Monday, August 9, 2010

பில்கேட்ஸ்ஸின் திட்டத்தினை எதிர்க்கும் கார்லோஸ் ஸ்லிம்

அமெரிக்காவைச் சேர்ந்த 40 பணக்காரர்கள் தங்களது சொத்தில் குறைந்தபட்சம் பாதியையாவது நலத்திட்டப்பணிகளுக்கு தானமாக வழங்கவுள்ளதாக கடந்த புதன் கிழமை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம் இத் திட்டத்திற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தானமாக வழங்கப்படும் இந்நிதி சரியாக நலத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யமுடியாதெனவும் தெரிவித்தார்.
எனினும் மெக்ஸிக்கோவில் கார்லோஸ்ஸ்லிம் பல்வேறு நலத்திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் பணகாரப்பட்டியலில் முறையே 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களில் உள்ள பில்கேட்ஸ் மற்றும் வோரன் புபட் என்பது குறிப்பிடத்தக்கது .
இத்திட்டத்திற்கு இணங்கிய 40 நபர்களில் ஒராக்கில் நிறுவனத்தின் லேரி எலிசன்,மைக்கல் புளூம் பேர்க், பட தயாரிப்பாளர் ஜோர் லூகான் மற்றும் சி.என் என் நிறுவனத்தின் டேட் டோனர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF