
பொதுவாக தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால் இருப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிவரும் ஒலியானது கேட்கும் விதம் வேறுபடும்.இதற்கு காரணம் தொலைக்காட்சியில் இரு ஸ்பீக்கர்கள் மட்டுமே அதிகளவில் காணப்படும், இதனால் வெவ்வேறு திசைகளில் இருப்பவர்களுக்கு ஒலியின் விளைவு வேறுபடுகின்றது.
ஆனால் தற்போது அதி சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு அறையில் இருந்து தொலைக்காட்சியை பார்க்கும் அனைவருக்கும் சமமான ஒலியின் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒலி பிறப்பாக்கி கண்டறியப்பட்டுள்ளது.ஏறத்தாழ ஆறு அடிகள் நீளமான இந்த இயந்திரத்தில் 92 ஸ்பீக்கர் ட்ரைவர் காணப்படுகின்றது. இவற்றில் 30 குறைவான ஒலி விளைவிற்கும் 32 அதி உயர் ஒலி விளைவிற்கும் மீதி மத்திய ஒலி விளைவிற்கும் பொறுப்பானவையாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF