Saturday, March 10, 2012

'ஒரு பிள்ளை பருவத்தின் கற்பனை நிஜமாகப்போகும் தருணம்' : ஜேம்ஸ் கெமரூனின் புதிய முயற்சி!


அவதார் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது புதிய 3D டாக்குமெண்டரிக்காக, பூமியின் உட்புறமாக மிக ஆழமான பகுதிக்கு செல்ல தயாராகிவருகிறார்.இதற்காக அவர் தெரிவு செய்திருக்கும் இடம் ஜப்பானுக்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கும் Marizana Trench கடல் பகுதி. மனிதன் செல்லக்கூடியளவு உலகின் மிக ஆழமான கடல் பகுதியாக இது இணங்காணப்பட்டுள்ளது.  இக்கடல் பரப்பு சுமார் 11,035 மீற்றர் (6 மைல்கள்) ஆழமுடையது. எவரெஸ்ட் சிகரத்தை இங்கு முழுதாக மூழ்கடித்து விடலாம்.


1960ம் ஆண்டு Jaques Piccard, Don Walsh எனும் இரு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே Marizana Trench இன் அடித்தட்டு பகுதிவரை  வெற்றிகரமாக சென்று வந்துள்ளனர். சுமார் 52 வருடங்களுக்கு பிறகு ஜேம்ஸ் கெமரூன் இப்பகுதிக்கு செல்ல போகிறார்.


எனினும் இதுவரை எந்தவொரு நீர்மூழ்கி கப்பல்களும் (Submersible) கெமரூனின் துணிச்சலான சாகச பயணத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தயக்கம் காட்டியதால், கெமரூனே தனது குழுவினரை கொண்டு சிறப்பு Submersible ஐ, உருவாக்கியிருக்கிறார்.கைகள் கூட அசைக்க முடியாதளவு நெருக்கான சோலோ கப்பலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Submersible மூலம், கெமரூன் பபுவா நியூகினியா பகுதியில் 5 மைல் ஆழத்திற்கு ஒத்திகை பயணமும் மேற்கொண்டு திரும்பியுள்ளார். 'உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் டைவிங் செய்ய வேண்டுமென்பது எனது சிறியவது கனவு. என்னை பொறுத்தவரை, ஒரு பிள்ளைப்பருவத்தின் கற்பனை, உண்மையான தேடலை நோக்கி செல்லும் பயணமிது' என்கிறார் கெமரூன். அடுத்த வாரத்தில், அவருடைய கனவு பயணம் நிஜமாக போகிறது. 



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF