Tuesday, March 20, 2012

நல்ல நண்பர்கள் உருவாவதைத் தடுக்கும் பிரிட்டன் பள்ளிகள்!


பிரித்தானியாவில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல நண்பர்களாக உருவாவதை தடுத்து விடுகின்றனர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வின் முடிவு குறித்து உளவியல் கல்வி நிபுணர் கேய்னர் சுபுதே கூறுகையில், ஆரம்பப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் நட்புணர்வோடு பழக வேண்டும் என்பதற்காகவே, தனி நண்பர்கள் உருவாகாமல் ஆசிரியர்கள் தடுத்து விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்து விட்டால் அவர்களைப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் வருந்துவர் என்பதற்காகவும் அவர்கள் தடுத்து விடுகின்றனர்.மாணவர்களின் மனம் வேதனைப்படக் கூடாது என்பதில் அக்கறைக் காட்டும் ஆசிரியர்கள், மாணவர்களில் சிலருக்கு உற்ற நண்பர்கள் தேவை என்பதையும் உணரவேண்டும்.மாணவர்கள் தங்களது சக நண்பர்களைப் பிரியும் போது ஏற்படும் துக்கத்தை அறிந்து அதிலிருந்து மீளவும் கற்றுக் கொள்ள வழிவகை தேவை என்பதையும் ஆசிரியர்கள் உணரவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து கருத்துக் கூறிய தேசிய தலைமையாசிரியர் சங்கத்தின் ரஸ்ஸல் ஹாபி, சில பள்ளிகள் உற்ற நண்பர்கள் உருவாகாமல் தடை செய்வதை ஒத்துக்கொண்டுள்ளார்.ஆனால் மாணவர்களிடையே நெருங்கிய நட்பு உருவாதை முழுவதுமாக தடைசெய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ஏனெனில் மனித வாழ்க்கை முழுவதும் நட்பும், பிரிவும் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF