130 வருடங்கள் பழமை வாய்ந்த மம்மி ஒன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த சிலர் நிலத்தை தோண்டும் போது இந்த மம்மி கிடைத்துள்ளது.பெண் ஒருவரின் தோற்றத்தில் காணப்படும் இந்த மம்மியின் உடலில் தோல் காணப்படுவதுடன், பற்களும் பெருமளவில் சிதைவடையாமல் காணப்படுகின்றது.பியூயியான் மாநிலத்திலுள்ள நின்ங்டே எனும் இடத்தில் காணப்பட்ட இந்த மம்மிக்கு அருகில் கல்வெட்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதில் கடந்த 1882ம் ஆண்டு இந்த மம்மி புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.