
ரஷ்யாவின் கிழக்கிலுள்ள கம்சட்கா குடாவில் உள்ள இரண்டு எரிமலைகள் நேற்று வெடித்துச் சிதறின.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
எரிமலைகள் கக்கிய புகை மற்றும் சாம்பல் காரணமாக பல விமானங்களை மாற்று வழியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
மேலும் அண்மையில் இருந்த நகரம் ஒன்று முற்றுமுழுதாக சாம்பலினால் மூடப்பட்டது.
இப்புகைமண்டலமானது சுமார் 33,000 அடி உயரத்திற்கு மேல் எழும்பியுள்ளதாகவும் பசுபிக் சமுத்திரத்தின் மேலாக பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாம்பல் காரணமாக அண்மையில் உள்ள பாடசாலைகள் மற்றும் சிறுவர் பள்ளிகள் ஆகியன மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அங்குள்ள கட்டடங்கள் வெள்ளை நிறமாக மாறியுள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் கதவு மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடியவண்ணம் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
