Friday, October 29, 2010

சிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம்.


சிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம். 2030 இற்குள் அந்த சிவப்புக் கிரகத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம் தொடங்கப்பட்டுவிடும். அங்கு செல்லப்போகும் குடியேற்றவாசிகள் எப்போதுமே பூமிக்கு திரும்பிவரவே மாட்டார்கள்.
அன்று பூமியில் கண்டங்களை நாடுகளைத் தேடித் தேடி அவற்றை மனித சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் மனிதன். கொலம்பஸ் (Columbus) கால்வைத்த பின்னர்தான் அமெரிக்காவும், அமுன்ட்ஸென் (Roald Amundsen) சென்றடைந்த எல்லைதான் தென் துருவ முனையாகவும், போபிஸெர் (Frobisher) இனால் Northwest Passage இன்னூடாக கரைதட்டிய தீவுகள்தான் கனடாவின் மேலுள்ள குட்டிக் குட்டித் தீவுகளாகவும் இந்த உலகிற்கு அறிமுகமாயின. அவர்களின் அசாத்திய துணிச்சல்தான் மனிதனிடத்தில் புதுப்புது தேசங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களைப் போல அசாத்திய துணிச்சலும் தியாகமும் நிறைந்த நான்கு விண்வெளி வீரர்களை செவ்வாயில் தரையிறக்கி அங்கே மனிதக் குடியேற்றத்தின் முதலாவது படியினை அடையப் போகின்றது நாசா. அவர்களுக்கு பூமியில் இருந்து உணவு போன்ற அத்தியவசியமான தேவைகள் சிறிது காலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனாலும் அவர்கள் செவ்வாயில் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தவரை முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு மனிதக் குடிறேற்றம் அங்கு நடைபெறத் தொடங்கும்.
Hundred Year Starship என்றும் இந்த ஒருவழிப் பயணத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட $10 பில்லியன் அமெரிக்கன் டொலருக்கு மேல் செலவாகும். இதனால்த்தான் இந்தப் பணயம் ஒருவழிப்பயணமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இறுதியாக 2007 ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்தினை நோக்கி ஏவப்பட்ட நாசாவின் Phoenix lander 2008 இல் செவ்வாயின் வட துருவத்தில் தரையிறங்கியிருந்தது. செவ்வாயின் ஒழுக்கிற்கும் பூமி்யின் ஒழுக்கிற்கும் இடைப்பட்ட தூரம் 34 மில்லியனில் இருந்து 250 மில்லியன் மைல்களுக்கு இடைப்பட்டாக இருக்கின்றது. இதனால் விண்வெளி விமானங்களின் பயண நேரம் மாதக்கணக்காக நீள்கின்றது. இதன் காரணமாக இந்த குடியேற்றத்திட்டத்திற்கு அணுக் கருச் சக்கியினை எரிபொருளாகப் பயன்படுத்தி பயணக் காலத்தினை நான்கு மாதங்களாக குறைக்கத் திட்டமிடப்படுகின்றது.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் சிவப்புக் கிரகமே பூமியினை ஒத்த உயிர் வாழ்க்கைக்கு தேவையான காரணிகளை கொண்டிருக்கின்றது. அங்கு துருவப் பிரதேசங்களில் உறைநிலையில் காணப்படும் பனிகட்டிகள் உயிரின வாழ்க்கைக்கு ஏதுவாக இருக்கும். மேலும் செவ்வாயில் நிலவும் காலநிலையும் பூமியில் நிலவும் காலநிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதா இருக்கின்றது. ஆனால் செவ்வாயில் வளி மண்டலத்தில் உள்ள காபனீர்ரொட்சைட்டின் செறிவு மிக அதிகம். எனவே அங்கு செல்லும் மனிதர்களுக்கு ஒட்சியன் கவசங்கள் இன்றியமையாததாகும்.
மனிதனின் காலடி இதுவரை பதியாத தடங்களை நோக்கிய இத்தகைய மனிதனின் பயணங்கள், புதுப் புதுக் கிரகங்களுக்கு மனிதனை ஏற்றுமதி செய்யும் திறனை வழங்கப் போகின்றது. இவ்வாறு செல்பவர்கள் அங்கே தமது காலணிகளை உருவாக்கி தாமாக வாழத் தொடங்கி விடுவார்கள். அங்கே மனித இராட்சியம் நிறுவப்படும். சொல்லப் போனால் பூமியில் கருவுற்ற மனிதன் தன் சிறகுகளை மெல்ல விரித்து பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கப் போகின்றான். இது இயற்கையின் சமநிலையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றதோ தெரியாது. நாடுகளுக்கு இடையிலே நடைபெறும் எல்லைப் போர்களும் இனங்களுக்கு இடையே நடைபெறும் உரிமைப் போரும் இனிமேல் கிரகங்களுக்கு இடையே நடைபெறக்கூடும். அதைவிடவும் கொலம்பஸினால் வட அமரிக்காவின் செவ்விந்தியருக்கும், ஸ்பெயினில் இருந்து நாடுகள் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்களால் மாயன்ஸ், இன்காஸ் இற்கும், ஐரோப்பியக் கைதிகளால் அவுஸ்ரேலிய பழங்குடியினருக்கும் நடந்த சோகமான இரத்தத்தால் எழுதிய சரித்திரங்கள் இனிமேல் மனிதன் என்றும் இந்த விலங்கினத்தால் வேற்றுக் கிரகங்களின் சுதேச வாசிகளுக்கும் நிட்சயமாக நடக்கப் போகின்றது. அதற்கான முதற் படிதான் இந்த செவ்வாய் நோக்கிய மனிதனின் நுாற்றாண்டு நட்சத்திரப் படகுத் திட்டமாகும்.

சிம்பன்சிஸ் (Chimpanzees), கொரில்லா (Gorillas), கியூமன்(humans), ஒராங்குற்றான்ஸ் (Orangutans) என்பவற்றிற்கு மூலக்குடும்பமாக இருக்கும் Hominidae இனில் தொடங்கி ஆபிரிக்கக் காடுகளில் ஆரம்பித்த Homo Ergaster இன் பணயங்கள் இன்று Homo Sapiens Sapiens(modern humans) என்னும் இன்றைய கூர்ப்பு விலங்காகி நாளை விண்ணில் வசிக்கப் போகின்றான். ஒருவேளை இந்த Homo Sapiens Sapiens செல்லும் கிரகங்களில் இவனை விட வலுவான கூர்ப்பினம் இருக்குமானால்.. அது Homo Sapiens Sapien தன் முடிவினை தானே தேடிச் செல்வதாய் இருக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF