Sunday, August 22, 2010
Wifi தொழிநுட்பம்
ஹார்டுவேர் இன்னோவேசனின் உச்சமாக யாரோ Wifi அலைகளிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்களாம். வீட்டில் சும்மா கிடக்கும் பிளாக்பெர்ரி உங்கள் வீட்டு Wifi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்ய முடியுமாம். Airnergy WiFi Harvesting Chargerஎன்கின்றார்கள். இந்த எக்ஸ்ட்ரீம் டெக்னாலஜி எந்த அளவுக்கு சாத்தியமென தெரியவில்லை. அப்படி பார்க்கபோனால், இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோமா? நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா? இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே. இப்போது புரிகின்றது மொத்தமாய் கரண்ட் போனவுடம் நமக்கு கிடைக்கும் அந்த ஆன்ம நிசப்ததின் இரகசியம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF