Tuesday, October 26, 2010
நீங்கள் நினையுங்கள்; நான் அதன்படி நடக்கிறேன்
நமது எண்ணங்களைப் படித்து செயலாற்றக் காத்திருக்கிறது ஜப்பான் தயாரிக்கப்போகும் ரோபோட்கள்.
Brain - Machine Interface தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மனித மூளையின் நியுரோ அலைகளையும், அதன் இரத்த ஓட்டத்தையும் வைத்து எண்ணங்களை அளக்கும் கருவியின் மூலம் இதனை சாத்தியமாக்க முயலும் இந்த வகை ரோபோட்கள் அடுத்த பத்தாண்டுகளில் வெளிவந்து விடும் என்று நம்பபப்படுகிறது.
இது மட்டுமல்ல உங்கள் ஒரு விரல் அசைவு இல்லாமலே உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கவும் முழுவதுமாக உங்கள் சிந்தையின் மெல்லாம் கட்டமைக்கப்பட்ட குறுந்தகவல்களை (SMS) அனுப்பும் செல்போன்களும் இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வரவிருக்கின்றன என்று நிக்கி நாளிதழ் தெரிவிக்கிறது.
இது, ஜப்பான் அரசாங்கமும் ஒரு தனியார் நிறுவனமும் கூட்டாக இணையவுள்ள மிகப்பெரும் தயாரிப்புத் துறையாக வரவிருக்கிறது என்றும் அந்த நாளிதழ் தெரிவிக்கிறது. இதுமட்டுமின்றி வாகன ஓட்டி பசியாக உணரும்போது அருகே எங்கெல்லாம் உணவகங்கள் உள்ளன என்று தேடும் மென்பொருட்களும், அறையின் தட்பவெப்ப நிலை அதிகக் குளிராகவோ, சூடாகவோ இருப்பதாக அதிலுள்ள மனிதர் உணர்ந்தாலே அதற்கு தகுந்தாற்போல ஏர் கண்டிஷனரை அட்ஜஸ்ட் செய்திடும் தொழில் நுட்பமும் வர உள்ளதாக நிக்கி நாளிதழ் கட்டியம் கூறுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF