Tuesday, March 6, 2012
விண்கற்கள் இணைந்து பூமி உருவானது: விஞ்ஞானிகள் தகவல்!
வானில் சுற்றித்திரியும் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பூமி உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நாம் வாழும் கிரகமான பூமி சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.ஆனால் எவ்வாறு உருவானது என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்றி மோதி பூமி உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்கற்கள் மோதியதால் உருவான துகள்கள் புவி ஈர்ப்பு விசை காரணமாக இணைந்து பூமி உருவாகி உள்ளது. விண்கற்களின் பாறைகளையும், பூமியின் பாறைகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தததில் இவை இரண்டிலும் ஆக்சிஜன், நிக்கல், குரோமியம், சிலிகான், கார்பன் போன்ற உலோகங்கள் உள்ளது தெரியவந்துள்ளது.எனவே விண்கற்கள் இணைந்து பூமியை உருவாக்கி இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF