Thursday, August 12, 2010

வயர் இல்லா மின்சாரம் !

வயர் இணைப்பு இல்லாமலே இனி மின்சாரத்தை கடத்த முடியும் .
மின்சாரம் , அத்தியாவசிய தேவையான தண்ணீரைவிட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது . மின்சாரத்தைக் கடத்த தாமிர வயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது .குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வயர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும் . சில வேளைகளில் வயர்கள் சேதம் அடைந்தால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது . இந்த இரு பிரச்னைகளும் இல்லாமல் , வயர் இல்லாமல் மின்சாரத்தை கடத்த முடியும் என்று தற்போது தெரியவந்துள்ளது .
இந்த முறையில் , வயர்களுக்குப் பதிலாக ரேடியோ அலைகள் மூலம் மின்சாரம் கடத்தப்படுகிறது . விளக்குகளை ஆன் , ஆப் செய்யவும் சுவிட்சுகள் தேவையில்லை . ரிமோட் கண்ட்ரோல் போதும் . இதனால் வீட்டில் எந்த இடத்தில் இருந்தும் எந்த அறையில் உள்ள விளக்கையும் இயக்க முடியும் . 300 அடி தூரத்திற்குள்ளாக விளக்கை இயக்கும் வகையில் ரிமோட் தாயாரிக்கப்பட்டுள்ளது .
வயர் இல்லாத இந்த லைட்டிங் சிஸ்டத்திற்கு ' வெர்வ் ' என்று பெயரிட்டுள்ளார் இதைக் கண்டுபிடித்த ஜான் . பி. கார்னெட் .
இவர் ஒரு அமெரிக்க விஞ்ஞானப் பத்திரிகையாலர் ஆவார் .
ஜான் தனது திட்டம் குறித்து கூறுகையில் , " சிறிய அளவிலான வீடாக இருந்தாலும் பல மீட்டர் அளவுக்கு வயர்கள் தேவைப்படும் . மேலும் இதற்காக வயர்ங் செய்து சுவரை துளையிடுவது , சுவிட்ச் பெட்டிகள் அமைப்பது என கணிசமான அளவில் செலவாகும் . குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை பராமரிப்பு செலவு செய்யவேண்டி இருக்கும் .இதற்கெல்லாம் விடை தருகிறது எனது வெர்வ் சிஸ்டம் , கண்ட்ரோலர் மூலம் இயக்க முடியும் . இதுவே பியூஸ் பாக்சாகவும் செயல்படும் . சுற்றுச் சூழலுக்கும் உகந்தது " என்றார் . பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF