சிலி சுரங்க இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 33 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உலகமெங்கும் உள்ள மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக அதனை தொலைக்காட்சியில் கண்டு களித்தனர்.
2,000 அடிக்குள் 66 நாட்களாக உணவு சூரிய வெளிச்சம் ஏதுமின்றி சிக்கித் தவித்தோர் அனைவரும் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்ட போது மறுபிறவி எடுத்ததை போன்று உணந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் மிகுந்த சிரத்தையுடனும் வேகமாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்ததை விட பாதி நேரத்திலேயே அனைவரும் மீட்கப்பட்டது உறவினர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
மீட்புப் பணி நடைபெற்ற இடத்தில் சிலி அதிபரும் காத்திருந்து மீட்கப்பட்டு வெளியில் வந்தவர்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். ஒவ்வொருவரும் மீட்கப்பட்டவுடன் வானவேடிக்கை கொண்டாட்டங்களும் இடம்பெற்றது.
தோராயமாக ஒருவரை மீட்க 40 நிமிடங்கள் வரை ஆகியது. 33 பேரும் மீட்டப்பட்டு முடிந்தவுடன் பிரார்த்தனைகளும் , தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. சுரங்கத்தினுள் இருந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் தங்கள் உறவுகள் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF