Monday, October 25, 2010

2013 ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரும் விண் புயல்


நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் 2010, மார்ச் 30 அன்று சூரியனிலிருந்து வெளிப்பட்ட பெரும் வெப்பத்தீற்றலை காட்டுகிறது.

சூரியன் தனது ஆழ்தூக்கத்திலிருந்து விழித்து வருவதாக குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், வருகிற 2013 ஆம் ஆண்டுக்குள் உலகின் தொலைதொடர்பு மற்றும் மின்சக்தி கட்டமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்யும் மிகப்பெரும் வான்வெளி புயல்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

சூரிய செயல்பாடுகளில் அதிக மற்றும் குறைந்த விசை கொண்ட ஒரு பதினொரு வருட சுழற்சி முறையில் இயங்கி வரும் நமது சூரியன் தற்போதுதான் அது ஒரு குறிப்பிடத்தகுந்த அமைதியான நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நகர்வதாக கூறுகின்றனர்.  அதில் கத்ரீனா புயலை விட இருபது மடங்கு பொருளாதார நஷ்டத்தை உருவாக்க வல்ல 100 ஹைட்ரஜன் குண்டுகளின் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆக்ரோஷமான பெரும் வெடிப்புகள் சூரியனில் ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

தீவிரமான ஒரு சூரிய (மின்காந்த) புயலில் பெரும் மின்சேமிப்பு காலங்கள், செயற்கைக்கோள் திசையறிதல், விமானப் பயணங்கள், பணப்பரிமாற்றங்கள் மற்றும் அவசர கால் ரேடியோ தொடர்புகள் கூட முழுவதுமாக பாதிக்கப்படும்.
 

2013ஆம்  ஆண்டு வாக்கில் சூரியனிலிருந்து வர இருக்கும் ஆக்ரோஷமான விசிறல்கள் மற்றும் அதன் பாதிப்புகளிளிருந்தும் பூமியை பாதுகாப்பது பற்றிய சாத்தியங்களை ஆராய வாஷிங்டனில்    சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூடி ஆலோசனை செய்தனர். இந்த விண்வெளி மாநாட்டில் விஞ்ஞானிகள், அரசுகளின் கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நாசா பல்வேறு செயற்கை கோள்களை பயன்படுத்தி வருகிறது.

தேசிய அறிவியல் மையம் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இத்தகைய பெரும் விண்வெளி நிகழ்வுகள் சமூக பொருளாதார நிலைகளின் மீது தாக்கம் ஏற்படுவதைப் பற்றிய பிரச்சனையை ஆய்வுக்கு கொண்டு வந்தது. ஆனால், இந்த சூரிய புயல் எப்போது நம்மை சமீபிக்கும்  என்று முன்பே அறிய முடிந்தால் பாதிப்புகளை பெருமளவு தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

SAFE MODE இல் செயற்கை கோள்களை இருக்க வைப்பது, மின்கலங்களை தொடர்பிலிருந்து அகற்றி வைப்பது போன்றவற்றின் மூலம் மின்தாக்குதல்களை தவிர்க்கலாம் என்று இவர்கள் யோசனை கூறுகின்றனர்.

இவற்றில் மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் - அமெரிக்க தேசிய கடல் மற்றும் வான்வெளி கழகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கழகம் நாசாவுடன் இணைந்து சேதத்தைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF