Monday, March 19, 2012
உடல்நிலையை கண்காணிக்கும் ஸ்மார்ட் போன்கள்!
உங்களது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவசர சிகிச்சைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.கமெரா, படம் பார்ப்பது, விளையாடுவது என பொழுதுபோக்காக மட்டுமின்றி, மருத்துவ ரீதியாகவும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுகின்றன.
இதன் மருத்துவ பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக நியூசிலாந்தின் மனுகாவ் தொழில்நுட்ப கழகத்தின் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் ஹெலன் ஷூ, டிம் ராபர்ட்ஸ் ஆய்வு நடத்தி வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது: ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை தற்போது ஸ்மார்ட் போன்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடிகிறது. எக்ஸ்ரே, இசிஜிகூட வந்துவிட்டன.
இந்நிலையில் ப்ளூடூத்,Wifi வசதி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலான வயர்லெஸ் சிஸ்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.இதய துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை ஸ்மார்ட் போன் தொடர்ச்சியாக கண்காணிக்கும். உடன் இணைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் மூலம் இதுபற்றிய தகவல் வைஃபி அல்லது இன்டர்நெட் இணைப்பு மூலமாக உங்களது மருத்துவரின் ஸ்மார்ட் போனுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.இருந்த இடத்தில் இருந்தே அவர் கண்காணிக்க முடியும். இதனால் அவசரகால சிகிச்சைகளை உடனுக்குடன் செய்வது சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF