Thursday, October 14, 2010

தூக்கத்தைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்யும் புதுமையான தளம்

தூக்கம் குறைவதினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப்
பற்றிதான் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் சரியான தூக்கத்தினால்
நோய் மட்டுமல்ல அத்தனையையும் குணப்படுத்தலாம் என்று
விரிவான ஆராய்ச்சி செய்கிறது தூங்கும் கல்வி என்ற இணையதளம்

தூங்குவதைக் கூட கடமையாக செய்யும் பலபேருக்கு மத்தியில்
தூங்குவதை சுகமாகவும் அதே சமயத்தில் பாடமாகவும் சொல்லி
விரிவான ஆராய்ச்சி செய்கிறது ஒரு இணையதளம். இந்தத் தளத்திற்கு
சென்று தூக்கம் பற்றிய நம் அனைத்து சந்தேகங்களையும் கேட்கலாம்.
படுத்தால் தூக்கம் வர அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதில்
இருந்து தூங்கும் நேரம் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்பது
வரை அனைத்து கேள்விகளையும் கேட்கலாம்.
இணையதள முகவரி : http://www.sleepeducation.com
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எவ்வளவு
நேரம் தூங்க வேண்டும். அதிகமாக தூங்கினால் ஏற்படும் பிரச்சினை
போன்றவற்றை ஆராய்ச்சி செய்து இந்தத்தளத்தில் வெளியீட்டுள்ளனர்.
இந்தத்தகவல்கள் அனைத்தும் American Academy of Sleep Medicine
கொடுக்கும் தகவல்கள் கண்டிப்பாக இந்தத்தளத்தின் அனைத்து
தகவல்களும் தங்களுக்கு தூக்கம் பற்றிய விழிப்புணர்வையும்
பாடத்தையும் கற்றுகொடுக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF