
நீங்கள் வைத்திருக்கும் Smart Phones கைத்தொலைபேசிகள் Android சேவையை கொண்டதா?அப்படியாயின் Windows Phone ஐ விட ஏதாவது ஒரு செயற்பாட்டில் அது வேகமகாக இருக்கிறது என நிரூபித்து விட்டீர்கள் எனில் உங்களுக்கு 100 USD டாலர் சன்மானம்! சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா என்கிறார் இந்நபர்.
புதிதா ஐ.டி சந்தைக்குள் தன்னை இணைத்து கொண்ட Windows Phone ஐ பிரபலப்படுத்துவதற்கு இப்படி ஒரு யுக்தி. போட்டி நிறுவனத்தின் லோகோ, பிராண்ட் பெயரை தமது விளம்பரத்திற்குள் நேரடியாக இழுத்து தாக்கும் புதிய வகை டிரெண்ட், யூடியூப், சமூக வலை தளங்கள் ஊடாக வேகமாக உருவாகி வருவது ஆரோக்கியமானதா? போட்டி வியாபார மோகத்திற்கு அடிமைப்படுத்துவதா? எனும் கேள்விகளுக்கு அப்பால் இவ்வீடியோக்களை தரவேற்றம் செய்திருப்பதும் Windows Phone உத்தியோகபூர்வ சேனல் தான் என்பது கவனிக்க வேண்டிய விடயம்.
Windows Phone இல் நன்கு பரீட்சயமானவரை கொண்டு திட்டமிட்டு இவ்வீடியோவை உருவாக்குகிறார்கள். மற்றும் படி வேகத்தில் ஒன்றுமில்லை என இவ்வீடியோ பதிவுகளுக்கு எதிர்கருத்துக்கள் குவிகின்றன.உங்களது கைத்தொலைபேசி என்பதால் நீங்களும் நன்கு கைப்பழக்கம் உடையவராக இருப்பீர்கள்தானே என மறு கேள்வி கேட்கிறார் இந்நபர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF