Wednesday, October 27, 2010

சுமாத்ரா பூகம்பத்தில் 40பேர் பலி மேலும் 380 பேரைக் காணவில்லை



இந்தோனேஷியாவின் சுமாத்ரா பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் இதுவரை 40 பேர் மரணமடைந்துள்ளதாகவும்,மேலும் 380 பேரைக் காணவில்லை என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
7.7றிச்டர் அளவு கொண்ட இந்த பூகம்பம் சுமாத்ரா கரையோரப் பகுதியைத் தாக்கியது.
கடலுக்கு அடியில் 20.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் மூலம் ஆறு மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும் அறிவிக்கப்படடுள்ளது. ஆரம்பத்தில் பாரிய சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. எவ்வாறாயினும் சுமார் 200 பேர் மட்டில் வாழ்ந்த சிறிய கரையோரக் கிராமம் ஒன்று முற்றாக கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இங்கிருந்து 40 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. உயிர் இழப்புக்கள் பற்றிய ஊர்ஜிதம் செய்யப்பட்ட சரியான தகவல்களை இன்னும் பெறமுடியாதுள்ளது.பலர் காணாமல் போயுள்ளதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் இன்னமும் கடும் சீற்றம் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட பல தீவுனக் கிராமங்களை மீட்புப்படையினரால் இன்னும் சென்றடையமுடியாதுள்ளது.
பூகம்பமும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டபோது தீவுகளைச் சுற்றி படகுகளில் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த பல படகுகளும் அவற்றில் இருந்த பலரும் காணாமல் போனவர்களுள் அடங்குவர். இத்தகைய ஒரு படகில் மட்டும் சுமார் 100 பேர் இருந்ததாக அந்தப் படகுப் பயணத்தை ஒழுங்கு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF