்வு குழுவினர் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஈரான் சென்று தீவிர சோதனை நடத்தினர்.


மீண்டும் ஒரு முறை ஐ.நா.வின் தலைமை ஆய்வாளர் ஹெர்மான் நெக்ட்ரஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பார்ச்சின் பகுதிக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இப்பகுதி தலைநகர் டெஹரான் அருகே உள்ளது. பார்ச்சின் பகுதியில் உள்ள இராணுவ தலைமையக வளாகத்தில் தான் அணு ஆயுதங்களை மேம்படுத்தும் நோக்கில் ரகசியமாக பயங்கர வெடிபொருட்களை தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.இது சர்வதேச அணு சக்தி முகமைக்கு கவலை அளிப்பதாக உள்ளது. மேலும் இது சர்வதேச சமூகத்திற்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF