Monday, March 5, 2012

குழந்தையின் நடத்தைகளை கண்காணிக்க ஸ்மார்ட் பேபி மொனிட்டரை பயன்படுத்த​லாம்!

குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு போகவேண்டிய தருணங்களில் அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு தற்போது ஸ்மார்ட் ஸ்மார்ட் பேபி மொனிட்டர் என்னும் உபகரணத்தை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த ஸ்மார்ட் பேபி மொனிட்டர்கள் திரை, கண்காணிப்புக் கமெரா என்ற இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. இதன் கமெராவானது 3 மெகா பிக்ஸல்களை கொண்டுள்ளதுடன், 4X zoom வசதியையும் கொண்டுள்ளது. பரந்த பரப்பை கண்காணிக்கக்கூடிய இந்த கமெராவானது infrared LED தொழில்நுட்பத்தில் தானாகவே இயங்கும் தன்மையை கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.இவை குழந்தைகள் அழுதல், வெப்பநிலை மாற்றத்தால் அவதிப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களை அவற்றிலுள்ள சென்சார்களின் மூலம் உணர்ந்து தெரிவிக்க வல்லன. அத்துடன் இந்த கருவியை இணையத்தினூடாகவும், Wi-Fi, Bluetooth மூலமாகவும் இணைத்து பயன்படுத்தமுடியும். இதன் பெறுமதி 299 அமெரிக்க டொலர்கள் ஆகும்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF