”ஐந்து பந்துக்களை அந்தரத்தில் வீசி ஆடும் ஆட்டத்தை போன்றது தான் நம் வாழ்க்கை என வைத்துக்கொண்டால் அதில் வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும்
உள்ளுணர்வு இவைகள்தான் அந்த ஐந்து பந்துகளும்.
இவற்றில் வேலை எனும் பந்து ரப்பராலானது. அந்த பந்தை நீங்கள் தவறியும் கீழே விட்டால் அது துள்ளி மீண்டும் உடனே உங்களிடம் வந்துவிடும் என்பதை நீங்கள் சீக்கிரத்தில் புரிந்துகொள்வீர்கள்.
ஆனால் மற்ற நான்கு பந்துகளும் - உங்கள் குடும்பம், உங்கள் உடல்நலம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உள்ளுணர்வு கண்ணாடியாலானது. கீழே தவறவிட்டால்
கீறல்விழும், உடையும், சிலசமயம் சுக்குநூறாகியும் போகும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. இதை புரிந்து கொண்டு நாம் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.”
மேலே சொல்லப்பட்ட அர்த்தமுள்ள வரிகள் சிலர் முன்னாள் கொக்கக்கோலா தலைவர் பிரையன் டைசனின் முப்பது நொடி உரையிலிருந்து எடுக்கபட்டது என்கின்றனர் இன்னும் சிலரோ அது ஜேம்ஸ் பேட்டர்சனின் ”Suzanne's Diary for Nicholas” எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்கின்றனர். எது என்னவோ உங்களுக்கும் எனக்கும் மிக அவசியமான வரிகள்.
வேலை நேரத்தில் முழு ஆற்றலோடு வேலையில் ஈடுபட்டு, பின் நேரத்துக்கு வீடு திரும்ப வேண்டும். குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் தேவையான அளவு நேரத்தை ஒதுக்குவதோடு நல்ல ஓய்வும் நாம் எடுக்க வேண்டும்.
மதிப்பிற்கும் மதிப்பிருக்கும், மதிப்பு மதிக்கப்படும் போது மட்டும் தானே.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF