Wednesday, October 13, 2010

சுரங்கத் தொழிலாளர்கள் எப்படி மீட்க்கப்படுவர்


சில்லி நாட்டில் சுரங்கத்தில் வேலைசெய்துகொண்டிருந்தபோது, சுரங்கம் இடிந்து அதன் வாயில் மூடியது. சுமார் 700 மீட்டர் ஆழத்தில் 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். வேறு இடத்தில் சிறிய ஓட்டை ஒன்றைப்போட்டு அதனூடாக உணவு, பிராண வாயு என்பன வினியோகிக்கப்பட்டன. இதில் பலர் மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருந்தனர். இந்நிலையில் சுரங்கத்தில் உள்ளவர்களை வெளியே எடுப்பது பெரும் சவாலாக இருந்தது. அதாவது ஒரு இடத்தில் தோண்டப்போய், மீண்டும் கல் பாறைகள் உடைந்தால், அது அனைவரையும் கொன்றுவிடும் என்ற நிலை இருந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள், இதை ஒரு சவாலாக ஏற்று உதவ முன்வந்தது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டு படிப்படியாக 3 குழிகளைத் தோண்டி அதனூடாக 33 பேரையும் சில்லி நாட்டு நிபுணர்கள் மீட்க்க உள்ளனர் . இங்கு 3 காணொளிகள் இனைக்கப்பட்டுள்ளன. அதில் எவ்வாறு இச் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என விரிவாகக் காண்பிக்கப்படுகிறது. இந்த மீட்ப்பு நடவடிக்கை இன்னும் 2 தினங்களில் ஆரம்பமாகவுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF