Thursday, March 29, 2012

ஐ.நா தீர்மானத்தின் எதிரொலி: இஸ்ரேல் வெளியேறியது!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து கொள்வதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.பாலஸ்தீன உரிமையை பறிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றதா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


பாகிஸ்தான் தலைமையில் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானத்தை இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் ஆதரவு தந்தன. எனினும் அமெரிக்கா மட்டும் இத்தீர்மானத்தை எதிர்திருந்தது.இவற்றைத் தொடர்ந்து ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து வெளியேறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF