Friday, March 2, 2012

தண்ணீரால் ஆபத்தும் உண்டு!


மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமானது. உடம்பில் நீர் சத்து குறைந்தால் சிறுநீரகக்கல், தலைசுற்றல், மயக்கம், ரத்தக் குழாய்களில் பாதிப்பு போன்ற பல விதமான நோய்கள் வருகின்றன. அதே போல் தண்ணீரை கடகடவென ஒரே மூச்சில் ஒரு சொம்பு நீரை அருந்துவது சில போதுகளில் மாரடைப்பை ஏற்படுத்தி ,மரணம் கூட சம்பவிக்கலாம்.


உணவு வேளைக்கு அரை மணி நேரம் முன்பும், உண்ட அரை மணி நேரம் பின்பும் தண்ணீரை அருந்துவது கூடாது. உண்பதற்கு அரை மணி முன்பே நமது உடலில் உள்ள செரிமாண சம்பந்தமான சுரப்பிகள் சுரப்பி நீரை சுரந்து கொண்டு, வேலை செய்வதற்கு தயாராக இருக்கும். அப்போது நீரை அருந்துவதால் சுரப்பி நீர்கள் நீர்த்துப் போகும். அதனால் உண்ணும் உணவு சரியாக செரிமாணம் ஆகாது. மேலும் குடலில் தேங்கும் உணவுகளால் வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொந்தரவுகள் போன்றவையும் ஏற்படும்.


உணவு உண்ட பின் வயிற்றில் உள்ள உணவு கூழ் போல் இருக்க வேண்டும் . இதற்காக தான் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்போதுதான் செரிமாணம் சரியான படி நடக்கும். அச்சமயமும் நீரை அருந்திவிட்டால் கூழ் போல் இருக்கும் உணவு நீர்த்து கஞ்சி போல் ஆகிவிடுவதால் குடல் உறிஞ்சிகளால் உணவிலிருந்து சரியாக சத்துக்களை நமது உடலுக்கு எடுத்து செல்ல முடியாமல் போகிறது. இதனால் சத்தான உணவுகளை உண்டாலும், நமக்கு தேவையான மினரல்கள், சத்து ஊக்கிகளும் உடலுக்கு கிடைக்காமல் போகின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF