Saturday, March 31, 2012

41 மெகா பிக்ஸெல் கேமரா போன்!


அண்மையில் நடந்து முடிந்த மொபைல் கருத்தரங்கில், நோக்கியா வெளியிட்ட அறிவிப்புகளில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது நோக்கியா 808 பியூர் வியூ மொபைல் போன். இதில் 41 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட சென்சார் உடைய கேமரா இருக்கும். திரை 4 அங்குல அகலத்தில் AMOLED CBD டிஸ்பிளே கொண்டிருக்கும். திரைக்கு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த மொபைல் போனில் உள்ள கேமராவில் மட்டும் பயன்படுத்த என கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ் உடன் இணைந்த புதிய தொழில் நுட்பத்தினை நோக்கியா உருவாக்கியுள்ளது. கேமராவின் ஸூம் தன்மை 4 எக்ஸ். 


ஸெனான் பிளாஷ் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் 1920x1080 ரெசல்யூசனுடன் கூடியமுழுமையான HD 1080p வீடியோ பதிவு (விநாடிக்கு 30 பிரேம்கள்) மற்றும் இயக்கம் கிடைக்கும். நோக்கியா ரிச் ரெகார்டிங் என்ற தொழில் நுட்பமும் முதன்முதலாக இதில் பயன் படுத்தப்படுகிறது. இதன் மியூசிக் பிளேயர் டோல்பி டிஜிட்டல் ப்ளஸ் 5.1 சேனல் சரவுண்ட் வசதியினைக் கொண்டிருக்கும். போனின் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஆப்பரேட்டிங் சிஸ்டமாக சிம்பியன் பெல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மெமரி 16ஜிபி. இதனை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலமாக, 48 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.


நெட்வொர்க் இணைப்பிற்கு, 3G HSPDA, HSUPA (14.4Mbps), புளுடூத் 3.0, வை-பி, டி.எல்.என்.ஏ., ஏ-ஜி.பி.எஸ்., ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
கூடுதல் வசதிகளாக, என்.எப்.சி., எப்.எம். ட்ரான்ஸ்மீட்டருடன் கூடிய ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்படுகின்றன.இதன் பேட்டரி 1,400 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 6.5 மணி நேரம் பேசும் திறனை இது அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 540 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது.வெள்ளை, சிகப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த மொபைல் போன் கிடைக்கும். ஐரோப்பிய நாடுகளில் மே மாதம் வர இருக்கும் இந்த மொபைல்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

4G தொழில்நுட்​பத்துடன் கூடிய Samsung Galaxy S Blaze கைப்பேசிகள்!


Samsung நிறுவனமானது 4G தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.Samsung Galaxy S Blaze என்ற வியாபாரப் பெயருடன் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசிகள் 42Mbps என்ற வேகத்தில் இணைய வசதியை ஏற்படுத்தவல்லன.அன்ரோயிட் இயங்குதளத்துடன் தொடுதிரை வசதியையும் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் பின்வரும் சிறப்பியல்புகளையும் உள்ளடக்கியுள்ளன.


1. Quad-band GSM and tri-band 3G support.
2. 42 Mbps HSDPA and 5.76 Mbps HSUPA support.
3. 4" 16M-color Super AMOLED capacitive touchscreen of WVGA (480 x 800 pixels) resolution.
4. Android OS v2.3.6 with TouchWiz 4 launcher.
5. 1.5 GHz Scorpion dual-core CPU, Adreno 220 GPU, Qualcomm Snapdragon S3 chipset, 1GB of RAM.
6. 5MP autofocus camera with LED flash, 720p video recording; 1.3MP front-facing unit.
7. Hot swappable SIM and microSD cards.
8. Wi-Fi 802.11 b/g/n support.
9. GPS with A-GPS connectivity; Digital compass.
10. 3GB internal storage, microSD slot (4GB card preinstalled).
11. Accelerometer, gyroscope and proximity sensor.
12. Standard 3.5 mm audio jack.
13. Stereo Bluetooth v3.0.
14. Functional NFC support with a dedicated app out of the box.
15. Document editor.
16. File manager comes preinstalled.
17. Incredibly rich video format playback support.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, March 30, 2012

கிராபிக்ஸ் வேலைகளை இலகுபடுத்து​ம் கூகுள் குரோமின் புதிய பதிப்பு!


இணைய உலாவிகளின் வரிசையில் முன்னணி வகிக்கும் கூகுள் குரோமின் புதிய பதிப்பை அதன் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ளது.18வது பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலாவியில் கிராபிக்ஸ் வேலைகளை இலகுபடுத்தும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதாவது இதுவரை காலமும் இருபரிமாண கிராபிக்ஸ் வேலைகளை ஓன்லைனில் செய்யும் போது கணணியின் மத்திய முறைவழியாக்கல் அலகின்(CPU) தொழிற்பாடு அதிகமாக காணப்பட்டது.ஆனால் புதிய பதிப்பில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் முப்பரிமாண கிராபிக்ஸ் வேலைகளையும் இலகுவாக செய்துகொள்ள முடியும். மேலும் பழைய கணணிகளிலும் விரைவாக செயற்படக்கூடியது.


தற்போதுள்ள கூகுள் குரோமை புதிய பதிப்பிற்கு மாற்றுவதற்கு அதன் விண்டோவின் வலது மூலையில் காணப்படும் குறடு(wrench) வடிவிலான ஐகனை அழுத்தி அதில் காணப்படும் About Google Chrome என்பதை தெரிவு செய்யவும். சில நொடிகளில் தானாகவே புதிய பதிப்பிற்கு அப்டேட் ஆகிவிடும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தினமும் 11 மணிநேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து!


அலுவலகத்தில் வேலை பார்ப்பது, தொலைக்காட்சி, கணணி முன்பு செலவிடுவது என ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழக மூத்த ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்.


45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு: அலுவலகத்தில், தொலைக்காட்சி, கணணி முன்பு என தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள்? இன்னும் 3 ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.


அதிக நேரம் உட்கார்ந்து விட்டு, மற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பு.அதற்காக அதிக நேரம் உட்கார்வது ஆட்கொல்லி என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. அதிக நேரம் உட்கார்வதற்கும் வாழ்நாள் குறைவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று சொல்லலாம்.நன்கு ஆரோக்கியமாக வாழ்வதற்கும், இதய நோய்கள், சர்க்கரை, அதிக பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருப்பதற்கும் உட்காரும் நேரத்தை குறைப்பது மிகமிக அவசியம்.முடிந்தவரை நில்லுங்கள், அதிகம் நடந்து செல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சி, மற்ற வேலைகள் செய்வது என சுறுசுறுப்பாக இருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பள்ளியைக் கட் அடித்து விட்டு இன்டர்நெட் பார்த்த மகனின் கழுத்தில் சங்கிலியால் கட்டிய தகப்பன்!


பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியத்தைத் தருகின்றது.தனது மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாடசாலைக்குச் செல்லாமல் கட் அடித்து விட்டு கொம்பியூட்டர் கேம் விளையாடிய தனது 13 வயதேயான மகனை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை கொடுத்துள்ளார் குறித்த கோபக்காரத் தந்தை.கம்போடியாவில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த சிறுவனை அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் மீட்டனர்.


பொலிஸார் குறித்த சிறுவனின் கழுத்தில் இருந்த ஆமைப்பூட்டை உடைத்து சங்கிலிப் பிணைப்பை நீக்கியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரான Cheth Vanny கருத்துத் தெரிவிக்கையில்,பாடசாலைக்குச் செல்லாமல் இன்டர்நெட் கபேக்கு சென்றதைக் கண்ட தகப்பன் கடும் கோபமாகி விட்டார்.பொதுமக்கள் முன்னிலையில் இவனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று கருதிய தகப்பன் இவ்வாறு பூட்டுப் போட்டுப் பூட்டியுள்ளார்.ஆனால் அதற்காக இப்படியான தண்டனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை சிறுவர் துஷ் பிரயோகத்துக்குள் உள்ளடங்குகின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, March 29, 2012

ஐ.நா தீர்மானத்தின் எதிரொலி: இஸ்ரேல் வெளியேறியது!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து கொள்வதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.பாலஸ்தீன உரிமையை பறிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றதா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


பாகிஸ்தான் தலைமையில் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானத்தை இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் ஆதரவு தந்தன. எனினும் அமெரிக்கா மட்டும் இத்தீர்மானத்தை எதிர்திருந்தது.இவற்றைத் தொடர்ந்து ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து வெளியேறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, March 28, 2012

தைரியமிருந்தால் எடுத்துச் செல்லுங்கள் - இன்டலின் புதிய லேப்டாப் அறிமுகம்!


இன்டல் நிறுவனம் அதனது Ultrabook லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.அதற்காக பொது இடங்களில் கண்ணாடிப் பெட்டியில் லேப்டாப்பை வைத்து கூடவே கண்ணாடியை உடைத்து அதை எடுத்துச் செல்ல யார் முயல்கின்றார்கள் என்பதை கண்கானிக்கின்றது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பழங்களை விட அதிக சத்துக்கள் நிறைந்த பாப்கார்ன்!


காய்கறி, பழங்களை காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என வர்ணிக்கின்றனர்.பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தானியங்களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.


இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரியவந்துள்ளது.மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது என்றும் தெரியவந்துள்ளது.மற்ற தானியங்களில் உள்ளதை விட மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால், பாப்கார்ன் சத்தானது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஒலிம்பிக் உடையில் அசத்தும் குதிரைகள்!


எட்டு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டு இந்த ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் எதிர்வரும் யூலை மாதம் நடைபெறவிருக்கிறது.இந்த ஒலிம்பிக் போட்டியின் வருகை தரவிருக்கும் குதிரைகளுக்கு சிவப்பு, கருப்பு, நீலம் வண்ணங்களில் விசேட உடைகள் அணியப்படவுள்ளன. இவ்வாறு அணியவிருக்கும் உடையே இக்குதிரைகளுக்கு சீருடை ஆகும்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இருபது மடங்கு வினைத்திறன் வாய்ந்த முப்பரிமாண சோலர்கள்!


சூரியனிலிருந்து வெளிவிடப்படும் ஔிச்சக்தியையும், வெப்பசக்தியையும் மின்சக்தியாக மாற்றுவதற்கு பயன்படும் சூரியப்படலங்கள்(Solars) தற்போது முப்பரிமாண அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.நனோ அளவிடைகளை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இப்புதிய சூரியப்படலங்கள் தற்போது பாவனையிலுள்ள இருபரிமாண தோற்றத்தைக் கொண்ட சூரியப்படலங்களை காட்டிலும் 20 மடங்கு மின்சக்தியை பிறப்பிக்கவல்லன என்று தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் கிடையாக அல்லாது நிலைக்குத்தாக நிறுத்தி பாவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முப்பரிமாண சூரியப்படலத்தின் திசைகளை சூரியனின் அசைவிற்கு ஏற்ப மாற்றமுடியும் என்பது விஷேட அம்சமாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, March 27, 2012

அண்டார்டிகாவில் மர்மமான முறையில் கடல் நீர் வற்றுகிறது: அதிர்ச்சி தகவல்!

அண்டார்டிகா பகுதியில் ஆழத்தில் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது.


இதன் மூலம் பூமியின் பருவ நிலை மாற்றம் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஆனால் பனிக்கட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென் பகுதியில் உள்ள ஆழ்கடல் நீர் வற்றி வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வற்றி மாயமானதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இது அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றின் தண்ணீரை விட 50 மடங்குகளாகும். இந்த கடல் நீர் வற்றுவதற்கான காரணம் மர்மமாக உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.உலகிலேயே மிகவும் குளிர்ந்த நீரைக் கொண்டுள்ள கடல் அண்டார்டிக்கா கடல் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடலின் நீர் வற்றிப் போவதற்கு அதிகரிக்கும் புவி வெப்பமும், ஓசோனில் விழுந்த ஓட்டையும் தான் காரணம் என புவி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உங்களது புகைப்படத்துடன் கூடிய அழகான தீமை உருவாக்க!


கூகுள் குரோம் உலாவியை அனைவரும் பயன்படுத்துவதற்கு அதன் எளிமை, வேகம், வசதிகள் தான் காரணம்.கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீமை உருவாக்கலாம்.


1. முதலில் இந்த லிங்கில் சென்று நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.


2. அடுத்து New Tab க்ளிக் செய்தால் My Chrome Theme என்ற புதிய வசதி வந்திருக்கும் அதை க்ளிக் செய்யவும்.


3. ஓபன் ஆகும் விண்டோவில் START MAKING THEME என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.


4. அடுத்து UPLOAD IMAGE என்பதை க்ளிக் செய்து கணணியில் சேமித்து வைத்திருக்கும் உங்கள் புகைப்படத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


5. அடுத்து ADJUST POSITION என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.


6. அடுத்து Continue Step2 என்பதை க்ளிக் செய்யவும். இந்த பகுதியில் உலவியின் நிறங்களை உங்களின் விருப்பம் போல தெரிவு செய்து கொள்ளுங்கள்.


7. நிறங்களை தெரிவு செய்தவுடன் மேலே உள்ள Continue to Step 3 என்பதை க்ளிக் செய்யவும்.


8. இதில் கீழே உள்ள PREVIEW MODE க்ளிக் செய்தால் உங்களுடைய தீம் எப்படி இருக்கு என பார்த்து கொள்ளலாம்.


9. முடிவில் உங்கள் தீமுக்கு ஏதாவது ஒரு பெயர் கொடுத்து MAKE MY THEME என்ற பட்டனை அழுத்தவும்.


10. உங்கள் குரோம் தீம் உருவாகிவிடும். INSTALL MY THEME என்ற பட்டனை அழுத்தி உங்களுடைய தீமை நிறுவிக் கொள்ளுங்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலாவிகளின் குறை, நிறைகள்!


இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல உலாவிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை.சில வேகமாக இயங்கும், பல உலாவிகள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும்.


1. கூகுள் குரோம் பதிப்பு 17: மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள உலாவி. இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவை முடங்கிப் போனால் உலாவியின் இயக்கத்திறனை நிறுத்தாமல் அவற்றை மட்டும் மூடும் சிறப்பினை கொண்டுள்ளது.


இதன் பல அடுக்கு பாதுகாப்பு(Sandbox) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைத் தடுக்கிறது. பயன்படுத்துவதில் எளிமை, அதிக எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் வசதிகள், ஆட் ஆன் புரோகிராம்கள், மிகச் சிறந்த இயக்கம் ஆகியவை.


இவை அனைத்தும் தொடக்க நிலை இணையப்பயனாளருக்குத் தெரியாமலோ, தேவை இல்லாமலோ இருக்கலாம். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புகளை இது நிறைவேற்றுகிறது. இணையப் பக்கங்களை அவற்றில் எத்தனை கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட்கள் இருந்தாலும், நான்கு விநாடிகளில் இறக்கித் தருகிறது.


பிப்ரவரியில் வெளியான இதன் பதிப்பில் இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்குகையிலேயே அந்த பக்கத்தைத் தருவது இதன் அதிமுக்கிய சிறப்பாக உள்ளது.வேறு மொழிகளில் உள்ள இணையத்தளம் இறங்குகிறது எனில், உடனே அதனை மொழி பெயர்த்துத் தரும் பணியில் குரோம் இறங்குகிறது. மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இல்லை என்றாலும் அப்பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகிறது.


2. மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்பு 10: பலவகைச் சிறப்புகளைக் கொண்ட ஓர் அருமையான உலாவி. எச்.டி.எம்.எல். 5 இயக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் இதன் சிறப்புக்கு அடிப்படை.ஆனால் தேவையற்ற அல்லது அதிகமான ஆட் ஆன் தொகுப்புகள் உலாவியின் வேகத்தை மட்டுப்படுத்துவது இதன் பலகீனமே. மார்ச் 2011 ல் பதிப்பு 4 வந்த பின்னர் இன்று வரை ஆறு பதிப்புகள் வந்துள்ளன.


மொஸில்லா வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கணித்து வருவதனைக் காட்டுகிறது. இதில் டேப்களை குழுக்களாக அமைத்துப் பிரித்து வைத்து எளிதாக இயக்கலாம். பாப் அப் பில்டர், பிரைவேட் பிரவுசிங் போன்றவை இதன் மற்ற சிறப்புகள்.


3. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9: பாதுகாப்பில் இதன் தனித் தன்மையை மற்ற உலாவிகள் கொண்டிருக்கவில்லை. எச்.டி.எம்.எல். 5 இயக்கத்தில் இதுவே அதிக வேகம் கொண்டுள்ளது. இதன் டேப்களைக் கையாள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எளிமையில் மிகவும் பின் தங்கி உள்ளது.


ஒவ்வொரு தனி நபருக்குமாக குறிப்பிட்ட தளங்களைத் தொடர்ந்து தடுத்துவிடும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் புக்மார்க்குகளை மற்றவற்றில் இணைப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எதுவும் செய்யவில்லை என்பது தீராத குறையாக உள்ளது. தீம்கள் மற்றும் ஸ்பெல்லிங் செக் செய்திடும் வசதி இல்லாதது பலருக்கு ஏமாற்றத்தைத் தரும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

முஸ்லிம் என்ற காரணத்தால் ஹிஜாப் அணிந்த 5 பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை – அமெரிக்காவில் அராஜகம்!

அமெரிக்க கலிபோனியா மாநிலத்தில் ஒரு முஸ்லிம் பெண், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது . Shaima Alawadi என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தலையில் இரும்பால் அடித்து படுகொலை செய்துவிட்டு, “ நீங்கள் பயங்கரவாதிக்ள உங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் ” “go back to your country, you terrorist.” என்று எழுதப்பட்ட அறிவித்தல் பேப்பரை அவரின் அருகில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதான ஷைமா அல் அவாதி சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை 3 மணியளவில் வபாதாகியுள்ளார்.32 வயதான ஷைமாவிற்கு 5 குழந்தைகள் உள்ளனர். என்று அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றது அவரின் 17 மகள் பாத்திமா ஹிமாதி இது தொடர்பாக தெரிவித்துள்ள தகவில் தனது தாய் தான் வீட்டுக்கு சென்று பாத்தபோது இரும்பு கம்பியால் பல தடவைகள் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் அசைவற்ற நிலையில் இருந்ததாகவும் தாய்க்கு அருகில் “ நீங்கள் பயங்கரவாதிக்ள உங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் ” “go back to your country, you terrorist.”என்ற வாசகம் எழுதப்பட்ட காகிதம் கிடந்ததாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளார் .


ஒரு இனத்திற்கு எதிரான வெறுப்பின் அடிப்படையில் நடைபெறும் குற்றம்தான் இது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர் .ஷைமாவின் உடலுக்கு அருகில் போடப்பட்டிருந்த காகிதம் கடந்த மாதமும் வீட்டிற்குள் போடப்பட்டுள்ளது . அதனை அக்குடும்பத்தினர், அது ஒரு போலி மிரட்டல் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் இந்த படுகொலை முஸ்லிம் விரோதிகளினால் திட்டமிட்ட தாக்குதல் என்பது வெளிப்படையாக தெரிகின்றது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது .கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான டாக்டர் மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் பெண் ஜெர்மனியில் நீதிமன்ற அறையில் பலர் முன்னிலையில் ஆக்ஸெல்   என்பவனால் கொடூரமான முறையில் 18 தடவைகள் குத்திக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்பதுடன் நீதிமன்றத்திலேயே மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கால்களை விட பெரிய தாடையைக் கொண்டு அவதிப்படும் அதிசய பூச்சி!


கால்களை விட பல மடங்கு பெரிய தாடை கொண்ட அதிசய பூச்சி இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்டுள்ளது. பெரிய தாடையை வைத்து கொண்டு பல விடயங்களில் படாத பாடு படுகிறது இந்த பூச்சி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்தோனேஷியாவின் சுலவெசி தீவின் தென் கிழக்கில் உள்ள அடர்ந்த வனப்பகுதி மெகோன்கா. இங்குள்ள மலை பிரதேசத்தில் இருந்து தாடை பெரிதாக கூடிய அதிசய உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளது.


பூச்சியின ஆராய்ச்சி வல்லுநர் லின் கிம்சே தலைமையில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் போது இந்த பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.இந்த அதிசய பூச்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூச்சி அரிதாகவே உள்ளது. இரண்டரை அங்குலம் அளவே உள்ளது.கால்களை விட இதன் கொடுக்கு மற்றும் தாடைகள் மிகவும் பெரியதாக உள்ளன. இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் நடப்பது கடினம். இதன் இதர செயல்பாடுகளும் சவாலானது தான்.அதிசய பூச்சியினமாக மட்டுமின்றி இது ஆக்ரோஷமாகவும் இருக்கிறது. அதற்காக கொமோடோ டிராகன் ஆப் வேஸ்ப்ஸ் பூச்சிகளின் ராஜா என்கிறோம். இந்தோனேஷியாவின் தேசிய பறவையான கருடனின் பெயரை குறிக்கும் வகையில் கருடா என்றும் பெயரிட்டுள்ளோம்.அசாதாரணமான தாடைகள் இந்த பூச்சியை ஆபத்தில் இருந்து பாதுகாக்கவும், இனப்பெருக்கத்துக்கு உதவுவதும் முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த வகை பூச்சிகளில், ஆண் இனம் இவற்றின் வசிப்பிட வாயிலில் காவல் பணியை செய்கிறது. இதனால் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பெண் பூச்சிகளை பாதுகாக்கிறது மேலும் இது குறித்த தொடர் ஆய்வில் மேலும் பல அரிய தகவல்கள் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, March 26, 2012

48 மணி நேரத்தில் 3 மில்லியன் ஐபேட்கள் விற்று ஆப்பிள் சாதனை!


எலக்ட்ரானிக் சாதன உலகில் ஆப்பிள் நியூ ஐபேட் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. மார்ச் 16 தேதி விற்பனைக்கு வந்த ஆப்பிளின் நியூ ஐபேட் டேப்லட் 2 நாட்களில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
ஸ்தம்பிக்க வைக்கும் புதிய தொழில் நுட்பம் ஒன்று இந்த நியூ ஐபேட் டேப்லட்டில் இருக்கிறது. இதன் ரெட்டினா டிஸ்ப்ளே என்ற பிரத்தியேகமான தொழில் நுட்பம் ஒன்று இதில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இதில் உள்ளதால் எதையும் நேரில் பார்ப்பது போன்ற துல்லியத்தினை வெகு சுலபமாக பெறலாம்.


நியூ ஏ5எக்ஸ் சிப், குவாட் கோர் கிராஃபிக்ஸ், 5 மெகா பிக்ஸல் ஐசைட் கேமரா, 1080பி உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட வீடியோ என்று இதன் வசதிகள் ஏறாலம். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான இந்த ஆப்பிள் நியூ ஐபேடில், வைபை மற்றும் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் தொழில் நுட்பமும் உள்ளது.வைபை தொழில் நுட்பத்தினை கொண்ட நியூ ஐபேட் டேப்லட்டை வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் பெறலாம். 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பேஸ்புக்கின் புதிய விஸ்வரூபம்!


இன்டர்வியூவுக்கு வருபவர்களிடம் ஃபேஸ்புக் முகவரியை கேட்கும் புதிய வழக்கம் அதிகரித்து வருகிறது. இன்டர்வியூவிற்கு வந்தவர்களிடன் ஃபேஸ்புக்கின் முகவரியை கேட்கும் புதிய வழக்கம்.வளர்ந்து வரும் சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இன்டர்வியூவிற்கு வருபவர்களிடம், ஃபேஸ்புக்கின் முகவரியை கேட்கும் அளவிற்கு, ஃபேஸ்புக் விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்பது எல்லோருக்கும் ஒரு வித திகைப்பை ஏற்படுத்தும் செய்தியாக தான் இருக்கிறது.


இது போன்ற ஒரு சம்பவம் நடந்தும் கூட இருக்கிறது. நியூ யார்க்கை சேர்ந்த பேஸ்சட் என்பவர் இன்டர்வியூவிற்கு  சென்ற இடத்தில் அவரின் ஃபேஸ்புக் அக்கவுன்டு முகவரி கேட்கப்பட்டது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் பேஸ்சட் தனது ஃபேஸ்புக் முகவரியை கொடுக்கமறுத்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஃபேஸ்புக் ஆக்கவுன்டு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். இதை சொல்லுமாறு கேட்பது ஒருவரின் டைரியை படிக்க கேட்பது போன்று தான் என்று கருதப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஆன்ட்ராய்டுக்கு டாடா காட்டுமா? விண்டோஸ்!


ஸ்மார்ட்போன்களுக்காக இதுவரை 70 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் விண்டோஸ் போன் மார்க்கெட்டில் வெளியிடப்பட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மைக்ரோசாப்ட். ஸ்மார்ட்போன், டேப்லட், கம்ப்யூட்டர் என்றாலே கூடுதல் வசதிகளுக்காக அவை அளிக்கும் அப்ளிக்கேஷன்கள்தான் அனைவராலும் விரும்பப்படுகிறது. அந்த வகையில், ஆன்ட்ராய்டு மார்க்கெட்டுக்கு போட்டியாக விண்டோஸ் போன் மார்க்கெட்டும் தற்போது அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.


தற்போது விண்டோஸ் போன் மார்க்கெட்டில் சராசரியாக  நாள் ஒன்றுக்கு 300 புதிய அப்ளிக்கேஷன்கள் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் 50 ஆயிரம் அப்ளிக்கேஷன்களாக இருந்த விண்டோஸ் போன் அப்ளிகேஷன் மார்க்கெட் தற்போது 70,000ஐ கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும்20,000க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் விண்டோஸ் போன் மார்க்கெட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது.அப்ளிக்கேஷன்களை அதிகமாக வெளியிடும் ஆன்ட்ராய்டு நிறுவனத்திற்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கிறது விண்டோஸ் போன் நிறுவனம் என்று கூறலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ரத்தத்தை சுத்திகரிக்கும் உணவுப் பொருட்கள்!


மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம் ஆக்சிஜனை மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்புவதோடு மட்டுமல்லாமல் மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது.
ரத்தம் சுத்தமானதாக இருந்தால் தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாட முடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே உள்ளது.


எலுமிச்சை: ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்துப் பாருங்களேன். உங்களின் உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை நீங்களே உணர்வீர்கள்.


நோய் எதிர்ப்பு சக்தி மிளகு: உணவுப் பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.


பசுமை காய்கறிகள்: பச்சை நிறமுடைய காய்கறிகள், கீரைகள் உடல் சக்தியை அதிகரிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள குளோரோபில் மனிதர்களுக்குத் தேவையான சக்தியை ரத்தத்திற்கு அளிக்கிறது.டாக்ஸினை ரத்தம் கிரகித்துக் கொள்ள உதவிபுரிகிறது. நமக்குத் தேவையான சக்தி கிடைக்க அன்றாட உணவுகளில் பச்சைக் காய்கறி சாலட்களை அதிகம் உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


கண்ணிற்கு ஒளிதரும் காரட்: காரட்டில் உள்ள கரோட்டின் சத்து கண்ணிற்கும், சருமத்திற்கும் நன்மை தரக்கூடியது. நமது உணவில் காரட் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. சமைத்து உட்கொள்வதை விட காரட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.


வெள்ளைப்பூண்டு: உடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த உணவாகும். இதில் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது. ரத்தத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.


இது இறந்து போன செல்களை நீக்குவதோடு புதிய செல்களை ரத்தத்தில் விரைந்து உற்பத்தி செய்கிறது. எனவே வெள்ளைப்பூண்டினை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு உடலுக்குத் தேவையான சக்தி எளிதில் கடத்தப்படும். இதனால் உடலும் உற்சாகமடையும் என்பது அவர்களின் அறிவுரையாகும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புதிய அம்சங்களுடன் கூடிய Adobe Photoshop CS6 Beta பதிப்பை தரவிறக்க!


கணணி உபயோகப்படுத்துபவர்கள் அனைவருக்கும் Adobe Photoshop மென்பொருள் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்.தற்போது இதன் புதிய பதிப்பான CS6 Beta வெளிவந்துள்ளது. இந்த மென்பொருள் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை நிறுவும் போது I want to try Adobe Photoshop CS6 for a limited time என்பதை கொடுத்து உள்ளே சென்றால் சீரியல் எண் கேட்காது, இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.


மேலும் இந்த இலவச பதிப்பை 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆக்டிவேட் செய்ய அடோப் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இலவசமாக ஆன்லைனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.இதற்கு முன் Adobe ID இல்லை என்றால் புதிதாக உருவாக்கி கொண்டு ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் வேலை செய்யாது.

தரவிறக்க சுட்டி!

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, March 22, 2012

130 வருடங்களுக்​கு முந்தைய மம்மி சீனாவில் கண்டுபிடிப்​பு!

130 வருடங்கள் பழமை வாய்ந்த மம்மி ஒன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த சிலர் நிலத்தை தோண்டும் போது இந்த மம்மி கிடைத்துள்ளது.பெண் ஒருவரின் தோற்றத்தில் காணப்படும் இந்த மம்மியின் உடலில் தோல் காணப்படுவதுடன், பற்களும் பெருமளவில் சிதைவடையாமல் காணப்படுகின்றது.பியூயியான் மாநிலத்திலுள்ள நின்ங்டே எனும் இடத்தில் காணப்பட்ட இந்த மம்மிக்கு அருகில் கல்வெட்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதில் கடந்த 1882ம் ஆண்டு இந்த மம்மி புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.







பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, March 21, 2012

குற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ள அமெரிக்கா!


குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தாக்குவது போன்ற செயல்களுக்காக அமெரிக்கா புது வித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ளது.இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படாது, ஆனால் உடல் தீப்பிடித்தது போல எரியும்.ஆனால் இந்த ஆயுதத்தின் மூலம் சில சமயம் மக்களும் காயம் அடைகின்றனர். இதனால் இதற்கான மாற்று தீர்வை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது.


“ஆக்டிவ் டினையல் சிஸ்டம்”(ஏடிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் கதிர்வீச்சு ஆயுதத்தை அமெரிக்க இராணுவம் உருவாக்கியுள்ளது. வர்ஜீனியா மாநிலம் குவான்டிகோ நகரில் உள்ள இராணுவ தளத்தில் 2 வாரம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு இந்த ஆயுதம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இது செயல்பாடு குறித்து இராணுவ அதிகாரிகள் கூறியதாவது: மரணம் ஏற்படுத்தாத வகையில் தாக்குதல் நடத்தும் ஆயுத ஆராய்ச்சியில் அமெரிக்கா நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.


15 ஆண்டு முயற்சிக்கு பிறகு ஏடிஎஸ் ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளிப்படுவது போல, ஏடிஎஸ் கருவியில் இருந்து மைக்ரோவேவ் ரேடியோ கதிர்வீச்சு வெளிப்படும்.வீட்டு உபயோக பொருட்களில்(மைக்ரோவேவ் ஓவன்) இருக்கும் கதிர்வீச்சைவிட இது 100 மடங்கு வலுவாக இருக்கும். சக்தி வாய்ந்த லென்ஸ் கருவி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரியைக்கூட துல்லியமாக குறிபார்த்து சுட முடியும்.கருவியில் இருந்து 95 ஜிகா ஹெர்ட்ஸ் என்ற அளவுக்கு கதிர்வீச்சு பாயும். சாதாரண நிலையில் மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட். 2 வினாடிக்கு இந்த கதிர்வீச்சு உடலில் பாய்ந்தாலே 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பாயும். உடல் எரியும்.


அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் கதிர்வீச்சு எதிரியை தாக்குவதால் உடல் முழுவதும் பற்றியெரிவது போல எரிச்சல் ஏற்படும். எதிரி நிலைகுலைந்து விடுவார். ஆனால் தோலில் மிக மிக சொற்பமான ஆழத்துக்கு(ஒரு இஞ்ச்சில் 64-ல் ஒரு பங்கு) மட்டுமே கதிர்வீச்சு இறங்கும் என்பதால் காயம் ஏற்படாது.மனிதர்கள் மீது 11 ஆயிரத்துக்கும் அதிகமான முறை இந்த கதிர்வீச்சு பாய்ச்சி சோதனை செய்யப்பட்டது. அதில் 2 முறை மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.எனவே இது மிகவும் பாதுகாப்பானது. ஆப்கான் போரின் போது ஏடிஎஸ் ஆயுதம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் ஒருமுறைகூட பயன்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பொருளாதாரத்தில் பிரிட்டனை மிஞ்சும் ஆப்ரிக்க நாடுகள்!



கடும் பஞ்சத்தால் வறண்டு கிடந்த எத்தியோப்பியா போன்ற ஆப்ரிக்க நாடுகள், தற்போது பிரிட்டனை மிஞ்சும் அளவுக்கு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது.உலகின் பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் பத்து நாடுகளில் ஏழு நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையே. இவை எதிர்வரும் 2015ம் ஆண்டிற்குள் பொருளாதாரத்தின் உயர்ந்த நிலையை அடையக்கூடும்.பிரிட்டிஷ் நிறுவனங்கள் சில ஆப்பிரிக்காவில் காலூன்றத் தொடங்கியுள்ளன. டயாகியோ என்ற நிறுவனம் ஜனவரியில் மெடா அபோ என்ற எத்தியோபியாவின் மிகப்பெரிய மது தயாரிக்கும் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் விலை மொத்தம் 150 மில்லியன் பவுண்டாகும்.


பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையத்தின் மூத்த பொருளியல் அறிஞரான டிம் ஓலென்பர்க் கூறுகையில், ஆப்பிரிக்காவில் எண்ணெய், தாமிரம் போன்ற விலை மதிப்புடைய பொருட்கள் கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.இப்போது வாங்கும் திறன் அதிகம் உடைய மத்திய வர்க்கம் உருவாகி வருவதால் ஆப்பிரிக்காவின் சந்தை பெரியதாகவும், அனைவரையும் கவரக் கூடியதாகவும் திகழ்கிறது என்றார். எண்ணெய் வளம் மிகுந்திருப்பதால் நைஜீரியா பொருளாதார வளம் மிகுந்த நாடாகவும் உயர்ந்து வருகிறது.சஹாராவைச் சார்ந்துள்ள ஆப்பிரிக்க நாடுகள் 2000ம் ஆண்டில் 322 பில்லியன் டொர் வருமானத்தை கொண்டிருந்தன. ஆனால் 2011ம் ஆண்டில் இந்த வருமானம் நான்கு மடங்கு உயர்ந்து 1.22 டிரில்லியன் டொலராக வளர்ந்து விட்டது. இது பிரிட்டனின் வருமானத்தில் சரிபாதியாகும்.


சீனா பில்லியன் கணக்கில் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீனா 6 பில்லியன் டொலரை காங்கோவுக்கு வழங்கியது. இத்துடன் 2400 மைல் தூரத்திற்கு சாலை வசதியும், 2000 மைல் தூரத்திற்கு இருப்புப்பாதை வசதியும், 32 மருத்துவமனைகளும், 145 சுகாதார மையங்களும் ஏற்படுத்தித் தந்தது. இவற்றிற்குப் பதிலாக பத்து மில்லியன் டன் தாமிரமும், 400,000 டன் கோபால்ட்டும் பெற்றுக் கொண்டது.எத்தியோப்பியாவிலிருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களில் காப்பியே ஐம்பது சதவீதமாகும். சீனாவிற்கு இந்த காப்பி அதிகமாக ஏற்றுமதியாகிறது. சீனாவில் கார் கம்பெனியான FAW இன் துணைத்தலைவர், ஆப்ரிக்க நாடுகளில் கார் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்குவது குறித்துப் பேசினார்.


இன்னும் பல மேலைநாட்டு நிறுவனங்களும் ஆப்பிரிக்காவிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் மோசாம்பிக் நாட்டுக்கும் ஷெல் கம்பெனி வரத் தொடங்கி உள்ளது. மோசாம்பிக் உலகில் எரிவாயு அதிகமாக கிடைக்கும் நாடுகளில் ஒன்றாகும் என்பதால் ஷெல் நிறுவனம் இங்கு கால் பதிக்க விரும்புகிறது.கடந்தாண்டு ஆப்பிரிக்காவில் பல வங்கிகள் தோன்றின. பர்க்லேஸ் வங்கிக்கு மட்டும் 910 மில்லியன் பவுண்டு இருப்பு உள்ளது. 14.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, March 20, 2012

நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்காணிப்பதற்கு!

Computer KeyloggerKeylogger Download
உங்களது கணணியை வேறு நபர்கள் உபயோகித்தால், அவர்களின் செயற்பாடுகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.இதற்கு Key logger என்ற மென்பொருள் பயன்படுகிறது. கணணியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இந்த மென்பொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு ஒருமுறை கணணியின் செயற்பாடுகளை ஸ்கிறீன்ஷொட் எடுத்து வைத்திருக்கும். அத்துடன் Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.


இதன் சிறப்பம்சங்கள்:
Record Each Keystroke: கீபோர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.Instant Chat Messages Recording: பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.Track Emails: கணணியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது.Monitor Websites: கணணியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது.Review Every Downloaded File: தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
தரவிறக்க சுட்டி

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அனைவருக்கு​ம் சமமான ஒலியை பிறப்பிக்கு​ம் நவீன ஒலியியல் இயந்திரம்!


பொதுவாக தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால் இருப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிவரும் ஒலியானது கேட்கும் விதம் வேறுபடும்.இதற்கு காரணம் தொலைக்காட்சியில் இரு ஸ்பீக்கர்கள் மட்டுமே அதிகளவில் காணப்படும், இதனால் வெவ்வேறு திசைகளில் இருப்பவர்களுக்கு ஒலியின் விளைவு வேறுபடுகின்றது.


ஆனால் தற்போது அதி சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு அறையில் இருந்து தொலைக்காட்சியை பார்க்கும் அனைவருக்கும் சமமான ஒலியின் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒலி பிறப்பாக்கி கண்டறியப்பட்டுள்ளது.ஏறத்தாழ ஆறு அடிகள் நீளமான இந்த இயந்திரத்தில் 92 ஸ்பீக்கர் ட்ரைவர் காணப்படுகின்றது. இவற்றில் 30 குறைவான ஒலி விளைவிற்கும் 32 அதி உயர் ஒலி விளைவிற்கும் மீதி மத்திய ஒலி விளைவிற்கும் பொறுப்பானவையாகும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நவீன முறையில் ஏவப்பட்ட விண்கலம்!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய விண்கலம் ஒன்றை வழமைக்கு மாறான முறையில் ஏவியுள்ளது.இந்த விண்கல ஏவு முறையினை அதன் புரோகிராமர்களில் ஒருவரான மிச்சேல் இன்ரர்பார்ட்ரோலா என்பவர் தனது கமராவினால் பதிவு செய்துள்ளார்.இந்த விண்கலத்தில் Solid Rocket Booster(SRB) எனும் கருவி இணைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் விண்ணில் இடம்பெறும் நிகழ்வுகளை துல்லியமான ஒலியுடன் உயர் பிரிதிறனில் பதிவு செய்ய முடியும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்!


உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது.உடல் இளைப்பது, எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது எ‌ன்றா‌ல் அது தண்ணீர் ‌சி‌கி‌ச்சைதா‌ன்.


த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை எ‌ன்றா‌ல் ஏதோ பு‌திய ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்று எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதுதா‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.பலரு‌ம் சா‌ப்பாடு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ர் ப‌க்கமே‌ போக மா‌ட்டா‌ர்க‌ள். அ‌ப்படியானவ‌ர்களது உட‌‌லி‌ல் எ‌ன்னெ‌ன்ன பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தா‌ல் அவ‌ர்களது நெ‌ஞ்சே ஒரு ‌நி‌மிட‌ம் ‌நி‌ன்று ‌விடு‌ம்.


த‌ண்‌ணீ‌ர் ந‌ம்மை பு‌த்‌துண‌ர்‌ச்‌சியாகவு‌ம், ஆரோ‌க்‌கியமாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌கிறது. த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதை ஒரு பழ‌க்கமாக‌க் கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். நாளொ‌ன்று‌க்கு 8 முத‌ல் 10 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம். கோடை கால‌த்‌தி‌ல் இ‌ன்னு‌ம் அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம்.அ‌வ்வ‌ப்போது த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்தை மன‌தி‌ல் ப‌திய வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் குழ‌ந்தைகளையு‌ம் அடி‌க்கடி த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வையு‌ங்க‌ள்.


ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் குழ‌ந்தைக‌ள் பலரு‌ம் த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக அரு‌ந்த மா‌ட்டா‌ர்க‌ள். அத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் க‌‌ழிவறையை அடி‌க்கடி பய‌ன்படு‌த்த முடியாது எ‌ன்பதுதா‌ன்.எனவே ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலைமையை சொ‌ல்‌லி‌ப் பு‌ரிய வையு‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கு‌ம் போதுமா‌ன ‌நீ‌ர் கொடு‌த்தனு‌ப்பு‌ங்க‌ள்.என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினாலு‌‌ம் குறையாத உடல் எடை, அ‌திக‌ப்படியான த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதா‌ல் குறைவதை‌க் க‌ண்கூடாக பா‌ர்‌க்கலா‌ம்.


உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடி‌த்தா‌ல் வ‌யிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடவாழத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி‌க் கொ‌ண்டு கடைசியில் உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் தேவைய‌ற்ற ‌விஷய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ண்டு வெளியேறி விடுகிறது.எனவே அ‌திகமாக‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருபவ‌ர்களு‌க்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கு‌ம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நல்ல நண்பர்கள் உருவாவதைத் தடுக்கும் பிரிட்டன் பள்ளிகள்!


பிரித்தானியாவில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல நண்பர்களாக உருவாவதை தடுத்து விடுகின்றனர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வின் முடிவு குறித்து உளவியல் கல்வி நிபுணர் கேய்னர் சுபுதே கூறுகையில், ஆரம்பப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் நட்புணர்வோடு பழக வேண்டும் என்பதற்காகவே, தனி நண்பர்கள் உருவாகாமல் ஆசிரியர்கள் தடுத்து விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்து விட்டால் அவர்களைப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் வருந்துவர் என்பதற்காகவும் அவர்கள் தடுத்து விடுகின்றனர்.மாணவர்களின் மனம் வேதனைப்படக் கூடாது என்பதில் அக்கறைக் காட்டும் ஆசிரியர்கள், மாணவர்களில் சிலருக்கு உற்ற நண்பர்கள் தேவை என்பதையும் உணரவேண்டும்.மாணவர்கள் தங்களது சக நண்பர்களைப் பிரியும் போது ஏற்படும் துக்கத்தை அறிந்து அதிலிருந்து மீளவும் கற்றுக் கொள்ள வழிவகை தேவை என்பதையும் ஆசிரியர்கள் உணரவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து கருத்துக் கூறிய தேசிய தலைமையாசிரியர் சங்கத்தின் ரஸ்ஸல் ஹாபி, சில பள்ளிகள் உற்ற நண்பர்கள் உருவாகாமல் தடை செய்வதை ஒத்துக்கொண்டுள்ளார்.ஆனால் மாணவர்களிடையே நெருங்கிய நட்பு உருவாதை முழுவதுமாக தடைசெய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ஏனெனில் மனித வாழ்க்கை முழுவதும் நட்பும், பிரிவும் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்!


உலக அளவில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்ததில் ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அதிக அளவில் ஆயுதங்கள், இராணுவ தளவாடங்கள், நவீன போர்க் கருவிகள், விமானங்கள் போன்றவற்றை வாங்கி குவித்து வருகின்றன.அந்த வகையில் அதிக ஆயுதங்கள் வாங்கிய நாடுகளை ஸ்டாக்கோல்ம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனம்(எஸ்ஐபிஆர்ஐ) பட்டியலிட்டுள்ளது.அதில் கடந்த 2002-06ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2007-11ம் ஆண்டுகளில் உலக அளவில் பரிமாறப்பட்ட ஆயுதங்கள் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.


அதில் ஆசிய பிராந்தியங்களின் இறக்குமதி மட்டும் 44 சதவீதம். ஐரோப்பா(19%), மத்திய கிழக்கு நாடுகள்(17%), வட, தென் அமெரிக்கா(11%), ஆப்ரிக்கா(9%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.2007-11ம் ஆண்டில் ஆசியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் 10 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தென்கொரியா(6%), சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 5 சதவீதம், சிங்கப்பூர்(4%) அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.மேலும் மொத்த சர்வதேச ஆயுத இறக்குமதியில் இந்த 5 நாடுகளின் பங்கு 30 சதவீதம். 2002-06ம் ஆண்டு காலத்துடன் ஒப்பிடுகையில், 2007-11ம் ஆண்டில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 38 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF