Tuesday, October 26, 2010

நண்பரின் கணனியை உங்களின் கணனியில் இருந்தே பழுது பார்க்க டீம் வியூவர்


நீங்கள் ஒரு கணனி வல்லுநர். அதிக தூரத்திலுள்ள உங்கள் நண்பரின் கணனியில் தீடிரென பழுது ஏற்படுகிறது. அவர் உங்களிடம் உதவி கேட்கிறார். ஆனால் அவரின் டெஸ்க்டாப் ஐ அக்சஸ் செய்தால் மட்டுமே அவர் கண்னியில் என்ன பிரச்சனை என்பதை சரியாக கண்டறிய முடியும் என்ற நிலை. 

நேரில் சென்று பார்க்க முடியாது ஆனால் அவரின் கணனியிலும் உங்களிடமும் இணைய இணைப்புண்டு. இதன் மூலம் உங்களின் கணனியில் இருந்தே அவரின் டெஸ்க்டாப் ஐ பார்வையிட ஏதும் வழி உண்டா? 

அந்த வசதி டீம் வியூவர் எனும் இலவச மென்பொருளால் கிடைக்கிறது. இந்த மென்பொருளை பயன்படுத்த கீழ்வரும் முறைகளை கையாளுங்கள்.

1. http://www.teamviewer.com/download/எனற முகவரிக்கு சென்று டீம் வியூவரை டவுண்லோட் செய்யவும்

2. செட்டப் பைலை திறந்ததும் இன்ஸ்டோல் அல்லது ரன் என இரண்டு ஆப்ஸன்கள் காட்டப்படும் இதில் இன்ஸ்டோல் என்பதை செலெக்ட் செய்து Next தட்டுங்கள்.

3. அடுத்துவரும் விண்டோவில் personal / non commercial use என்பதை தேர்வு செய்து Next தட்டுங்கள்

4. அடுத்து ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதும் வரும் விண்டோவில் Normal Installation Deafault என்பதை தேர்வு செய்யவும்.

5. அடுத்து Full access என்பதை தேர்வு செய்து Next தட்டியதும் மென்பொருள் நிறுவப்பட்டுவிடும். 

6. நண்பரின் கணனியை அக்ஸஸ் செய்ய மேற்சொன்ன படிமுறைகளை பின்பற்றி அவர் கணனியிலும் டீம் வியூவரை நிறுவி இருக்க வேண்டும். இந்த கட்டுரையின் லிங்க்கை கொடுத்து நிறுவ சொல்லி அறுவுறுத்துங்கள்


7. டீம் வியூவரை நிறுவிய பின்னர் அதன் வலது பக்கத்தில் தானகவே இலக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேட் காட்டப்படும். நண்பரிடம் அவற்றை வாங்கி குறித்துக்கொள்ளுங்கள். மற்றும் அவரை டீம் வியூவர் மென்பொருளை திறந்து வைத்திருக்க சொல்லுங்கள்.

8. பின்னர் உங்கள் கணனியில் டீம் வியூவரை திறந்து அதில் வல்ப்பக்கதில் remote access என்பதை தேர்வு செய்து Id என்ற இடத்தில் நண்பரிடம் வாங்கிய Id ஐ கொடுத்து Connect ஐ தட்டுங்கள். கனெக்சன் செட் செய்யப்பட்டு சற்று நேரத்தில் பாஸ்வேட் கேட்கப்படும் அதில் பாஸ்வேட்டை கொடுத்ததும். இணைய வேகத்தை பொறுத்து சற்று நேரத்தில் நண்பரின் கணனியின் டெஸ்க்டாப் அப்படியே உங்கள் கணனியில் வந்திவிடும்.


9. நீங்கள் பயன்படுத்தி முடிக்கும் வரைக்கும் நண்பரை அமைதியாக மவுஸை தொடாமல் இருக்க சொல்லுங்கள் ஏனெனில் இருவரும் ஒரே நேரத்தில் ஒரு கணனியை பயன்படுத்த முடியாது.

இதன் மூலம் இலகுவாக இன்னுமொரு கணனியின் பிரச்சனைகளை சரி செய்து விடலாம்




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF