Tuesday, March 27, 2012

கால்களை விட பெரிய தாடையைக் கொண்டு அவதிப்படும் அதிசய பூச்சி!


கால்களை விட பல மடங்கு பெரிய தாடை கொண்ட அதிசய பூச்சி இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்டுள்ளது. பெரிய தாடையை வைத்து கொண்டு பல விடயங்களில் படாத பாடு படுகிறது இந்த பூச்சி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்தோனேஷியாவின் சுலவெசி தீவின் தென் கிழக்கில் உள்ள அடர்ந்த வனப்பகுதி மெகோன்கா. இங்குள்ள மலை பிரதேசத்தில் இருந்து தாடை பெரிதாக கூடிய அதிசய உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளது.


பூச்சியின ஆராய்ச்சி வல்லுநர் லின் கிம்சே தலைமையில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் போது இந்த பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.இந்த அதிசய பூச்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூச்சி அரிதாகவே உள்ளது. இரண்டரை அங்குலம் அளவே உள்ளது.கால்களை விட இதன் கொடுக்கு மற்றும் தாடைகள் மிகவும் பெரியதாக உள்ளன. இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் நடப்பது கடினம். இதன் இதர செயல்பாடுகளும் சவாலானது தான்.அதிசய பூச்சியினமாக மட்டுமின்றி இது ஆக்ரோஷமாகவும் இருக்கிறது. அதற்காக கொமோடோ டிராகன் ஆப் வேஸ்ப்ஸ் பூச்சிகளின் ராஜா என்கிறோம். இந்தோனேஷியாவின் தேசிய பறவையான கருடனின் பெயரை குறிக்கும் வகையில் கருடா என்றும் பெயரிட்டுள்ளோம்.அசாதாரணமான தாடைகள் இந்த பூச்சியை ஆபத்தில் இருந்து பாதுகாக்கவும், இனப்பெருக்கத்துக்கு உதவுவதும் முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த வகை பூச்சிகளில், ஆண் இனம் இவற்றின் வசிப்பிட வாயிலில் காவல் பணியை செய்கிறது. இதனால் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பெண் பூச்சிகளை பாதுகாக்கிறது மேலும் இது குறித்த தொடர் ஆய்வில் மேலும் பல அரிய தகவல்கள் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF