Thursday, August 26, 2010

விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள் : விஞ்ஞானிகள் தகவல்.!!

ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.
அவற்றை ஆக்சிஜன் இல்லாத விண்வெளிக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பாக்டீரியாக்கள், 553 நாட்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அல்ட்ரா லைட்கள், காஸ்மிக் கதிர்கள் ஒளிவீச்சில் விண்வெளியில் உள்ள தட்ப வெப்பநிலையில் உயிர் வாழும் தன்மை உடையது என்றும் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வு கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் பாக்டீரியாக்கள் விண்வெளி வீரர்களின் உபயோகத்துக்கு பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF