Wednesday, March 7, 2012

புலம் பெயர்ந்தவர்களின் நாடாக மாறப்போகும் இங்கிலாந்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!



இங்கிலாந்தில் எதிர்வரும் காலங்களில் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.உலகின் பல நாடுகளை தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்து ஆட்சி நடத்திய இங்கிலாந்தின் நிலைமை, தற்பொழுது முற்றிலுமாக மாறி வருகிறது.உலகின் பல நாடுகளில் இருந்து பிரித்தானியாவில் மக்கள் குடியேறி வருகின்றனர். குறிப்பாக இந்துக்களும், முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் வேலை, படிப்புக்காக இங்கிலாந்தில் குடியேறுகின்றனர்.இதனை தடுப்பதற்காக விசா வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறது இங்கிலாந்து அரசு. எனினும் எதிர்வரும் 2030ம் ஆண்டில் கிறிஸ்தவ நாடாக இங்கிலாந்து இருக்காது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது.


ஹவுஸ் ஆப் காமன்ஸ் லைப்ரரி நடத்திய ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. ஆய்வின் முடிவு குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் 5 லட்சம் கிறிஸ்தவர்கள் மதத்தின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.ஆனால் மற்ற மதத்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 37 சதவிகிதமும், இந்துக்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமும், பௌத்த மதத்தவர்களின் எண்ணிக்கை 74 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீக்கியர்கள், யூத மதத்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF