Monday, March 26, 2012

பேஸ்புக்கின் புதிய விஸ்வரூபம்!


இன்டர்வியூவுக்கு வருபவர்களிடம் ஃபேஸ்புக் முகவரியை கேட்கும் புதிய வழக்கம் அதிகரித்து வருகிறது. இன்டர்வியூவிற்கு வந்தவர்களிடன் ஃபேஸ்புக்கின் முகவரியை கேட்கும் புதிய வழக்கம்.வளர்ந்து வரும் சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இன்டர்வியூவிற்கு வருபவர்களிடம், ஃபேஸ்புக்கின் முகவரியை கேட்கும் அளவிற்கு, ஃபேஸ்புக் விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்பது எல்லோருக்கும் ஒரு வித திகைப்பை ஏற்படுத்தும் செய்தியாக தான் இருக்கிறது.


இது போன்ற ஒரு சம்பவம் நடந்தும் கூட இருக்கிறது. நியூ யார்க்கை சேர்ந்த பேஸ்சட் என்பவர் இன்டர்வியூவிற்கு  சென்ற இடத்தில் அவரின் ஃபேஸ்புக் அக்கவுன்டு முகவரி கேட்கப்பட்டது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் பேஸ்சட் தனது ஃபேஸ்புக் முகவரியை கொடுக்கமறுத்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஃபேஸ்புக் ஆக்கவுன்டு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். இதை சொல்லுமாறு கேட்பது ஒருவரின் டைரியை படிக்க கேட்பது போன்று தான் என்று கருதப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF