Tuesday, March 6, 2012
விளம்பரத்துக்கே விளம்பரம்பரமா..?
மேற்குலக பிரமாண்ட சினிமாக்களையே தூக்கி அடித்துவிடுவது போல் பிரமாண்டமாக வெளிவந்திருக்கிறது இந்த விளம்பரப்படம்.விளம்பரத்துக்கே விளம்பரம் என்ற கணக்கில் இந்த விளம்பரப் படத்துக்கான தகவல் விளம்பரங்கள் ஏராளம். அப்படியென்ன சிறப்பு இந்த விளம்பரத்தில்...?
பொதுவாகவே விளம்பரப்படங்கள் ஒரு நிமிடத்துக்கும் குறைவானவையே. ஆனால் இந்த விளம்பரப்படம் ஒரு குறும்படம் போல் நிமிடம் தாண்டி மூன்று நிமிடங்களுக்குச் செல்கிறது. மூன்று நிமிடத்துக் விளம்பரம் ஒன்றைப் பார்ப்பார்களா என்றால், பார்க்க வைப்பது மட்டுமல்ல, மிரளவும் வைக்கிறது.
சுமார் இரண்டு வருடகால உழைப்பினைக் கொட்டி உருவாக்கியிருக்கிறார்களாம் இந்த விளம்பரப்படத்தை. நிஜம் எது, கிராபிக்ஸ் எது எனக் கண்டுபிடிக்க முடியாதவாறான தொழில்நுட்ப நேர்த்தி, தொட்டு நகர்ந்து செல்லும் திரைக் கதையோட்டம், காட்சிக்குக் காட்சி கண்ணுக்கு விருந்தாகும் காட்சிப் பிரமாண்டம் என அசத்தியிருக்கிறார்கள்.ஒரே நேரத்தில் நேரத்தில் 80 நாடுகளில் ஒரே நேரத்தில் இந்த விளம்பரத்தைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி விளம்பரத்துக்கே விளம்பரம் என்ற வகையில், வெளியிடலில் பிரமாண்டத்தைக் காட்டி இருக்கின்றார்கள்.
L'Odyssée de Cartier நிறுவனம் அன்மையில் வெளியிட்ட இவ் விளம்பரம், இனிவரும் நாட்களில் பெரிதும் பேசப்படக் கூடும். 28ந் திகதி யூட்டிப்பில் வெளியிடப்பட்ட இப் படத்தை, இதுவரையில் பார்த்திருப்போர் தொகை இரண்டரை இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.விளம்பரப் படமாக இருந்த போதும், படத்தின் ஓட்டத்தில் உறுத்தல் ஏதுமின்றி, இயல்பாக வந்து போகின்றன விளம்பரப்படுத்தும் பொருட்கள். அதுவே இவ் விளம்பரத்தின் சிறப்பு. அந்தச் சிறப்புக்குக் காரணமானவர் இப்படத்தின் இயக்குனர் Bruno Aveillan.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF