Friday, March 9, 2012

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள்!


அப்பிள் தனது அடுத்த 'ஐ பேட்' டெப்லட்டினை நேற்று சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியது
ஆரம்பத்தில் இதன் பெயர் 'ஐ பேட் 3' அல்லது ஐ பேட் எச்.டி ஆக இருக்குமெனக் கூறப்பட்டது.எனினும் இது 'ஐ பேட்' என பெயரிடப்பட்டுள்ளமையானது பலருக்கும் வியப்பாக இருந்தது .காரணம் அப்பிளின் முதல் டெப்லடின் பெயரும் 'ஐ பேட்' ஆகும்சில சாதனங்கள் வெளியாகிய பின்னரே ஆர்வத்தை ஏற்படுத்தும் .ஆனால் சில தயாரிப்புகள் வெளியாவதற்கு முன்னரே ஆர்வத்தை ஏற்படுத்தும் அப்பிளின் தயாரிப்புகளும் அவ்வாறானதே.


அப்பிள் தயாரிப்புகள் வெளியாவதற்கு முன்னரே அது தொடர்பில் பல்வேறு வதந்திகள் வெளியாகும்.கடைசியாக வெளியாகிய ' ஐ பேட்' உம் இதற்கு விதிவிலக்கல்ல.ஐ பேட் வெளியாகும் முன்னரே அது தொடர்பில் பல்வேறு செய்திகள் கசிந்தன.எனினும் தற்போது வெளியாகியுள்ள ஐ பேட்டுடன், அச்செய்திகளை ஒப்பிடும் போது சில உண்மையாகவுள்ளன.அப்பிளின் முன்னைய வெளியீடுகளான ஐ பேட், மற்றும் ஐ பேட் 2 வரிசையிலேயே இதுவும் வெளியாகியுள்ளது.


முன்னைய மாதிரிகளின் தோற்றத்துடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் காணப்படவில்லை.எனினும் இதில் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது ''ஐ பேட் "டின் திரையாகும்.அப்பிளின் ஐ போன் கொண்டுள்ள ' ரெட்டினா' வகை திரையையே இதுவும் கொண்டுள்ளது. இதன் ரெசலூசன் 2048 x 1536 என்பதுடன் இத்திரையின் படவணு அடர்த்தி (Pixel density) 264 ஆகும்.


இது தற்போது சந்தையில் உள்ள பல எச்.டி. தொலைக்காட்சிகளை விடத் துல்லியமானதாகும்.இது Dual-core 1 GHz Cortex-A9 புரசசரின் மூலம் இயங்குகின்றது.இதனுடன் 1080 p வீடியோ ரெக்கோர்டிங் செய்யக்கூடிய 5 மெகா பிக்ஸல் கெமராவையும் கொண்டுள்ளது.
இதன் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள் சில.


Apple A5X Chipset
Dual-core 1 GHz Cortex-A9 CPU
PowerVR SGX543MP4 GPU
5 MP, 2592 x 1944 pixels, autofocus Touch focus, geo-tagging, HDR, face detection Camea
HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps, LTE, 73 Mbps; Rev. A, up to 3.1 Mbps


இவை 16 ஜி.பி, 32 ஜி.பி, 64 ஜி.பி உள்ளக மெமரியைக் கொண்ட புதிய ஐ பேட்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.இவ்வருட ஜனவரி மாதம் வரை சுமார் 55 மில்லியன் ஐ பேட்களை அப்பிள் விற்பனை செய்துள்ளது. அதன் முன்னைய டெப்லட்களுக்கும் சந்தையில் நல்ல கேள்வி நிலவுகின்றது.இந்நிலையில் தற்போது புதிய 'ஐ பேட்' டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது விற்பனைக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம், இது சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றதா என!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF