இறைவனின் கோடிக்கணக்கான அத்தாட்சிகளில் கல்லுக்குள் வாழும் தேரை இனமும் ஓன்று. கல்லுக்குள் உணவு வைத்து அதை பல காலம் வாழும் படி படைத்துள்ளான் இறைவன். ஆப்பிரிக்காவில் பாலைவனம் சேர்ந்த காடுகளில் பயணிக்கும் நாடோடிகள் பூமிக்கு அடியில் இருக்கும் தேரைகளை கண்டுபிடித்து அதன் வயிற்றில் இருக்கு தண்ணீரை அருந்தும் வழக்கம் உண்டு. ஒரு மனிதனின் தாகத்தை தணிக்கும் அளவிற்கு தண்ணீர் வயிற்றில் இருக்கும் தேரைகளும் உண்டு. தேரை இனத்தின் பெண் தேரைகள் முட்டையிட்டு சென்று விடும், ஆண் தேரைகள் தான் அந்த முட்டை பொறியும் வரை காத்திருந்து அடைகாக்கும். இது தவளை இனம் போல தாவி செல்லாது, மாறாக காலை இழுத்து தவழ்ந்து செல்லும். இவற்றின் தோல் நீரை தேக்கிக்கொள்ளும்விதமாக தடித்துக் காணப்படும். மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன.
இத்தனை தனித்துவம் கொண்ட தேரைகளுக்கு இறைவனை அளித்துள்ள இன்னொரு மகத்துவம் நிலநடுக்கங்களை முன் கூட்டியே அறியும் ஆற்றல் உடையதாக இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டன் திறந்தவெளி பலகலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தேரைகளின் இனவிருத்தியை இத்தாலியில் உள்ள ஒரு ஏரியில் ஆராய்ந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஏரிகளில் இருந்த தேரைகள் எல்லாம் திடிரென்று வேறு இடம் நகர்ந்து செல்ல தொடங்கி விட்டன. அவை அந்த ஏரியை விட்டு வேறு இடத்திருக்கு இடமாற்றம் செய்த ஐந்து நாட்கள் கழித்து அங்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து ஒரு வருடம் தேரைகளின் உடற்கூறுகளை நன்கு சோதித்து, பூகம்பம் வரும் முன் நிலத்தில் இருந்து வெளியேறும் வாயுவினை தேரைகள் அறியும் ஆற்றல் உடையதாக கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.
பூகம்பம் வருவதற்கு முன்பே விலங்கினங்கள் அதை அறியும் ஆற்றல் உண்டு என்று பரவலாக தெரிந்திருப்பினும் அதை முதன் முதலில் அதாரப்பூர்வமாக ஆவணம் செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF