
சூரியனிலிருந்து வெளிவிடப்படும் ஔிச்சக்தியையும், வெப்பசக்தியையும் மின்சக்தியாக மாற்றுவதற்கு பயன்படும் சூரியப்படலங்கள்(Solars) தற்போது முப்பரிமாண அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.நனோ அளவிடைகளை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இப்புதிய சூரியப்படலங்கள் தற்போது பாவனையிலுள்ள இருபரிமாண தோற்றத்தைக் கொண்ட சூரியப்படலங்களை காட்டிலும் 20 மடங்கு மின்சக்தியை பிறப்பிக்கவல்லன என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கிடையாக அல்லாது நிலைக்குத்தாக நிறுத்தி பாவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முப்பரிமாண சூரியப்படலத்தின் திசைகளை சூரியனின் அசைவிற்கு ஏற்ப மாற்றமுடியும் என்பது விஷேட அம்சமாகும்.
