Wednesday, October 27, 2010
காகங்களுக்கே அதிக மூளை: புதிய கண்டுபிடிப்பு
காகங்களுக்கு அதிக மூளை இருப்பதாகவும், அவை மனிதர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையது என்றும் பாரம்பரியமாக நம்பி வந்தனர்.
சமீபகாலமாக விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.
பொதுவாக இவ் உலகில் மனிதரைத் தவிர வேறு உயிரினங்கள் கருவிகளைப் பாவிப்பதே இல்லை. சில மிருகங்கள் தனது உணவை பிளக்க கல்பாறைகளைப் பயன்படுத்தினாலும், அவை கருவிகளைப் பயன்படுத்துவது இல்லை. அப்படி இருக்கையில் காகம் மட்டும் தனக்கு உதவும் வகையில் கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள், மரக் கட்டை ஒன்றினுள் ஓட்டைகளைப் போட்டு அதனுள் வசிக்கும் சிலவகை புழுக்களை காகங்களால் அவ்வளவு எளிதில் கொத்தித் தின்ன முடியாது. ஏன் எனில் காகங்களின் அலகுகள்(சொண்டு) மிகச் சிறியவை.
எனவே அவ்வாறு ஆழத்தில் இருக்கும் பூச்சிகளை சிறிய சுள்ளித் தடிகளைக் கொண்டு குத்தி வெளியே எடுத்து காகங்கள் உண்ணுகின்றன. இக் காட்சிகள் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. மற்றும் சில வகைப் புழுக்களில் கொடுக்கு காணப்படுவதால் அவை கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே காகம் சில வகைப் புழுக்களை சுள்ளித்தடியால் குத்தி எடுக்கிறது, கொடுக்குகள் உள்ள புழுக்களை இவை கையாளும் விதமே அலாதியானது. அவ்வகையான புழுக்களை காகங்கள் தடியால் குத்தி வெளியே எடுப்பது இல்லை, மாறாக தடியை அதன் கொடுக்குகளுக்கு இடையே நீட்ட, புழுக்களும் தடியை தனது எதிரி என நினைத்து கடிக்கிறது. அவ்வாறு கடிக்கும் நேரத்தில் கொடுக்குகள் தடியை இறுகப் பிடிக்கும், அப்போது காகம் லாவகமாக அவற்றை வெளியே எடுத்துவிடுகிறது.
பறவை இனங்களில் காகத்திற்கு மூளை அதிகம் என விஞ்ஞானிகள் தற்போது கூறி வருவதையே நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவந்தனர் என்பதே உண்மையாகும். சில காகங்கள் தமக்கு பிடித்த சுள்ளித் தடிகளை தம்மோடே வைத்திருப்பதாகவும், அவை பறந்து வேறு இடங்களுக்குச் சென்றால் கூட ஒரு கருவியாக அதைப் பயன்படுத்த அச் சுள்ளித் தடியை தன்னோடு கொண்டு செல்வதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF