
உலகில் மாசுபடாத தண்ணீர் கிடைக்காதவர்களுடைய எண்ணிக்கையை பாதியாக குறைப்பது என்ற புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்களில் முதலாவது இலக்கு எட்டப்பட்டுள்ளது என ஐ.நா மன்றம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த இலக்கு 2015ம் ஆண்டு காலக்கெடுவைத் தொடுவதற்கு முன்பாக தற்பொழுதே எட்டப்பட்டுள்ளது என்றும் ஐ.நா மன்றம் கூறியுள்ளது.
உலகின் 89 சதவிகித மக்களுக்கு தற்போது சுத்தமான குடிநீர் ஆதாரங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.அப்படியானால் உலகில் இன்னும் கிட்டத்தட்ட 80 கோடிப் பேர் இன்னும் அசுத்தமான குடிநீரை அருந்த வேண்டிய நிலையில் உள்ளனர்.இந்த எண்ணிக்கையில் 40 சதவிகிதம் பேர் சஹாராவுக்கு தெற்கில் அமைந்துள்ள நாடுகளில் வாழக்கூடியவர்களாக இருக்கின்றனர்.இந்த புத்தாயிரம் லட்சியத்தின் மறுபாதியான சுகாதாரமான கழிப்பிட வசதிகள் என்ற இலக்கை எட்ட வாய்ப்பு இல்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.ஏனென்றால் இந்தியாவில் மட்டுமே சுமார் 60 கோடிப் பேர் இன்னும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருந்து வருகின்றனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF