Wednesday, March 21, 2012

பொருளாதாரத்தில் பிரிட்டனை மிஞ்சும் ஆப்ரிக்க நாடுகள்!



கடும் பஞ்சத்தால் வறண்டு கிடந்த எத்தியோப்பியா போன்ற ஆப்ரிக்க நாடுகள், தற்போது பிரிட்டனை மிஞ்சும் அளவுக்கு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது.உலகின் பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் பத்து நாடுகளில் ஏழு நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையே. இவை எதிர்வரும் 2015ம் ஆண்டிற்குள் பொருளாதாரத்தின் உயர்ந்த நிலையை அடையக்கூடும்.பிரிட்டிஷ் நிறுவனங்கள் சில ஆப்பிரிக்காவில் காலூன்றத் தொடங்கியுள்ளன. டயாகியோ என்ற நிறுவனம் ஜனவரியில் மெடா அபோ என்ற எத்தியோபியாவின் மிகப்பெரிய மது தயாரிக்கும் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் விலை மொத்தம் 150 மில்லியன் பவுண்டாகும்.


பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையத்தின் மூத்த பொருளியல் அறிஞரான டிம் ஓலென்பர்க் கூறுகையில், ஆப்பிரிக்காவில் எண்ணெய், தாமிரம் போன்ற விலை மதிப்புடைய பொருட்கள் கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.இப்போது வாங்கும் திறன் அதிகம் உடைய மத்திய வர்க்கம் உருவாகி வருவதால் ஆப்பிரிக்காவின் சந்தை பெரியதாகவும், அனைவரையும் கவரக் கூடியதாகவும் திகழ்கிறது என்றார். எண்ணெய் வளம் மிகுந்திருப்பதால் நைஜீரியா பொருளாதார வளம் மிகுந்த நாடாகவும் உயர்ந்து வருகிறது.சஹாராவைச் சார்ந்துள்ள ஆப்பிரிக்க நாடுகள் 2000ம் ஆண்டில் 322 பில்லியன் டொர் வருமானத்தை கொண்டிருந்தன. ஆனால் 2011ம் ஆண்டில் இந்த வருமானம் நான்கு மடங்கு உயர்ந்து 1.22 டிரில்லியன் டொலராக வளர்ந்து விட்டது. இது பிரிட்டனின் வருமானத்தில் சரிபாதியாகும்.


சீனா பில்லியன் கணக்கில் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீனா 6 பில்லியன் டொலரை காங்கோவுக்கு வழங்கியது. இத்துடன் 2400 மைல் தூரத்திற்கு சாலை வசதியும், 2000 மைல் தூரத்திற்கு இருப்புப்பாதை வசதியும், 32 மருத்துவமனைகளும், 145 சுகாதார மையங்களும் ஏற்படுத்தித் தந்தது. இவற்றிற்குப் பதிலாக பத்து மில்லியன் டன் தாமிரமும், 400,000 டன் கோபால்ட்டும் பெற்றுக் கொண்டது.எத்தியோப்பியாவிலிருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களில் காப்பியே ஐம்பது சதவீதமாகும். சீனாவிற்கு இந்த காப்பி அதிகமாக ஏற்றுமதியாகிறது. சீனாவில் கார் கம்பெனியான FAW இன் துணைத்தலைவர், ஆப்ரிக்க நாடுகளில் கார் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்குவது குறித்துப் பேசினார்.


இன்னும் பல மேலைநாட்டு நிறுவனங்களும் ஆப்பிரிக்காவிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் மோசாம்பிக் நாட்டுக்கும் ஷெல் கம்பெனி வரத் தொடங்கி உள்ளது. மோசாம்பிக் உலகில் எரிவாயு அதிகமாக கிடைக்கும் நாடுகளில் ஒன்றாகும் என்பதால் ஷெல் நிறுவனம் இங்கு கால் பதிக்க விரும்புகிறது.கடந்தாண்டு ஆப்பிரிக்காவில் பல வங்கிகள் தோன்றின. பர்க்லேஸ் வங்கிக்கு மட்டும் 910 மில்லியன் பவுண்டு இருப்பு உள்ளது. 14.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF