
பொதுவாக காரின் மேற்பரப்புக்கள் நீலம், வௌ்ளை, கறுப்பு போன்ற பல்வேறு விதமான வர்ணங்களால் அலங்கரிக்கப்படும்.ஆனால் தற்போதைய தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக காரானது பயணிக்கும் சூழலின் தோற்றத்தில் தென்படக்கூடியவாறு அமைத்து சாதனை படைத்துள்ளனர்.முதன்முறையாக Mercedes Benz வகை கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பத்தில் வீடியோ கமெரா, LED மின்குமிழ்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.இதனால் வீடியோ கமெராக்கள் சூழலை படம்பிடிக்கும்போது அது LED திரையின் மூலம் விம்பமாக விழுத்தப்படுகின்றது.
இந்த தொழில்நுட்பமானது ஜப்பானின் டோக்கியோவிலுள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், தற்போது ஜேர்மன் பொறியிலாளர்கள் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.இந்த கார்கள் எதிர்வரும் 2015ம் ஆண்டளவில் சந்தைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF