Friday, October 15, 2010

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை, சுவிஸில் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது!

உலகின் மிகநீளமான சுரங்கப்பாதை என்ற சிறப்புப் பெற்றுள்ள, சுவிஸ் சென். கோத்தார்டோ சுரங்கப்பாதையிக் இறுதிக்கட்டத் தகர்ப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
எட்டு ஆண்களுக்கு முன் அல்ப்ஸ் மலையின் வடக்கு தெற்குப் பகுதிகளில் இருந்து மலையைக் குடையும் பணி தொடங்கப்பட்டது.
57 கிலோ மீற்றர் நீளமான இந்தப்பாதையின் நடுப்பகுதியில், சுமார் 2 மீற்றர் கனமான பாறைத் தொகுதியை, வடபகுதியில் இருந்து 'சிச்சி' எனற குறியீட்டுப் பேரைக் கொண்ட துளையிடும் இயந்திரம், ஐரோப்பிய நேரம் பகல் 2.05 மணிக்குத் துளையிடத் தொடங்கியது. சரியாக 2.18 நிமிடத்திற்கு, 2000க்கும் அதிகமான பார்வையாளர்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கானோர் உலகின் பலபாகங்களிலும் இருந்து தொலைக்காட்சி வழியாகவும் பாரத்திருக்க, பலத்த கரவொலிகளின் மத்தியில், தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி, சுரங்கப்பாதையின் இறுதிப்பகுதியைத் துளைத்தெடுத்து, இரு பகுதிகளையும் ஒன்றினைத்தது.
இணைக்கப்பட்ட பாதையின் வழியாக 'ஹோலி பார்பரா' உருவப் பொம்மையுடன், வடபகுதியிலிருந்து தென்பகுதிக்குச் சுரங்கப்பணியாளர்களில் ஒருவராகிய Hubert Baer கண்ணீர்மல்க, மகிழ்சிப்பெருக்கோடு முதல் அடியை எடுத்து வைத்து வந்தார். அவரைத் தொடந்து தொழிலாளர்களும் தொழில் நுட்பவியலாளர்களும், மறுபுறத்துக்கு வர, மறுபுறத்தில் திரண்டிருந்த பார்வையாளர்களும் தொழிலாளர்களும் மகிழ்ச்சிப் பெருக்கோடு, கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.
பலநூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பு, எட்டுப் பணியாளர்களின் உயிர்த்தியாகம், 13.6 பில்லியன் அமெரிக்க டொலர் பொருட்செலவு என்பவற்றால், உலகின் மிக நீளமான மலைக்கீழ் சுரங்கப்பாதை இன்று வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF