Sunday, October 31, 2010

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்


இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பூமி முழுவதும் வெப்ப வேறுபாடு காணப்படுவதற்கான காரணங்கள் யாவை?


பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!
வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது! அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது! வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது! அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.
3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது. ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனி மதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்!

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, October 30, 2010

ரஷ்யாவில் இரு எரிமலைகள் வெடிப்பு : 33,000 அடி உயரத்தில் புகைமூட்டம்

ரஷ்யாவின் கிழக்கிலுள்ள கம்சட்கா குடாவில் உள்ள இரண்டு எரிமலைகள் நேற்று வெடித்துச் சிதறின.
எரிமலைகள் கக்கிய புகை மற்றும் சாம்பல் காரணமாக பல விமானங்களை மாற்று வழியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
மேலும் அண்மையில் இருந்த நகரம் ஒன்று முற்றுமுழுதாக சாம்பலினால் மூடப்பட்டது.
இப்புகைமண்டலமானது சுமார் 33,000 அடி உயரத்திற்கு மேல் எழும்பியுள்ளதாகவும் பசுபிக் சமுத்திரத்தின் மேலாக பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாம்பல் காரணமாக அண்மையில் உள்ள பாடசாலைகள் மற்றும் சிறுவர் பள்ளிகள் ஆகியன மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அங்குள்ள கட்டடங்கள் வெள்ளை நிறமாக மாறியுள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் கதவு மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடியவண்ணம் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இந்தோனேஷிய சுனாமியால் 2 நாளாக மரத்தில் தொங்கி தவித்த 1 1/2 வயது குழந்தை உயிருடன் மீட்பு

இந்தோனேசியாவில் உள்ள மெந்தாவி தீவில் கடந்த திங்கட்கிழமை பூகம்பம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் அந்த தீவில் உள்ள ஏராளமான கிராமங்கள் அழிந்தன. ராட்சத அலைகளில் சிக்கி ஏராளமானோர் உயிர் இழந்தனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 300 பேரை காணவில்லை. அவர்களில் 3-ல் 2 பங்கினர் பலியாகி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக மீட்பு படை அதிகாரி ஏத்எட்வர்டு கூறினார்.
சுனாமி பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இப்போதும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.1 1/2 வயது குழந்தை ஒன்று சுனாமி அலையால் தூக்கி வீசப்பட்டு 2 நாளாக மரத்தின் உச்சியில் கிடந்தது. உயிருடன் இருந்த அந்த குழந்தை மரக்கிளைகளை பிடித்தபடி அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதேபோல 10 வயது சிறுவன் ஒருவனும் மரக்கிளைகளை பிடித்தபடி கிடந்தான். அவனையும் மீட்டனர். ஆனால் அவனது தாய் -தந்தை இருவருமே சுனாமிக்கு பலியாகி விட்டனர். சுனாமியில் சிக்கியவர்கள் சிலரின் உடல்கள் கால் வேறு, கை வேறாக சிதறின. அவை ஆங்காங்கே மரத்தில் தொங்கியபடி இருந்தது. பல உடல்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. அதை தோண்டி எடுத்து வருகின்றனர்.
சுனாமியில் வடக்கு பெகாய் என்ற இடம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த ஊரை சேர்ந்த சந்திரா என்ற பெண் கூறும்போது, பூகம்பம் ஏற்பட்டதும் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம். அடுத்த 10 நிமிடத்துக்கு பிறகு வீட்டுக்கு வெளியே பெரிய அளவில் வெடிச்சத்தம் போல கேட்டது. அடுத்த வினாடிகளில் சுனாமி தாக்கியது என்றார். மீட்கப்பட்ட இறந்தவர்களின் உடல்கள் கூட்டம், கூட்டமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சதேகங் என்ற இடத்தில் 98 பேர் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பல் மெந்தாவியை சென்றடைந்துள்ளது. அங்கிருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுனாமியில் 468 வீடுகள் முற்றிலும் இடிந்து விட்டன. அவர்களுக்கு தற்காலிக கூடாரம் அமைத்து கொடுத்துள்ளனர்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சூரியனை போல இருமடங்கு பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு


சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் (மின் இயக்கமற்ற) நட்சத்திரம் வான்வெளி கோளப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் தேசிய கதிரியக்க வான்கோள்கள் கண்காணிப்பு துறையின் விஞ்ஞானி பால் டெமோரெஸ்ட் கூறியதாவது:
சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. உயர் அடர்த்தி மற்றும் அணு இயற்பியல் தொடர்பான எங்களுடைய பல்வேறு விதிகளுக்கு பல்வேறு அர்த்தங்களை இந்த நட்சத்திர கண்டுபிடிப்பு அளித்துள்ளது. அணுக் கருவை விட, நியூட்ரான் நட்சத்திரம் பல மடங்கு அடர்த்தியானது.
இந்த நட்சத்திரத் தின் மூலப்பொருள் மட்டும் 5000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும். இது விண்வெளிக் கோளத்தில் சுற்றி வரும்போது இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் விண்வெளியில் படும். இந்த கண்டுபிடிப்பு நியூட்ரான் நட்சத்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, October 29, 2010

சிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம்.


சிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம். 2030 இற்குள் அந்த சிவப்புக் கிரகத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம் தொடங்கப்பட்டுவிடும். அங்கு செல்லப்போகும் குடியேற்றவாசிகள் எப்போதுமே பூமிக்கு திரும்பிவரவே மாட்டார்கள்.
அன்று பூமியில் கண்டங்களை நாடுகளைத் தேடித் தேடி அவற்றை மனித சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் மனிதன். கொலம்பஸ் (Columbus) கால்வைத்த பின்னர்தான் அமெரிக்காவும், அமுன்ட்ஸென் (Roald Amundsen) சென்றடைந்த எல்லைதான் தென் துருவ முனையாகவும், போபிஸெர் (Frobisher) இனால் Northwest Passage இன்னூடாக கரைதட்டிய தீவுகள்தான் கனடாவின் மேலுள்ள குட்டிக் குட்டித் தீவுகளாகவும் இந்த உலகிற்கு அறிமுகமாயின. அவர்களின் அசாத்திய துணிச்சல்தான் மனிதனிடத்தில் புதுப்புது தேசங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களைப் போல அசாத்திய துணிச்சலும் தியாகமும் நிறைந்த நான்கு விண்வெளி வீரர்களை செவ்வாயில் தரையிறக்கி அங்கே மனிதக் குடியேற்றத்தின் முதலாவது படியினை அடையப் போகின்றது நாசா. அவர்களுக்கு பூமியில் இருந்து உணவு போன்ற அத்தியவசியமான தேவைகள் சிறிது காலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனாலும் அவர்கள் செவ்வாயில் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தவரை முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு மனிதக் குடிறேற்றம் அங்கு நடைபெறத் தொடங்கும்.
Hundred Year Starship என்றும் இந்த ஒருவழிப் பயணத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட $10 பில்லியன் அமெரிக்கன் டொலருக்கு மேல் செலவாகும். இதனால்த்தான் இந்தப் பணயம் ஒருவழிப்பயணமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இறுதியாக 2007 ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்தினை நோக்கி ஏவப்பட்ட நாசாவின் Phoenix lander 2008 இல் செவ்வாயின் வட துருவத்தில் தரையிறங்கியிருந்தது. செவ்வாயின் ஒழுக்கிற்கும் பூமி்யின் ஒழுக்கிற்கும் இடைப்பட்ட தூரம் 34 மில்லியனில் இருந்து 250 மில்லியன் மைல்களுக்கு இடைப்பட்டாக இருக்கின்றது. இதனால் விண்வெளி விமானங்களின் பயண நேரம் மாதக்கணக்காக நீள்கின்றது. இதன் காரணமாக இந்த குடியேற்றத்திட்டத்திற்கு அணுக் கருச் சக்கியினை எரிபொருளாகப் பயன்படுத்தி பயணக் காலத்தினை நான்கு மாதங்களாக குறைக்கத் திட்டமிடப்படுகின்றது.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் சிவப்புக் கிரகமே பூமியினை ஒத்த உயிர் வாழ்க்கைக்கு தேவையான காரணிகளை கொண்டிருக்கின்றது. அங்கு துருவப் பிரதேசங்களில் உறைநிலையில் காணப்படும் பனிகட்டிகள் உயிரின வாழ்க்கைக்கு ஏதுவாக இருக்கும். மேலும் செவ்வாயில் நிலவும் காலநிலையும் பூமியில் நிலவும் காலநிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதா இருக்கின்றது. ஆனால் செவ்வாயில் வளி மண்டலத்தில் உள்ள காபனீர்ரொட்சைட்டின் செறிவு மிக அதிகம். எனவே அங்கு செல்லும் மனிதர்களுக்கு ஒட்சியன் கவசங்கள் இன்றியமையாததாகும்.
மனிதனின் காலடி இதுவரை பதியாத தடங்களை நோக்கிய இத்தகைய மனிதனின் பயணங்கள், புதுப் புதுக் கிரகங்களுக்கு மனிதனை ஏற்றுமதி செய்யும் திறனை வழங்கப் போகின்றது. இவ்வாறு செல்பவர்கள் அங்கே தமது காலணிகளை உருவாக்கி தாமாக வாழத் தொடங்கி விடுவார்கள். அங்கே மனித இராட்சியம் நிறுவப்படும். சொல்லப் போனால் பூமியில் கருவுற்ற மனிதன் தன் சிறகுகளை மெல்ல விரித்து பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கப் போகின்றான். இது இயற்கையின் சமநிலையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றதோ தெரியாது. நாடுகளுக்கு இடையிலே நடைபெறும் எல்லைப் போர்களும் இனங்களுக்கு இடையே நடைபெறும் உரிமைப் போரும் இனிமேல் கிரகங்களுக்கு இடையே நடைபெறக்கூடும். அதைவிடவும் கொலம்பஸினால் வட அமரிக்காவின் செவ்விந்தியருக்கும், ஸ்பெயினில் இருந்து நாடுகள் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்களால் மாயன்ஸ், இன்காஸ் இற்கும், ஐரோப்பியக் கைதிகளால் அவுஸ்ரேலிய பழங்குடியினருக்கும் நடந்த சோகமான இரத்தத்தால் எழுதிய சரித்திரங்கள் இனிமேல் மனிதன் என்றும் இந்த விலங்கினத்தால் வேற்றுக் கிரகங்களின் சுதேச வாசிகளுக்கும் நிட்சயமாக நடக்கப் போகின்றது. அதற்கான முதற் படிதான் இந்த செவ்வாய் நோக்கிய மனிதனின் நுாற்றாண்டு நட்சத்திரப் படகுத் திட்டமாகும்.

சிம்பன்சிஸ் (Chimpanzees), கொரில்லா (Gorillas), கியூமன்(humans), ஒராங்குற்றான்ஸ் (Orangutans) என்பவற்றிற்கு மூலக்குடும்பமாக இருக்கும் Hominidae இனில் தொடங்கி ஆபிரிக்கக் காடுகளில் ஆரம்பித்த Homo Ergaster இன் பணயங்கள் இன்று Homo Sapiens Sapiens(modern humans) என்னும் இன்றைய கூர்ப்பு விலங்காகி நாளை விண்ணில் வசிக்கப் போகின்றான். ஒருவேளை இந்த Homo Sapiens Sapiens செல்லும் கிரகங்களில் இவனை விட வலுவான கூர்ப்பினம் இருக்குமானால்.. அது Homo Sapiens Sapien தன் முடிவினை தானே தேடிச் செல்வதாய் இருக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்


கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.
* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையில்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.
* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.
* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…
* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.
* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)
* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.
* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.
இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சீனாவின் அதிவேக சுப்பர் கணினி: வேகம் 2.507 பீடாபுலொப்ஸ்


உலகின் அதி வேக சுப்பர் கணினியை (Super Computer) கொண்ட நாடு என்ற பெருமையை சீனா நேற்று பெற்றுக்கொண்டது.

டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படும் கணினியே அது. இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும். 

இது மற்றைய சுப்பர் கணினிகளைவிட 43 வீதம் வேகம் கூடியது. 

இக்கணினியானது சீன தேசிய பாதுகாப்புத் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினாலேயே (National University of Defence Technology (NUDT) உருவாக்கப்பட்டுள்ளது. 

இதற்கான மொத்த செலவு 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சுமார் 200 பொறியியலாளர்களால் 2 வருட கடும் உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இது இயங்குவதற்கு மொத்தமாக 4.04 மெகாவோற்ஸ் மின்சாரம் தேவைப்படுகின்றது. 

இக்கணினி, 14,336 இண்டெல் ஸியோன் சிபியுக்கள் ( CPU ) மற்றும் 7,168 Nvidia Tesla M2050 ஜி.பி.யுக்களையும்( GPU - Graphics processing unit) கொண்டுள்ளது. 

முதன் முறையாக 2009 ஆம் ஆண்டு இக்கணினி உருவாக்கப்பட்டது. அதன்போது இது உலகின் 5 ஆவது வேக கணினி என்ற பெருமையை மட்டுமே கொண்டிருந்தது. 

ஆனால் தற்போது இது நன்கு மேம்படுத்தப்பட்டதையடுத்து உலகின் 'அதிவேக கணினி' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 

இதுவரை அமெரிக்காவின் கிரேஸி எக்ஸ்.டி5 ஜகுவார் Cray XT5 Jaguar, உலகின் அதிவேக சுப்பர் கணினியாக இருந்து வந்தது. இது 224,162 ஒப்டெரொன் (Opteron CPUs) சிபியுக்களைக்கொண்டது. இதன் வேகம் 1.75 பீடாபுலொப்ஸ் (Petaflops) ஆகும். 

எனினும் சீனா அதனை டியானி ( Tianhe ) - 1 A மூலம் முறியடித்துள்ளது.







பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகிலேயே அதிகவிலை கொண்ட நவீன கார் அறிமுகம்



இந்தியாவில் ரூ.16 கோடி மதிப்புள்ள நவீன ரக சொகுசு கார் அறிமுகப்படுத்தப்படுகிறது. உலகிலேயே அதிக விலை கொண்ட இந்த காரின் பெயர் 'புகட்டி வேரோன்' என்பதாகும்.

மணிக்கு 407 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற, கார்கள் ஏற்கனவே இங்கு புழக்கத்தில் உள்ளன. அந்த வரிசையில் அவற்றை விட அதிகவிலை கொண்ட புகட்டி வேரோன் காரும் சந்தையில் அறிமுகமாகிறது.

இது பற்றி ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவுக்கான இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் கய் காக்வெலின் குறிப்பிடும் போது, "புகட்டி வேரோன் கார் வடிவமைப்பின் உச்சமான தாகும். இதன் முன்னோட்ட விற்பனையாக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையில்தான் விற்பனைக்கு தருகிறோம்." என்றார் காய் காக்வெலின். 

உலகின் மிகக் குறைந்த விலையான ரூ 1 லட்சம் மதிப்பு கொண்ட நானோ கார் முதல், உலகின் அதிக விலையான ரூ 16 கோடி விலை கொண்ட புகட்டி வேரோன் வரை விதவிதமான கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது பெருமைக்குறியதாகும்.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, October 28, 2010

(Playstation Phone)பிளேஸ்டேசன் போன் ' - சொனியின் இரகசிய தயாரிப்பு




பிரபல இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான சொனி பிளேஸ்டேசன் போன் (Playstation Phone) எனும் நவீன கையடக்கத்தொலைபேசியினை தயாரித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. 

பி.எஸ்.பி (PSP- PlayStation Portable) என்பது சொனி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கையடக்க கேமிங் ( Gaming ) சாதனமாகும். 

இதைப்போன்ற கேமிங் அனுபவத்தினை தரக்கூடியதும் கேமிங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதுமான கையடக்கத் தொலைபேசியினை சொனி இரகசியமாக தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன் நவீன கையடக்கத்தொலைபேசியின் பண்பையும் இது கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சொனி மற்றும் எரிக்ஸன் நிறுவனங்களின் ' சொனிஎரிக்சன்' தயாரிப்பாகவே இது வெளியாகவுள்ளது.

இது கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை (Android OS) கொண்டு இயங்கவுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள் 

1) 1GHz Qualcomm MSM8655 processor 
2) 512MB RAM, 
3) 1GB ROM, 
4) 3.7 to 4.1 inches tough screen 

மேலும் கேம் விளையாடுவதற்கு ஏதுவான கீபேட்களும் இணைக்கப்படவுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. 

இவ்வுபகரணமானது 2011 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, October 27, 2010

காகங்களுக்கே அதிக மூளை: புதிய கண்டுபிடிப்பு


காகங்களுக்கு அதிக மூளை இருப்பதாகவும், அவை மனிதர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையது என்றும் பாரம்பரியமாக  நம்பி வந்தனர்.
சமீபகாலமாக விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.

பொதுவாக இவ் உலகில் மனிதரைத் தவிர வேறு உயிரினங்கள் கருவிகளைப் பாவிப்பதே இல்லை. சில மிருகங்கள் தனது உணவை பிளக்க கல்பாறைகளைப் பயன்படுத்தினாலும், அவை கருவிகளைப் பயன்படுத்துவது இல்லை. அப்படி இருக்கையில் காகம் மட்டும் தனக்கு உதவும் வகையில் கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள், மரக் கட்டை ஒன்றினுள் ஓட்டைகளைப் போட்டு அதனுள் வசிக்கும் சிலவகை புழுக்களை காகங்களால் அவ்வளவு எளிதில் கொத்தித் தின்ன முடியாது. ஏன் எனில் காகங்களின் அலகுகள்(சொண்டு) மிகச் சிறியவை.

எனவே அவ்வாறு ஆழத்தில் இருக்கும் பூச்சிகளை சிறிய சுள்ளித் தடிகளைக் கொண்டு குத்தி வெளியே எடுத்து காகங்கள் உண்ணுகின்றன. இக் காட்சிகள் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. மற்றும் சில வகைப் புழுக்களில் கொடுக்கு காணப்படுவதால் அவை கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே காகம் சில வகைப் புழுக்களை சுள்ளித்தடியால் குத்தி எடுக்கிறது, கொடுக்குகள் உள்ள புழுக்களை இவை கையாளும் விதமே அலாதியானது. அவ்வகையான புழுக்களை காகங்கள் தடியால் குத்தி வெளியே எடுப்பது இல்லை, மாறாக தடியை அதன் கொடுக்குகளுக்கு இடையே நீட்ட, புழுக்களும் தடியை தனது எதிரி என நினைத்து கடிக்கிறது. அவ்வாறு கடிக்கும் நேரத்தில் கொடுக்குகள் தடியை இறுகப் பிடிக்கும், அப்போது காகம் லாவகமாக அவற்றை வெளியே எடுத்துவிடுகிறது.

பறவை இனங்களில் காகத்திற்கு மூளை அதிகம் என விஞ்ஞானிகள் தற்போது கூறி வருவதையே நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவந்தனர் என்பதே உண்மையாகும். சில காகங்கள் தமக்கு பிடித்த சுள்ளித் தடிகளை தம்மோடே வைத்திருப்பதாகவும், அவை பறந்து வேறு இடங்களுக்குச் சென்றால் கூட ஒரு கருவியாக அதைப் பயன்படுத்த அச் சுள்ளித் தடியை தன்னோடு கொண்டு செல்வதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

(mozilla firefox)மொஷீலாவிடமிருந்து $3000 ஐ பரிசாக பெற்ற சிறுவன்


மொஷில்லா ப்ரவுசரில் காணப்படும் குறைபாடுகளை கண்டுபிடித்து சொல்பவருக்கு $3000 பரிசினை வழங்கவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் மொஷில்லா அறிவித்திருந்தது.
Alex Miller எனும் 12 வயது சிறுவனுக்கே அந்த 3000 டொலர் பரிசு போய்ச் சேர்ந்துள்ளது. மொஷில்லா பாவனையின் போது அதன் மெமரி கையாள்கையில் காணப்பட்ட குறைபாட்டினைச் சுட்டிக் காட்டியதன் மூலம் இந்தச் சிறுவனுக்கு இந்தப் பரிசுத்தொகை கிடைத்தது.
Alex Miller தற்போது அமெரிக்காவில் தரம் 7 ல் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறான். Alex Miller ஒரு நாளைக்கு சராசரியாக 90 நிமிடங்கள் கணணியை பாவிப்பார். அந்த 90 நிமிட பாவனையின் போது கண்ட குறைபாடு உலக மொஷில்லா பாவனையாளருக்கே உதவி செய்யப் போகின்றது. இவ்வாறான சிறுவர்கள் தான் நாட்டின் எதிர்காலம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இந்தோனேசியாவில் குமுறும் எரிமலை



இந்தோனேசியாவில் உள்ள "மெரபி' எரிமலை எந்நேரமும் வெடிக்கும் நிலையில் இருப்பதால், அம்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில், இரண்டாயிரத்து 914 மீ., உயரம் கொண்ட "மெரபி' எரிமலை உள்ளது. "மெரபி' என்பதற்கு இந்தோனேசிய மொழியில், "நெருப்பின் சிகரம்' என்று பொருள். ஜாவாவின் முக்கிய நகரமான யோக்யகர்த்தாவில் இருந்து 26 கி.மீ., தொலைவில் இந்த எரிமலை உள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள 69 எரிமலைகளில் இதுவும் ஒன்று.கடந்த 1930ல் இது வெடித்த போது, ஆயிரத்து 300 பேரும், 1994ல் 60 பேரும், 2006ல் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக இதிலிருந்து புகை வெளிவரத் துவங்கியது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், எரிமலையைச் சுற்றி 500 முறை நிலநடுக் கங்கள் ஏற்பட்டுள்ளன. எந்நேரமும் இந்த எரிமலை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மலையைச் சுற்றியுள்ள 10 கி.மீ., தூரம் ஆபத்தான பகுதியாக இந்தோனேசிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் 19 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மூன்றாயிரம் பேர், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சுமாத்ரா பூகம்பத்தில் 40பேர் பலி மேலும் 380 பேரைக் காணவில்லை



இந்தோனேஷியாவின் சுமாத்ரா பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் இதுவரை 40 பேர் மரணமடைந்துள்ளதாகவும்,மேலும் 380 பேரைக் காணவில்லை என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
7.7றிச்டர் அளவு கொண்ட இந்த பூகம்பம் சுமாத்ரா கரையோரப் பகுதியைத் தாக்கியது.
கடலுக்கு அடியில் 20.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் மூலம் ஆறு மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும் அறிவிக்கப்படடுள்ளது. ஆரம்பத்தில் பாரிய சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. எவ்வாறாயினும் சுமார் 200 பேர் மட்டில் வாழ்ந்த சிறிய கரையோரக் கிராமம் ஒன்று முற்றாக கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இங்கிருந்து 40 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. உயிர் இழப்புக்கள் பற்றிய ஊர்ஜிதம் செய்யப்பட்ட சரியான தகவல்களை இன்னும் பெறமுடியாதுள்ளது.பலர் காணாமல் போயுள்ளதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் இன்னமும் கடும் சீற்றம் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட பல தீவுனக் கிராமங்களை மீட்புப்படையினரால் இன்னும் சென்றடையமுடியாதுள்ளது.
பூகம்பமும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டபோது தீவுகளைச் சுற்றி படகுகளில் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த பல படகுகளும் அவற்றில் இருந்த பலரும் காணாமல் போனவர்களுள் அடங்குவர். இத்தகைய ஒரு படகில் மட்டும் சுமார் 100 பேர் இருந்ததாக அந்தப் படகுப் பயணத்தை ஒழுங்கு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, October 26, 2010

நண்பரின் கணனியை உங்களின் கணனியில் இருந்தே பழுது பார்க்க டீம் வியூவர்


நீங்கள் ஒரு கணனி வல்லுநர். அதிக தூரத்திலுள்ள உங்கள் நண்பரின் கணனியில் தீடிரென பழுது ஏற்படுகிறது. அவர் உங்களிடம் உதவி கேட்கிறார். ஆனால் அவரின் டெஸ்க்டாப் ஐ அக்சஸ் செய்தால் மட்டுமே அவர் கண்னியில் என்ன பிரச்சனை என்பதை சரியாக கண்டறிய முடியும் என்ற நிலை. 

நேரில் சென்று பார்க்க முடியாது ஆனால் அவரின் கணனியிலும் உங்களிடமும் இணைய இணைப்புண்டு. இதன் மூலம் உங்களின் கணனியில் இருந்தே அவரின் டெஸ்க்டாப் ஐ பார்வையிட ஏதும் வழி உண்டா? 

அந்த வசதி டீம் வியூவர் எனும் இலவச மென்பொருளால் கிடைக்கிறது. இந்த மென்பொருளை பயன்படுத்த கீழ்வரும் முறைகளை கையாளுங்கள்.

1. http://www.teamviewer.com/download/எனற முகவரிக்கு சென்று டீம் வியூவரை டவுண்லோட் செய்யவும்

2. செட்டப் பைலை திறந்ததும் இன்ஸ்டோல் அல்லது ரன் என இரண்டு ஆப்ஸன்கள் காட்டப்படும் இதில் இன்ஸ்டோல் என்பதை செலெக்ட் செய்து Next தட்டுங்கள்.

3. அடுத்துவரும் விண்டோவில் personal / non commercial use என்பதை தேர்வு செய்து Next தட்டுங்கள்

4. அடுத்து ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதும் வரும் விண்டோவில் Normal Installation Deafault என்பதை தேர்வு செய்யவும்.

5. அடுத்து Full access என்பதை தேர்வு செய்து Next தட்டியதும் மென்பொருள் நிறுவப்பட்டுவிடும். 

6. நண்பரின் கணனியை அக்ஸஸ் செய்ய மேற்சொன்ன படிமுறைகளை பின்பற்றி அவர் கணனியிலும் டீம் வியூவரை நிறுவி இருக்க வேண்டும். இந்த கட்டுரையின் லிங்க்கை கொடுத்து நிறுவ சொல்லி அறுவுறுத்துங்கள்


7. டீம் வியூவரை நிறுவிய பின்னர் அதன் வலது பக்கத்தில் தானகவே இலக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேட் காட்டப்படும். நண்பரிடம் அவற்றை வாங்கி குறித்துக்கொள்ளுங்கள். மற்றும் அவரை டீம் வியூவர் மென்பொருளை திறந்து வைத்திருக்க சொல்லுங்கள்.

8. பின்னர் உங்கள் கணனியில் டீம் வியூவரை திறந்து அதில் வல்ப்பக்கதில் remote access என்பதை தேர்வு செய்து Id என்ற இடத்தில் நண்பரிடம் வாங்கிய Id ஐ கொடுத்து Connect ஐ தட்டுங்கள். கனெக்சன் செட் செய்யப்பட்டு சற்று நேரத்தில் பாஸ்வேட் கேட்கப்படும் அதில் பாஸ்வேட்டை கொடுத்ததும். இணைய வேகத்தை பொறுத்து சற்று நேரத்தில் நண்பரின் கணனியின் டெஸ்க்டாப் அப்படியே உங்கள் கணனியில் வந்திவிடும்.


9. நீங்கள் பயன்படுத்தி முடிக்கும் வரைக்கும் நண்பரை அமைதியாக மவுஸை தொடாமல் இருக்க சொல்லுங்கள் ஏனெனில் இருவரும் ஒரே நேரத்தில் ஒரு கணனியை பயன்படுத்த முடியாது.

இதன் மூலம் இலகுவாக இன்னுமொரு கணனியின் பிரச்சனைகளை சரி செய்து விடலாம்




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோஸ் இயங்குதளத்தில் தொல்லை தரும் மென்பொருட்களை நீக்குவதற்கான ஒரு சிறந்த டூல்.

Revo Uninstaller screenshot

கணனியில் தினமும் புதியவை பற்றி அறியும் ஆர்வோம் உள்ளவர்கள் பலவகையான மென்பொருட்களையும் இன்ஸ்டோல் செய்து பயன்படுத்த முயற்சிப்பார்கள். சில மென்பொருட்கள் இலகுவாக இண்டோல் ஆகிவிடும் ஆனால் அவற்றை தேவையற்ற நேரத்தில் நீக்கிவிட முயற்சிக்கும் போது போகமாட்டேன் என அடம்பிடிக்கலாம்.
விண்டோஸ் கணனிகளில் ஏற்கனவே இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜரும் தன்னால் இக்குறிப்பிட்ட மென்பொருளை நீக்க முடியாதென கைவிட்டு விடலாம். இந்த தருணத்தில் மிகவும் உதவக்கூடியது Revo Uninstaller எனும் மென்பொருளாகும்.
 இதன் சிறப்புக்கள் என்ன?

1. விண்டோஸ் இல் இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜருக்கு மாற்றீடாக பயன்படக் கூடியது.

2. தேவையற்ற மென்பொருட்களை நீக்குவது மட்டுமல்ல குறிப்பிட்ட மென்பொருள் கணனியில் நிறுவியதற்கான தடயங்கள் அனைத்தையும் அழித்துவிடும். (விண்டோஸ் இல் இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜர் இதை செய்யாது)

3. குறிப்பிட்ட மென்பொருளை முழுவதுமாக அழித்தல் அல்லது Start up மற்றும் Sort cut கீகளை மட்டும் அழித்தல் போன்ற ஆப்ஸன்கள் கொண்டிருத்தல்.

4. கணனிக்கு தேவையான 8 வகையான கிளினிங் டூல் களை உள்ளடக்கி இருத்தல்

இலவச பதிப்பை டவுண்லோட் செய்ய

30 நாட்கள் Trail பதிப்பை டவுண்லோட் செய்ய


இணைப்பு
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் தேரைகள்

[giant+african.JPG]

றைவனின் கோடிக்கணக்கான அத்தாட்சிகளில் கல்லுக்குள் வாழும் தேரை இனமும் ஓன்று. கல்லுக்குள் உணவு வைத்து அதை பல காலம் வாழும் படி படைத்துள்ளான் இறைவன்.  ஆப்பிரிக்காவில் பாலைவனம் சேர்ந்த காடுகளில் பயணிக்கும் நாடோடிகள் பூமிக்கு அடியில் இருக்கும் தேரைகளை கண்டுபிடித்து அதன் வயிற்றில் இருக்கு தண்ணீரை அருந்தும் வழக்கம் உண்டு. ஒரு மனிதனின் தாகத்தை தணிக்கும் அளவிற்கு தண்ணீர் வயிற்றில் இருக்கும் தேரைகளும் உண்டு. தேரை இனத்தின் பெண் தேரைகள் முட்டையிட்டு சென்று விடும், ஆண் தேரைகள் தான் அந்த முட்டை பொறியும் வரை காத்திருந்து அடைகாக்கும். இது தவளை இனம் போல தாவி செல்லாது, மாறாக காலை இழுத்து தவழ்ந்து செல்லும். இவற்றின் தோல் நீரை தேக்கிக்கொள்ளும்விதமாக தடித்துக் காணப்படும். மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன.

இத்தனை தனித்துவம் கொண்ட தேரைகளுக்கு இறைவனை அளித்துள்ள இன்னொரு மகத்துவம் நிலநடுக்கங்களை முன் கூட்டியே அறியும் ஆற்றல் உடையதாக இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டன் திறந்தவெளி பலகலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தேரைகளின் இனவிருத்தியை இத்தாலியில் உள்ள ஒரு ஏரியில் ஆராய்ந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஏரிகளில் இருந்த தேரைகள் எல்லாம் திடிரென்று வேறு இடம் நகர்ந்து செல்ல தொடங்கி விட்டன. அவை அந்த ஏரியை விட்டு வேறு இடத்திருக்கு இடமாற்றம் செய்த ஐந்து நாட்கள் கழித்து அங்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து ஒரு வருடம் தேரைகளின் உடற்கூறுகளை நன்கு சோதித்து, பூகம்பம் வரும் முன் நிலத்தில் இருந்து வெளியேறும் வாயுவினை தேரைகள் அறியும் ஆற்றல் உடையதாக கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.

பூகம்பம் வருவதற்கு முன்பே விலங்கினங்கள் அதை அறியும் ஆற்றல் உண்டு என்று பரவலாக தெரிந்திருப்பினும் அதை முதன் முதலில் அதாரப்பூர்வமாக ஆவணம் செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நீங்கள் நினையுங்கள்; நான் அதன்படி நடக்கிறேன்


நமது எண்ணங்களைப் படித்து செயலாற்றக் காத்திருக்கிறது ஜப்பான் தயாரிக்கப்போகும் ரோபோட்கள்.

Brain - Machine Interface தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மனித மூளையின் நியுரோ அலைகளையும், அதன் இரத்த ஓட்டத்தையும் வைத்து எண்ணங்களை அளக்கும் கருவியின் மூலம் இதனை சாத்தியமாக்க முயலும் இந்த வகை ரோபோட்கள் அடுத்த பத்தாண்டுகளில் வெளிவந்து விடும் என்று நம்பபப்படுகிறது.

இது மட்டுமல்ல உங்கள் ஒரு விரல் அசைவு இல்லாமலே உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கவும் முழுவதுமாக உங்கள் சிந்தையின் மெல்லாம் கட்டமைக்கப்பட்ட குறுந்தகவல்களை (SMS) அனுப்பும் செல்போன்களும் இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வரவிருக்கின்றன என்று நிக்கி நாளிதழ் தெரிவிக்கிறது.

இது, ஜப்பான் அரசாங்கமும் ஒரு தனியார் நிறுவனமும் கூட்டாக இணையவுள்ள மிகப்பெரும் தயாரிப்புத் துறையாக வரவிருக்கிறது என்றும் அந்த நாளிதழ் தெரிவிக்கிறது. இதுமட்டுமின்றி வாகன ஓட்டி பசியாக உணரும்போது அருகே எங்கெல்லாம் உணவகங்கள் உள்ளன என்று தேடும் மென்பொருட்களும், அறையின் தட்பவெப்ப நிலை அதிகக் குளிராகவோ, சூடாகவோ இருப்பதாக அதிலுள்ள மனிதர் உணர்ந்தாலே அதற்கு தகுந்தாற்போல ஏர் கண்டிஷனரை அட்ஜஸ்ட் செய்திடும் தொழில் நுட்பமும் வர உள்ளதாக நிக்கி நாளிதழ் கட்டியம் கூறுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

(Zettaa Byte)ஜெட்டா பைட் என்றால் என்ன தெரியுமா ?


மெகா பைட், கிகா பைட், டெரா பைட் தெரியும் அது என்ன ஜெட்டா  பைட்? டிஜிடல் அலகுக்கு மிக அதிகபட்ச எண்ணிக்கையைக் குறிக்க தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் வார்த்தைதான் ஜெட்டா பைட் (Zettaa Byte).

டிஜிடல் உலகின் அதிகபட்ச்ச டிஜிடல் அலகாக இதுவரை இருந்த பெட்டா பைட்டை (peta byte) முந்திக்கொண்டு வந்துள்ளது இந்த ஜெட்டா பைட். ஒரு ஜெட்டா பைட் என்பது ஒரு மில்லியன் பெட்டா பைட் ஆகும். அல்லது 1,000,000,000,000,000,000,000 தனி பைட்டுகள் ஆகும்.

இதுவரை மனித இனத்தின் மொத்த டிஜிடல் வெளியீடு சுமார் எண்பது லட்சம் பெட்டா பைட்டுகளாக உள்ளது. (ஒரு பெட்டா பைட் என்பது ஒரு மில்லியன் கிகா பைட்டுகள்) ஆனால் இது இந்த வருடம் 1.2 ஜெட்டா  பைட்களைக் கடந்துவிடும் என்று கருதப்படுகிறது. புரியும் வகையில் சொல்லப்போனால், உலகின் தற்போதைய டிஜிட்டல் கொள்ளளவு என்பது, 75 பில்லியன் (ஒரு பில்லியன் = நூறு கோடி) ஆப்பிள் ஐ பேட்களில் சேமிக்க இயலுமான தகவல்களாகும். அல்லது ஒரு நூற்றாண்டு முழுவதும் உலகின் அனைவரும் மெசேஜ் பண்ணிக் கொண்டும் ட்விட்டரில் ட்விட்டிக்கொண்டும் இருந்தால் எத்தனை தகவல் வெளியாகுமோ அத்தனை அளவென கொள்ளலாம்.

டிஜிட்டல் தகவல் உலகின் இந்த அதிவேகப் பெருக்கத்திற்கு சமூக வெப் சைட்டுகள், ஆன்லைன் வீடியோ, டிஜிட்டல் போட்டோக்ராபி மற்றும் மொபைல் போன்கள் ஆகியவையே காரணம் என்று உலகின் டிஜிடல் வெளியீட்டினை கவனிக்கும் IDC சொல்கிறது. உலகின் எழுபது சதவிகித தகவல்கள் தனிநபர்களால் உருவாக்கப்படுபவையே என்றும் யூ டியூப், பிளிக்கர் போன்ற நிறுவனங்கள் அவற்றை சேமிக்கின்றன என்றும் இந்த IDC தொழிநுட்ப நிறுவனம் தெரிவிக்கிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, October 25, 2010

2013 ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரும் விண் புயல்


நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் 2010, மார்ச் 30 அன்று சூரியனிலிருந்து வெளிப்பட்ட பெரும் வெப்பத்தீற்றலை காட்டுகிறது.

சூரியன் தனது ஆழ்தூக்கத்திலிருந்து விழித்து வருவதாக குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், வருகிற 2013 ஆம் ஆண்டுக்குள் உலகின் தொலைதொடர்பு மற்றும் மின்சக்தி கட்டமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்யும் மிகப்பெரும் வான்வெளி புயல்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

சூரிய செயல்பாடுகளில் அதிக மற்றும் குறைந்த விசை கொண்ட ஒரு பதினொரு வருட சுழற்சி முறையில் இயங்கி வரும் நமது சூரியன் தற்போதுதான் அது ஒரு குறிப்பிடத்தகுந்த அமைதியான நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நகர்வதாக கூறுகின்றனர்.  அதில் கத்ரீனா புயலை விட இருபது மடங்கு பொருளாதார நஷ்டத்தை உருவாக்க வல்ல 100 ஹைட்ரஜன் குண்டுகளின் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆக்ரோஷமான பெரும் வெடிப்புகள் சூரியனில் ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

தீவிரமான ஒரு சூரிய (மின்காந்த) புயலில் பெரும் மின்சேமிப்பு காலங்கள், செயற்கைக்கோள் திசையறிதல், விமானப் பயணங்கள், பணப்பரிமாற்றங்கள் மற்றும் அவசர கால் ரேடியோ தொடர்புகள் கூட முழுவதுமாக பாதிக்கப்படும்.
 

2013ஆம்  ஆண்டு வாக்கில் சூரியனிலிருந்து வர இருக்கும் ஆக்ரோஷமான விசிறல்கள் மற்றும் அதன் பாதிப்புகளிளிருந்தும் பூமியை பாதுகாப்பது பற்றிய சாத்தியங்களை ஆராய வாஷிங்டனில்    சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூடி ஆலோசனை செய்தனர். இந்த விண்வெளி மாநாட்டில் விஞ்ஞானிகள், அரசுகளின் கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நாசா பல்வேறு செயற்கை கோள்களை பயன்படுத்தி வருகிறது.

தேசிய அறிவியல் மையம் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இத்தகைய பெரும் விண்வெளி நிகழ்வுகள் சமூக பொருளாதார நிலைகளின் மீது தாக்கம் ஏற்படுவதைப் பற்றிய பிரச்சனையை ஆய்வுக்கு கொண்டு வந்தது. ஆனால், இந்த சூரிய புயல் எப்போது நம்மை சமீபிக்கும்  என்று முன்பே அறிய முடிந்தால் பாதிப்புகளை பெருமளவு தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

SAFE MODE இல் செயற்கை கோள்களை இருக்க வைப்பது, மின்கலங்களை தொடர்பிலிருந்து அகற்றி வைப்பது போன்றவற்றின் மூலம் மின்தாக்குதல்களை தவிர்க்கலாம் என்று இவர்கள் யோசனை கூறுகின்றனர்.

இவற்றில் மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் - அமெரிக்க தேசிய கடல் மற்றும் வான்வெளி கழகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கழகம் நாசாவுடன் இணைந்து சேதத்தைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நமது பிரபஞ்சமே (Universe) இன்னொரு மாபெரும் பிரபஞ்சத்தின் சிறு பகுதி தான்


நாம் வாழும் இப்பிரபஞ்சம் (Universe) (சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி மற்றும் ஏனைய கோள்களையும் அடக்கிய விண்வெளி) இன்னொரு மாபெரும் பிரபஞ்சத்தின்  வான்வெளி வெற்றிடத்தில் (black holes) ஒரு சிறு பகுதியாக இருக்கலாம் என்று நிகோதம் போப்லாவ்ஷ்கி (Nikodem Poplawski) என்ற பௌதீக இயற்பியல் அராய்ச்சியாளர்வான்வெளியின் தன்மை மற்றும் நேரத்தின் ஆரம்பம்(paper about the nature of space and the origin of time) பற்றிய தனது சமீபத்திய ஆராய்சிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார், அவர் அமெரிக்காவின் இன்டியானா பல்கலை கழகத்தின் பௌதீக இயற்பியல் பிரிவு விரிவுரையாளராவார்.


புவிஈர்ப்புக் கொள்கையின் தத்துவத்தில்(theory of gravity) ஒரு சிறு மாற்றம் செய்தால் நமது பிரபஞ்சம் அதன் நேரத்திற்கான திசையையும் விசையையும் தான் தோன்றிய அவ்வெற்றிடத்தில் இருந்தே பெற்றுள்ளது தெரியவருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்
 விண்வெளி நேரத்தின்(space time) தன்மை பற்றிய தனது புதிய அனுமானத்தை தொடர்ந்தே ஒரு பெரும் பிரபஞ்சத்தின் வான்வெளி வெற்றிடமே(black holes) மற்றொரு பிரபஞ்சத்தின் தாய் அல்லது பிறப்பிடம் என்ற ரீதியிலான தனது  அணுகுமுறை உதித்ததாக அவர் கூறுகின்றார்
தற்போதுள்ள ரிலேடிவிட்டி தியரிக்கான (standard derivation of general relativity ஒன்றோடொன்று ஒப்புநோக்கு தன்மைக்கான) வரையறை ஒரு துகளின் அறைசுழர்ச்சியின் காலஅலவை நிர்ணயிக்க முடியாது ஆனால் அதே ஒப்புநோக்கும் தத்துவத்தின் வரையரையான ஐன்ஷ்டின்–கர்டன்– கிபெல்– சீமா (Einstein-Cartan-Kibble-Sciama theory of gravity) தத்துவத்தின் படி அதனை நிர்ணயிக்க முடியும் என்றும் அவர் கூறுகின்றார்.
இந்த தத்துவத்தின்படி நுண்துகளின் அறைசுழற்சியானது (momentum of spin half particles) தனக்கு எதிராக டார்சன் என்ற நுண் எதிர்விசையை உருவாகுகின்றது, இந்த டார்சன் நுண்விசை குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வை நிகழ்த்த இயலாத அளவிற்கு மிக நுண்ணியது, ஆனால் இதன் அடர்த்தி ஒரு அனுவிலுள்ள துகள்களின் அடர்த்தியை விட அதிகரிக்கும் போது இவற்றால் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியை எட்டமுடியும், இவைதான் பிரபஞ்சத்தின் அவ்வெற்றிடத்தில் ஒன்றிணைந்த ஒரு அமைப்பை அமைய விடாமல் தடுக்கின்றன என்கின்றார்.
நமது இப்பிரபஞ்சமானது பெருவெடிப்புக்குப்பின் (Big Bang)ஒரு சில வினாடிகளில் நடந்த பலதரப்பட்ட அடுக்கடுக்கான வளர்ச்சியை(rapid inflation) தொடர்ந்து உருவான மாபெரும் ஒன்றாகும், இந்த காலகட்டம் பெருவீக்க காலம் எனப்படுகின்றது எனவே நமது இப்பிரபஞ்சமானது  நாம் இப்போது காணுவது போல் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் விரிவடைந்தது என்று கூற முடியாத அளவிற்கு மாபெரும் ஒன்றாகும் என்று வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் பல்லாண்டு காலமாக நம்பி வருகின்றனர்.
பிரபஞ்சம் தோன்ற காரணமான பெருவீக்கம் இந்த டார்சன் விசையால் உருவானதே ஆகும் என்று தனது வாதத்தை சாதாரண ரிலேடிவிட்டி தியரி மூலமே தான் நிரூபிப்பதாகவும் இதற்கு உதவியாக பெருவீக்கம் சம்பந்தமான எவ்வித பெரிய அறிவியல் ஆய்வுகளும் மேற்கொள்ள தேவையில்லை என்றும் திட்டவட்டமாக கூறுகின்றார்.
இந்த ஆய்வின் தொடர்ச்சியாக வளிமண்டல வெற்றிடம் டார்சன் நுண்விசை ஒன்றிணைந்த ஒரு அமைப்பை அமைய விடாமல் தடுத்தாலும் அவ்வான்வெளி வெற்றிடத்தில்(Black hole) ஓர் மைய  இடத்தில் event horizons  மிக அடர்த்தியான  ஒரு  விசையை கட்டிஎழுப்புகின்ற, இந்த சக்திவாய்ந்த விசைதான் மாபெரும் அளவிற்கு  பிரபஞ்சத்தை விரிவடைய செய்து அதே நேரத்தில் எண்ணிலடங்க அணுத்துகள்களையும் உருவாக்குகின்றன, இதுபோன்ற பெருவிரிவுவடைவு அது ஏற்ப்படும் விண்வெளி வெற்றிட வளைவிற்கு வெளியே உள்ளவற்றால் உணர முடியாத அளவிற்கு அளவிட முடியா நேரத்தில் நடந்து முடிந்து விடுகின்றது, இக்காரணத்தால் புதிய பிரபஞ்சம் அதன் தாயின் விண்வெளி நேரத்திலிருந்து பிரிந்து தனித்து வளருகின்றது என்று வலியுறுத்துகின்றார்.
மேலும் இயற்பியல் விதிகள் காலநேரத்தை ஒத்தே அமைந்திருப்பினும் காலநேரம் ஏன் ஒரே திசையில் விரைந்து கொண்டிருக்கின்றது என்ற கேள்விக்கும் பதிலளிக்கும் விதத்தில் இவரின் ஆராய்ச்சி உள்ளது. நேரத்தின் திசையும் விசையும் தாய் பிரபஞ்சத்திலிருந்து அதன் வான்வெளி வெற்றிடத்தை நேக்கி தொடந்து செல்லும் சமனற்ற நிறையினால் அதனை தொடர்ந்து புதிய பிரபஞ்சத்தின் வெளி நேரம் நிர்ணயிக்கப்படுகின்றது, அதாவது நமது பிரபஞ்சத்தின் நேரம் அதன் தாயிடமிருந்து தருவிக்கப்பட்டுள்ளது, சேய் பிரபஞ்சம் தனது தன்மைகளை தன தாய் பிரபஞ்சத்திடம் இருந்து பெற்றுக்கொள்கிறது என்றும் ஆய்வினால் நிரூபணமான தனது சோதனை முடிவை திட்டவட்டமாக கூறுகின்றார்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF